கொள்கை, கோட்பாடற்றக் கட்சி

 🔹திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு.🔹மூன்றே மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு. சென்னையில் 29 ரூபாய் அதிகரித்து, 957 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம்.🔹தவெக தலைமையிலான ஆட்சி எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் என எடப்பாடி எச்சரிக்கை. முதலமைச்சர் நாற்காலியின் இரண்டு கால்கள் இரவல் கால்கள் என்றும் விமர்சனம்.🔹கட்சிக்கு கட்சிக்கு கையேந்தி பதவி வாங்குவதாக காங்கிரஸ் குறித்து சீமான் விமர்சனம். திமுக போட்ட பிச்சையால்தான் காங்கிரசுக்கு 10 எம்.பி. கிடைத்திருப்பதாகவும் கண்டனம்.🔹தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்.அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.🔹டெல்லி கரப்பான்பூச்சி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆனி ராஜா மீது தாக்குதல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

165 பக்தர்களுக்கு வைகுண்ட பதவி.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாள்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 பேர் வீதம் இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக கேதார்நாத் வழித்தடத்தில் மாரடைப்பு மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாக 80 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். பத்ரிநாத் வழித்தடத்தில் 48 இறப்புகளும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் கடுமையான ரத்த அழுத்த மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலங்களில் நிலவும் குறைந்த ஆக்சிஜன் அளவு மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் சுவாசப் பிரச்னைகள், மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.

ஆரம்பகட்ட உடல்நலக் குறைபாடுகளைப் புறக்கணித்துவிட்டு, யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயணிப்பதும் மரணங்களுக்குக் காரணமாக அமைகிறது.

இதனைத்தொடர்ந்து வயதான பக்தர்களும், இதயம், சுவாசம் அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைச்சுற்றல் அல்லது அதீத சோர்வு போன்ற அறிகுறிகளை பக்தர்கள் புறக்கணிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கிய யாத்திரை நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது.

 கிட்டதட்ட இன்னும் 5 மாதங்கள் உள்ளன. சனிக்கிழமை வரை 31,65,746 பக்தர்கள் இமயமலையின் புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களையும் தரிசித்துள்ளனர்.

மேலும் இந்த இதுவரை யாத்திரைக்காக சுமார் 47 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.தெரிந்தே நடப்பதை தடுக்க  இயலாது.இறையடி சேர முயற்சி.கொள்கை,

கோட்பாடற்றக் கட்சி.த.வெ.க,

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தொடங்கி வைத்தார்.


அதன்பின் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது , “ இந்தியா கூட்டணி, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டது.


இதில் தலைமை வகிக்கிற காங்கிரஸ் கட்சி மற்ற இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அந்த கட்சிக்கு உண்டு. 

அவர்கள் போனால் இவர்கள் வருவார்கள் என பேசுவது இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும் அதை பலப்படுத்துவதற்கும் பயன்படாது.

இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும்.


அதற்குண்டான அணுகுமுறைகளை காங்கிரஸ் கட்சி தான்  மேற்கொள்ள வேண்டும்" என்றார்.


அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு, “கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்கட்சியிலிருக்கிற முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது அமலாக்கதுறை வழக்கு போடுவார்கள்.


யார் மீது வழக்கு போட்டார்களோ அவர்கள் பா.ஜ.க -வில் சேர்ந்தால் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள். அதே போன்ற அரசியல் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் அது தான் தொடர்கிறது" என்றார்.


தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, ``இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது. இன்னும் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை; வளரட்டும்.

அதன் பின் தேறுமா?

தேறாதா? என முடிவெடுக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம்"


தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தில் வருகிறதா? என கேட்டதற்கு, ``கொள்கை கோட்பாடு எல்லாம் ஒன்றும் இல்லை.


த.வெக. 108 இடங்களில் வென்று 107 உறுப்பினர்களை கொண்டிருந்தது. ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை த.வெ.க மட்டுமே கொண்டிருந்தது.


அவர்கள் ஆட்சியமைப்பதற்கு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்கள்.

கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இதற்கு முன் எப்படி சசிகலா ஆட்சியமைக்க கடிதம் கொடுத்தும், அதை காலம் தாழ்த்தி, நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்தி, வேறொரு ஆட்சியை அமைத்தார்களோ,

அது மாதிரியான ஒரு ஆட்சி அமையக் கூடாது என்பதற்காகவும், கவர்னர் ஆட்சி மூலம் மறைமுகமாக பா.ஜ.க ஆள முயற்சி செய்ததை முறியடிப்பதற்காகவுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம்” என்றார்.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.


டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடந்தது..


அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டிருந்த பகுதிக்கு ‘ஹிட்’ ஸ்பிரே உடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளது.

அமெரிக்​கா​வில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் இந்த கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் கல்வித்துறையில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது.


இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சி அறிவித்தது.

இந்த போராட்டத்துக்கு டெல்லி காவல் துறையும் அனுமதி அளித்துள்ளது.


சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தலாம் என காவல் துறை அனுமதி வழங்கி உள்ளதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


அதேநேரத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கரப்பான் பூச்சி முகமூடி அணிந்து பங்கேற்ற இளைஞர்கள்

இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்கள் பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். இவர்களுடன் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் இணைந்துள்ளார்.


இன்று காலை அமெரிக்காவில் இருந்து அவர் டெல்லி வந்திருந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவர், தனது கையில் அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை வைத்திருந்தார். அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக பல இளைஞர்கள் குழுமியிருந்த கூட்டத்துக்குள் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ‘ஹிட்’ ஸ்பிரே உடன் வந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் அங்கிருந்து அந்த நபர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளம் மூலம் கவனம் பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் கள போராட்டமாக இந்த போராட்டம் அமைந்துள்ளத குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை