அதிர்ச்சி பார்ட்டி

 

அதிர்ச்சி பார்ட்டி
இந்தியாவில் வெறும் இரண்டே நாட்களில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் ஒரு அரசியல் நையாண்டி (Satirical) இயக்கம் தான் இந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’. 

இது ஒரு உண்மையான அரசியல் கட்சி அல்ல என்றாலும், இன்ஸ்டாகிராமில் ஆளுங்கட்சியான பாஜாக-வை (BJP) விட அதிக ஃபாலோயர்களைப் (10 மில்லியனுக்கும் மேல்) பெற்று உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) சூர்யகாந்த், ஒரு வழக்கின் விசாரணையின் போது வேலையில்லாத இளைஞர்களை சமூகத்தில் உள்ள “கரப்பான் பூச்சிகள்” (Cockroach) மற்றும் “ஒட்டுண்ணிகள்” (Parasites) என்று ஒப்பிட்டுப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதே இந்த இயக்கம் தொடங்க முக்கிய பின்னணியாகும்.

 பின்னர் அவர் அளித்த விளக்கத்தில், தான் ஒட்டுமொத்த இளைஞர்களைப் பழிக்கவில்லை என்றும் தகுதியில்லாமல் குறுக்கு வழியில் தொழிலில் நுழைபவர்களையே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் கூறினார். 

இருந்தபோதிலும், இந்த வார்த்தையால் கோபமடைந்த இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட, “எங்களை கரப்பான் பூச்சி என்று சொன்னால், நாங்கள் அதே பெயரிலேயே கட்சி ஆரம்பிக்கிறோம்” என்று கூறி இந்த டிஜிட்டல் புரட்சியைத் தொடங்கினர்.

அபிஜித் திப்கே (Abhijeet Dipke – வயது 30) என்பவர்தான் இந்த இயக்கத்தின் நிறுவனர் ஆவார். 

இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் (AAP) சமூக வலைத்தளத் தன்னார்வலராகப் பணியாற்றியவர், தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

 AI கருவிகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் சில மணி நேரங்களிலேயே இதன் இணையதளம் மற்றும் லோகோவை இவர் உருவாக்கினார்.

Cockroach Janata Party

“சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்” (Voice of the Lazy & Unemployed) என்பதைத் தன் முக்கிய முழக்கமாகக் கொண்டுள்ள இந்த இயக்கம் மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக மற்றும் சோம்பேறித்தனமான கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது. 

எப்போதும் ஆன்லைனில் இருக்கும் எந்தவொரு இந்திய இளைஞரும் இதில் உறுப்பினராகச் சேரலாம் என்ற தகுதியையும் இது அறிவித்துள்ளது.

விளையாட்டாகவும் நையாண்டியாகவும் தொடங்கப்பட்டாலும், தற்போதைய இந்திய அரசியல் மற்றும் சமூக சூழலை விமர்சிக்கும் வகையில் சில முக்கியமான கோரிக்கைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். 

ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உடனடியாக ராஜ்யசபா எம்பி (MP) பதவி வழங்கக் கூடாது, கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிட 20 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்,

 நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு தர வேண்டும், NEET மற்றும் CBSE தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் மற்றும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் ஊடகவியலாளர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கும்.திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் முக்கிய தலைவர்களான மகுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆசாத் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த இயக்கத்தை ஆதரித்து, தங்களையும் இதில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் ஜாலியாகப் பதிவிட்டது இந்த இயக்கம் மேலும் வைரலாகக் காரணமாக அமைந்தது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நீதித்துறை, அரசியல் மீதான தங்களின் கோபத்தை மீம்கள் (Memes) மற்றும் நையாண்டி மூலம் வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் இளைஞர் புரட்சி தான் இந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி'




தமிழக முதல்வராக மே 10 விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு 2வது தேசிய கீதம் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்தார்.

ஆனால் இன்று அமைச்சரவை விரிவாகம் செய்யப்பட்டு நடைபெற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவிலும் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை