பகடைக்காய் ?

🔹 திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக கனமழை. ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால்  தேங்கிய தண்ணீர்.🔹 கேரளத்தில் நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை. நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு.🔹 தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில். அதிகபட்சமாக சென்னை, வேலூர், கரூரில் 104 டிகிரி வெப்பம் பதிவு.🔹 +2 விடைத்தாள் திருத்த குளறுபடி பூதாகரமான நிலையில் சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றம். ஓ.எஸ்.எம். டெண்டர் குறித்து விசாரிக்கவும் உயர்மட்ட குழு அமைத்தது ஒன்றிய அரசு.🔹 தற்போதைய சட்டம் ஒழுங்கு, மின் வெட்டு பிரச்சனைக்கு திமுகவை குறை கூறுவதா. திருச்சியில் திமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய்க்கு ஆ.ராசா காட்டமான பதிலடி.🔹 பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அதிமுகவினர் முழக்கம். துரோகி என முழக்கமிட்டதால் சலசலப்பு.🔹 பள்ளிபாளையத்தில் இடி தாக்கி இளைஞர் உயிரிழப்பு. நண்பரின் தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு குளிக்கச் சென்ற போது நேர்ந்த துயரம்.🔹 மேற்காசிய போர் எதிரொலியால் கட்டுமானப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு. தேசிய அளவில் கட்டுமானச் செலவு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்.🔹 திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 பேர் கைது. தலைமறைவாக உள்ள 3 பேரை தேடும் பணி தீவிரம்.🔹 வரும் 8-ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம். திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட 15 கட்சிகள் பங்கேற்க வாய்ப்பு.🔹 புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாக இலாகா இல்லாமல் வலம் வரும் அமைச்சர்கள்.  அரசு நிர்வாகத்தில் நீடிக்கும் குழப்பம்.🔹 குஜராத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து. 7 பேர் உயிரிழப்பு.. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.




 குழந்­தை­களை

 பக­டைக்­கா­யா­கப் பயன்­ப­டுத்­தி­யது...!

‘பேத்தி சொல்லி விசி­லுக்கு வோட்­டுப் போட்­டேன்’, ‘பேரன் சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டேன்’ என்று சொன்­ன­வர்­கள் அனை­வ­ரும், ‘இப்­பத்­தான் ஏன் போட்­டேன்னு வருத்­தப்­ப­டு­றேன்’’ என்று வருத்­தப்­பட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். 

சமூக வலை­த­ளங்­க­ளில் இது போன்ற பேட்­டி­களை அதி­கம் பார்க்க முடி­கி­றது. பேரன், பேத்­தி­க­ளுக்கு நல்­லது சொல்லி வளர்க்­கா­மல் அவர்­கள் சொன்­னார்­கள் என்று வாக்­க­ளித்­து­விட்டு இப்­போது வருத்­தப்­ப­டு­ வ­தால் என்ன பயன்?

அந்த அள­வுக்கு குழந்­தை­க­ளைத் தூண்­டி­னார் விஜய். தனது இத்­தனை ஆண்­டு ­கால சினி­மாப் புகழை, முத­லீ­டா­கப் போட்­டார் விஜய். 

அவர் கட்சி ஆரம்­பித்­தது வேண்­டு­மா­னால் இரண்டு ஆண்­டுக்கு முன்­பாக இருக்­க­லாம். ஆனால், மக்­களை மயக்­கத் தொடங்கி பல காலம் ஆகி­விட்­டது. அந்த சினிமா மயக்­கம் தான் அவ­ருக்­குப் பல­ரும் வாக்­க­ளிக்­கக் கார­ணம். அதி­லும் குறிப்­பாக குழந்­தை­களை தனது பேச்­சில் அதி­க­மா­கத் தூண்­டி­னார்.

‘நீங்­கள் உங்­கள் அப்பா, அம்­மாவை வாக்­க­ளிக்க வையுங்­கள். இந்த ஒரு தடவை எனக்கு வாய்ப்­ப­ளிக்­கச் சொல்­லுங்­கள்’ என்று குழந்­தை­க­ளைத் தூண்­டி­னார் விஜய். இது மன ரீதி­யான தாக்­கு­தல் ஆகும்.

 அது­வும் குழந்­தை­கள் மீது செய்­யப்­பட்ட தாக்­கு­தல் ஆகும்.

குழந்­தை­க­ளுக்கு, சிறு­வர்­க­ளுக்கு அது தேர்­த­லுக்­கா­கக் கேட்­கப்­ப­டும் வாக்கு என்றே தெரி­யாது. அவர்­க­ளுக்­குப் பிடித்த ஒரு­வர், ஏதோ கேட்­கி­றார். அதைச் செய்ய வேண்­டும் என்­பது மட்­டுமே அவர்­க­ளுக்­குப் புரிந்­தி­ருக்­கும். 


‘சக்­தி­மா­னைப்’ பார்த்து அவர் செய்­வது போலவே மாடி­யில் இருந்து இறந்த சிறு­வர்­க­ளைப் பார்த்­துள்­ளோம். அது­போன்ற பொய்­மா­னைப் பார்த்து சிறு­வர், சிறு­மி­யர் செய்த செய­லா­கவே இதைப் பார்க்க வேண்டி இருக்­கி­றது.

‘தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் த.வெ.க. சார்­பில் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது தவறு’ என்று சொல்லி சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ளது.

 கட­லூர் மாவட்­டம் புவ­ன­கி­ரி­யைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் வாசுகி, சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் இது தொடர்­பாக வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். “நடந்து முடிந்த சட்­ட­ச­பைத் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசிய விஜய், குழந்­தை­க­ளைத் தூண்­டும் வகை­யில் பேசி­னார். ‘நீங்­கள் உங்­கள் பெற்­றோ­ரி­ட­மும் அண்­ணன், அக்­கா­வி­ட­மும் சொல்­லுங்­கள்’ என்று சொன்­னார். 

இது தேர்­தல் நடத்தை விதி மீறல் ஆகும்’’ என்று மனு­வில் குறிப்­பிட்டு இருந்­தார். நீதி­ப­தி­கள் சுவா­மி­நா­தன், லட்­சுமி நாரா­ய­ணன் ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன் விசா­ர­ணைக்கு வந்­தது.

த.வெ.க.சார்­பில் வாதிட்ட வழக்­க­றி­ஞர், ‘‘வெறும் செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் மனு­வைத் தாக்­கல் செய்­துள்­ளார்­கள்” என்று சொல்லி இருக்­கி­றார். வெறும் செய்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் அல்ல, விஜய் பேசிய பேச்­சு­கள் ஆதா­ர­மாக உள்­ளது. 

‘‘வீட்­டில் இருக்­கும் குட்டி நண்பா, நண்­பீஸ்... விஜய் மாமா­வுக்கு வோட்­டுப் போடச் சொல்­லுங்­கள். உங்­கள் பெற்­றோ­ரை­யும் வோட்­டுப் போடும் வய­தில் இருக்­கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்­தப்பா எல்­லோ­ரை­யும் விசில் சின்­னத்­துக்கு வோட்­டுப் போடச் சொல்­லுங்க’’ என்று விஜய் பேசிய ஆதா­ரம் போதாதா?

தேர்­தல் முடிந்து முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற மேடை­யி­லும் குழந்­தை­கள், சிறு­வர், சிறு­மி­ய­ருக்கு நன்றி சொன்­னார் விஜய். இந்த ஆதா­ரம் போதுமே.

‘பேத்தி சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டோம்’, ‘பேரன் சொன்­ன­தற்­காக விசி­லுக்கு வோட்­டுப் போட்­டோம்’ என்று சொல்­ப­வர்­க­ளின் பேட்­டி­கள் இணை­யத்­தில் வைரல் ஆகி வரு­கி­றது. 

எனவே, இது வெறும் செய்­தி­கள் அல்ல. உண்­மை­கள் என்­பதை நிரூ­பிக்க ஏரா­ள­மான ஆதா­ரங்­கள் இருக்­கி­றது.

‘குழந்­தை­களை தனது அர­சி­யல் சுய லாபத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­தி­யது’ குறித்து ஜூலை 10 ஆம் தேதிக்­குள் விஜய் விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

‘‘சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­களை தூண்­டி­விட்டு பிரச்­சா­ரம் செய்த விஜய் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என்று வலி­யு­றுத்தி தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் அர­விந்­தாக்­சன் எழு­தி­யுள்ள கடி­தத்­தில், ‘‘கடந்த ஏப்­ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை நந்­த­னத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பேசிய த.வெ.க. தலை­வர் விஜய், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­க­ளைத் தூண்டி விட்டு த.வெ.க.வுக்­குப் பிரச்­சா­ரம் செய்­தார். 

த.வெ.க.வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு தங்­கள் பெற்­றோர்­க­ளை­யும் உற­வி­னர்­க­ளை­யும் வலி­யு­றுத்த வேண்­டும் என, குழந்­தை­க­ளுக்கு விஜய் நிர்ப்­பந்­தித்­தார். குழந்­தை­களை இலக்­கா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, இந்­தப் பிரச்­சா­ர­மா­னது தேர்­தல் ஆணை­யத்­தின் வழி­காட்­டு­தல்­க­ளின் கீழ் கடு­மை­ யா­கத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

 குழந்­தை­களை ஒரு அர­சி­யல் கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வது சட்­டப்­படி குற்­ற­மா­கும். சமூக ஊட­கங்­க­ளில் பரவி வரும் ஏரா­ள­மான காணொ­ளி­க­ளில், சிறார்­கள் அழு­து­கொண்­டும், கத­றிக்­கொண்­டும், கூச்­ச­லிட்­டுக்­கொண்­டும், அடம் பிடித்­துக்­கொண்­டும் இருப்­பது காணப்­ப­டு­கி­றது. 

இதன்­மூ­லம், அவர்­கள் தங்­கள் பெற்­றோர்­க­ளை­யும் குடும்­பத்­தில் உள்ள வயது வந்த உறுப்­பி­னர்­க­ளை­யும் த.வெ.க.வுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு நிர்ப்­பந்­திப்­பது தெரி­கி­றது. தங்­கள் கோரிக்­கையை பெற்­றோர்­கள் நிறை­வேற்­றா­ விட்­டால், குழந்­தை­கள் சாப்­பி­டக் கூட மறுப்­ப­தா­க­வும், மேலும், குழந்­தை­கள் தங்­கள் பெற்­றோர்­களை மிரட்­டு­வது போன்ற காட்­சி­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் இடம் பெற்­றுள்­ளது.

 எனவே, சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்டு பிரச்­சா­ரம் செய்த விஜய் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்” என்று அக்­க­டி­தத்­தில் குறிப்­பிட்டு இருந்­தார்.

தேர்­தல் பணி­க­ளில் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்று 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போது கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் விதித்­தி­ருந்­தது. விஜய் மீது தேசிய குழந்­தை­கள் உரி­மை­கள் பாது­காப்பு ஆணை­யத்­தி­லும் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

விஜய்­யின் பேச்சு சென்னை உயர்­நீ­தி­மன்­றம், தேர்­தல் ஆணை­யம், தேசிய குழந்­தை­கள் உரி­மைப் பாது­காப்பு ஆணை­யம் ஆகிய மூன்­றின் விசா­ர­ணை­யி­லும் உள்­ளது.

குழந்­தை­களை இலக்­கா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட, விஜய்­யின் பிரச்­சா­ர­மா­னது தேர்­தல் ஆணை­யத்­தின் வழி­காட்­டு­தல்­க­ளின் கீழ் கடு­மை­யா­கத் தடை செய்­யப்­பட்ட முறை ஆகும். 

குழந்­தை­களை ஒரு அர­சி­யல் கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வது சட்­டப்­படி குற்­ற­மா­கும். தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் குழந்­தை­கள் மீது செல்­வாக்­குச் செலுத்­தி­யது தொடர்­பாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.

குழந்­தை­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வது என்­பது பிஞ்சு மனங்­க­ளின் மீது நடத்­தப்­பட்ட அர­சி­யல் அச்­சு­றுத்­தல், வன்­முறை ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை