வாக்ளிக்காதோருக்கும்...

 



வாக்களிக்காத மக்களுக்காகவும் போராடுவோம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர். 

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இணையேற்பு விழாவில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் இருவரும் சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர். 

அவர் பேசியுள்ளது தற்போது சோஷியல் மீடியாவில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது, திமுக வெறும் அரசியல் கட்சி கிடையாது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. மற்ற கட்சியை வேண்டுமானால் தேர்தல் முடிவுகள் பாதிக்கலாம். அனால் திமுக மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யும்.

 தேர்தலில் அரசியலில் மட்டுமே வெற்றி வாய்ப்பினை தவற விட்டு இருக்கோம். கொள்கை அரசியலில் கண்டிப்பாக தோல்வி அடைய மாட்டோம் என பேசியுள்ளார். தொடர்ந்து மீண்டும் களப்பணியை தொடர்வோம்.

ஆளுங்கட்சியாக இருக்கும் போது மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கும் சமயத்திலும் நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லாமல் வாக்களிக்காத மக்களுக்காகவும் போராடுவோம். 

மாநில உரிமைகளை காப்போம் என தெரிவித்திருக்கிறார். மேலும், புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தும் சில கருத்துக்களை கூறியுள்ளார். 

அதாவது, இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை ஏற்கனவே உணர ஆரம்பிச்சுட்டாங்க.

நாளாக நாளாக நிச்சயம் இந்த ஆட்சியாளர்கள் நிறைய தானாகாவே அம்பலப்படுவார்கள். போக போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும் என விமர்சித்தார். 

மேலும், கலைஞர் கருணாநிதி தாயின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தை, விளையாட்டு காட்டும் ஒரு ஆளை பார்த்து மயங்கும். மகிழ்ச்சி அடையும். தாயிடம் இருந்து விளையாட்டு காட்டும் அந்த ஆளிடம் சென்று கொஞ்ச நேரம் இருக்கும். 

ஆனால் அந்த குழந்தை அவனிடம் நிரந்தமாக இருந்து விடாது.

கொஞ்ச நேரத்தில் உண்மையான பாசம் என்னவென்று புரிந்து தாயிடம் திரும்பி வரும். அது மாதிரி இன்னைக்கு கவர்ச்சி, மாயாஜாலம் ஆகியவற்றை காட்டி மக்களை சிலர் ஈர்த்து இருக்கலாம்.

இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தை தீர்க்காது. எந்த பிரச்சனையையும் சரி செய்யாது. அப்படி தமிழகத்தின் தாயாக இருக்கும் நம்ம தலைவரை நோக்கி தமிழ்நாடு மக்கள் வருவார்கள் என குட்டி ஸ்டோரி சொல்லி தனது உரையை முடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இதனிடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த திருமண நிகழ்ச்சியில் தவெக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டும் ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்துள்ளார். 

அதோடு திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை ஆட்சியில் நாம் தான் இருப்போம். பீனிக்ஸ் பறவையை போன்று திமுக மீண்டு வரும் என நம்பிக்கையுடன் பேசி இருந்தார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசியது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

பிரச்சாரத்தில் மற்றும் பலர் என விமர்சித்து விட்டு, தற்போது அவர்களுடைய ஆதரவை விஜய் பெற்று இருப்பதாக அதிமுக அதிருப்தி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்து இருப்பதை விமர்சித்து இருந்தார்.

 அதோடு அதிமுகவில் பிரிந்து சென்ற அணிக்கு ஒரு சோபா செல்கிறது. பின்னாடியே முதல்வரும் செல்கிறார். சோபா பாணியில் இந்த ஆட்சி நடக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



டிரெம்ப்+நெதன்யாகு.?

டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய உலகத் தலைவர்களைப் போல தோற்றமளிப்பதாகக் கூறப்படும் இரண்டு எருமைகள் தற்போது பங்களாதேஷ் நாட்டில் இணையத்தை கலக்கி வருகின்றன. 

ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த இரு எருமைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடையுடைய அல்பினோ எருமைக்கு மக்கள் “டொனால்ட் டிரம்ப்” என செல்லப்பெயர் சூட்டியுள்ளனர். அதன் வெளிறிய தோல் மற்றும் மஞ்சள் கலந்த வெள்ளை முடி, டிரம்பின் பிரபலமான சிகை அலங்காரத்தை நினைவூட்டுவதாக கூறப்படுகிறது.

 இதனால் அந்த எருமையுடன் செல்ஃபி எடுக்க பொதுமக்கள் போட்டியிடுகின்றனர்.

அந்த எருமையின் உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “என் தம்பி முதலில் இந்த ஒற்றுமையை கவனித்தார். குடும்பத்திலேயே நகைச்சுவையாக வைத்த பெயர் இன்று இணையத்தில் வைரலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

 அதே நேரத்தில், பெயருக்கு மாறாக அந்த எருமை மிகவும் அமைதியான குணம் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு 750 கிலோ எடையுள்ள எருமைக்கு “நெதன்யாகு” என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த எருமை மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டதாகவும், அடிக்கடி சீறிக்கொண்டு பராமரிப்பாளர்களை நோக்கி பாய்வதாகவும் பண்ணைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் வலுவான உடலமைப்பும், கடுமையான நடத்தைமுறையும் இணையத்தில் மீம்களாக பரவி வருகின்றன.

ஒரு எருமை அமைதியானது; மற்றொன்று ஆக்ரோஷமானது என்ற முரண்பட்ட குணங்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவை விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. “யார் உண்மையில் டிரம்பைப் போல?”, “நெதன்யாகு எருமை உண்மையிலேயே கோபக்காரனா?” போன்ற கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஈத் அல்-அதா பண்டிகை காலத்தில் வங்காளதேசத்தில் மாடுகள், ஆடுகள், எருமைகள் போன்ற விலங்குகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

 ஆனால் இந்த ஆண்டு, சமூக வலைதளங்களின் தாக்கத்தால் கால்நடைப் பண்ணைகளே சுற்றுலாத் தலங்களைப் போல மாறியுள்ளன. மக்கள் அந்த எருமைகளை நேரில் பார்க்க நீண்ட தூரம் பயணம் செய்து புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை