இனி "இண்டியா கூட்டணி " ?

🔹மக்கள் வருந்தும் அளவுக்கு தவெகவின் ஆட்சி நடப்பதாக உதயநிதி விமர்சனம். தமிழ்நாட்டை சோஃபா மாடலாக மாற்றியதே தவெகவின் சாதனை என்றும் காட்டம்.🔹டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவிப்பு. காங்கிரசின் துரோகத்தால் மனக்காயமுற்ற தொண்டர்களுக்கு மதிப்பளித்து முடிவு.🔹முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு. 3 மாதங்களில் டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்தாரர்களை தேர்வு செய்ய திட்டம்.தூத்துக்குடி பெட்ரோலிய விற்பனை நிலையத்தில் ஊழியர்களை ஆயுதங்களுடன் வந்து  தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம்.இல்லை எனில் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் ஒருநாள் மூடப்படும்.

🔹கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக்கோரும் போராட்டம் டெல்லியில் நாளை நடைபெறுமா? நாடு திரும்பும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரை கைது செய்ய ஒன்றிய அரசு திட்டம். 
🔹இஸ்ரேல் - லெபனான் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டுமென ஹிஸ்புல்லா அமைப்பு நிபந்தனை.












 இனி

 "இண்டியா

கூட்டணி " ?

ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. 

காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது.

திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்​று​தான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்​து​விட்ட திருப்தியில் இருக்​கிறது பாஜக.இத்​தனை நாளும் இண்​டியா கூட்டணி​யின் பிர​தான அங்​க​மாக இருந்​தது திமுக. ஸ்டா​லின் தான் ‘ராகுல் பிரதமர்’ என்ற கோஷத்தை முதலில் முன்னெடுத்தவர். ‘ஸ்​வீட் எடு… கொண்​டாடு’ என்று சொல்லுமளவுக்கு ராகுலும் ஸ்டா​லினும் அண்​ணன் – தம்பி உறவு​முறை கொண்​டாடி​னார்​கள். 

அதே​போல், காங்​கிரஸை விட ஆக்ரோஷ​மாக மோடியை​யும் பாஜக-வை​யும் எதிர்த்​தவரும் ஸ்டாலின் தான்.

இதையெல்​லாம் பாஜக ரசிக்​க​வில்​லை. குறிப்​பாக, வடமாநிலங்களில் தங்​களால் வழித்​துப் போடப்​பட்ட காங்​கிரஸை தமிழகத்​தில் திமுக தோளில் தூக்​கிச் சுமப்​பதை பாஜக தலைமை சுத்​த​மாக விரும்​ப​வில்​லை.

 பல நேரங்​களில் ‘காங்​கிரஸை உடன் வைத்​திருக்​காதீர்​கள்’ என்ற சமிக்​ஞையை பாஜக தலை​வர்​கள் திமுக-வுக்கு மறை​முக​மாக உணர்த்​தி​னார்​கள். 

அதைக் கேட்​காத​தால் திமுக சந்​தித்த சங்​கடங்​களும் ஏராளம் உண்​டு.

திமுக-வை பொறுத்​தவரை, மத்​தி​யில் பாஜக-வை எதிர்​கொள்​ளும் தேசிய சக்தி என்ற முறை​யில் காங்​கிரஸை பெரிதும் நம்​பியது. ஆனால், இந்​தத் தேர்​தல் அந்த நம்​பிக்​கையை எல்​லாம் தூள் தூளாக்​கி​விட்​டது.

 ஆரம்​பத்​திலிருந்தே தவெக-வைக் காட்டி திமுக-வை நெருக்​கிய காங்​கிரஸ், விரலில் வைத்த மை காயும் முன்​பாகவே தவெக-வுக்கு ஆதர​வளித்து அமைச்​சர​வை​யிலும் துண்டு போட்​டது. அத்​துடன், “இனி வரும் தேர்​தல்​களி​லும் தவெக-வுடன் தான் கூட்​ட​ணி” என்​றும் தாமாக முன்​வந்து அறி​வித்​தது.

. இதெல்லாம் விசில் அலை​யிலும் காங்​கிரஸுக்கு 5 எம்எல்ஏக்களை வென்று கொடுத்த திமுக-வுக்கு கடும் மன உளைச்​சலை ஏற்படுத்தி​யது.

இந்த நிலை​யில், காங்​கிரஸ் பங்​கேற்​கும் இண்​டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அறி​வித்​திருக்​கும் திமுக, “நாட்டு நலன் கருதி இண்​டியா கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் முன்​வைக்​கும் பிரச்​சினை​களுக்கு ஆதர​வாக குரல்​கொடுப்​போம்” என்று சொல்லி இருக்​கிறது. 

இண்​டியா கூட்​ட​ணி​யில் ஆகப்​பெரும் கட்​சி​யாக காங்​கிரஸ் இருந்​தா​லும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகளுக்கு காங்​கிரஸ் மீது ஏதோ ஒரு மன வருத்​தம் இருக்​கவே செய்​கிறது. 

அத்​தகையை வருத்​தம் ஏதும் இல்​லாமல் இருந்த ஒரே கட்சி திமுக மட்​டும் தான். 

இப்​போது அதை​யும் பகைத்​துக் கொண்​டு விட்​டது காங்​கிரஸ். திமுக-வுக்​குப் பதிலாக தவெக இண்​டியா கூட்​ட​ணி​யில் சேரலாம் என செய்​தி​கள் வரு​கின்​றன.தங்​களுக்கு தமிழகத்​தில் சிம்ம சொப்​பன​மாக இருந்த திமுக இந்​தத் தேர்​தலில் வீழ்த்​தப்​பட்​டது பாஜக-வுக்கு கிடைத்த முதல் வெற்​றி. இத்​தனை நாளும் மத்​திய பாஜக அரசை போட்​டுத் தாக்​கிக் கொண்​டிருந்த திமுக-வுக்கு இப்​போது, விஜய் அரசை விமர்​சிக்​கவே நேரம் போத​வில்​லை. 

அதனால், சிபிஎஸ்இ கேள்​வித்​தாள் விவ​காரம் உள்​ளிட்ட மத்​திய அரசை சங்​கடப்​படுத்​தும் பல விஷ​யங்​களை திமுக கண்​டு​கொள்​ளவே இல்​லை. இந்த நிலை​யில், இண்​டியா கூட்​டணி கூட்​டத்தை திமுக புறக்​கணித்​திருப்​ப​தில் பாஜக-வுக்கு இரட்​டிப்பு மகிழ்ச்​சி.

 இதன் மூலம், தொடக்​கம் முதலே தங்​களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்​டியா கூட்​ட​ணி​யை​யும் கலகலக்க வைத்​து​விட்ட சந்​தோஷத்​தில் திளைக்​கிறது அந்​தக் கட்​சி.

இண்​டியா கூட்​டணி கூட்​டத்தை புறக்​கணிப்​ப​தாக திமுக மட்​டும் வெளிப்​படை​யாக அறி​வித்​திருக்​கிறது. 

காங்​கிரஸ் மீதிருக்​கும் வருத்​தங்​களால் இன்​னும் சில கட்​சிகளும் கூட்​டத்​தைப் புறக்​கணித்​தால் இண்​டியா கூட்​ட​ணிக்கு மாற்​றாக இன்​னொரு கூட்​டணி பிறக்​கலாம். 

ஒரு​வேளை, இந்த விஷ​யத்​தில் தேசிய அளவில் காங்​கிரஸ் தனிமைப்​படுத்​தப்​பட்​டாலும் ஆச்​சரியமில்​லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை