தூயசக்தி நாடகம்முடிந்தது!

 பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று, உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருப்பதாக தவெக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தூய சக்தியா இல்லை, அடுத்த கட்சி MLAக்களைத் தூக்குற சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி விட்டதாக சாடி உள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;தவெக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து உள்ளனர். சட்டமன்றத்தில் இருக்கும் தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

நிலைப்பாட்டை மதிக்கிறோம் இ.கம்யூ., மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தோழமைக் கட்சிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரது நம்பிக்கையை சிதைக்கும் வேலையில் தவெக இறங்கி உள்ளது.

Clean Politics vs Dirty Politics இதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும் தான். ஆட்சி நிலைக்க தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics என்று கூறி, ஆட்சிக்கு வந்தவர்கள் Dirty Politics செய்து உள்ளனர்.

இது தூய சக்தியா? பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளனர். உங்களோட Starting இப்படி இருந்தால் Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா? இல்லை அடுத்த கட்சி எம்எல்ஏக்களைத் தூக்கும் சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி உள்ளது.

ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக… முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பிளவுபட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு, என்ன Return Gift கொடுக்கப் போகிறீர்கள்? என்பதையும் மக்கள் பார்க்கத் தான் போகின்றனர். எங்களைப் பொறுத்தவரை, திமுக தொடர்ந்து தன் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தூயசக்தி நாடகம்முடிந்தது

ரீல்ஸில் ஆட்சியை நடத்த முடியாது. 

நேற்றைய தினம் முதல்வர் விஜய், சி.வி. சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

 இதனையடுத்து அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரும், விஜய்யின் நாடகம் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெற்றி பெற்று இருக்கக்கூடிய அதிமுகவின் ஒரு குழுவினரை தன்னுடன் இணைத்து கொண்டிருப்பதன் மூலம் அவருடைய வேடம் கலைந்து இருக்கிறது.இதுவரை அவர் ஓட்டிய திரைப்படம் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி இது பாஜக ஆதரவான அதிமுக ஆதரவுடன் நடக்கும் ஆட்சி தான் என நிரூபித்து இருக்கிறார்.

 எனவே தூய சக்தி என்ற நாடகமெல்லாம் முடிவுக்கு வந்துள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போன்று, இன்ஸ்டாகிராம் ரீல் மூலமாக ஆட்சியை பிடித்து விட்டார்.

ஆனால் இன்ஸ்டாகிராம் ரீலில் ஆட்சியை நடத்த முடியாது. 

இனி மக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் மக்களின் நம்பிக்கையை இழந்து இருக்கிறார்.

 சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இருந்தாலும், மக்கள் களத்தில் தமிழக வெற்றி கழகம் நம்பிக்கையை இழந்திருப்பதாக சிவசங்கர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

அதோடு என்டிஏ கூட்டணி கட்சிகளுடைய ஆதரவை பெற மாட்டேன் என விஜய் சொல்லி இருந்ததை குறிப்பிட்டு, தற்போது அவர்களுடைய ஆதரவினை பெற்றிருப்பது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். சி.வி. சண்முகம் இல்லத்துக்கே சென்று ஆதரவை பெறுவதை வெளிப்படையாகவே விஜய் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 மேலும் வாடகை குதிரையை எடுத்து வண்டி ஓட்டுகிறார். எவ்வளவு தூரம் செல்வோம் என்பதை பார்ப்போம் எனவும் பூடகமாக சிவசங்கர் பேசியுள்ளார்.

தொடர்ந்து இந்த ஆட்சி தொடருமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்க்கலாம். நீங்களும் பார்ப்பீங்க என பதிலளித்திருக்கிறார். 

இதனிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றாலும் தவெக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இருக்க முடியும்.

 அப்படி இருந்தும் எதனால் அவர்களுடைய ஆதரவை தமிழக வெற்றி கழகம் பெற்றது என்ற கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்.மற்றொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளதாக தவெக ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்து இருப்பதை விமர்சித்திருக்கிறார். 

அதோடு அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளையும் இபிஎஸ் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை