ஒரு மாதத்திலேயேஎதிர்ப்பு அலை.!

👊 டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம். காங்கிரசை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு.😡 இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய திருமாவளவன். காங்கிரஸ் அணுகுமுறையால் தமிழ்நாடு, கேரளத்தில் கூட்டணி பலவீனமாகியுள்ளதாக விமர்சனம்.⚡ சென்னை மடிப்பாக்கத்தில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் கடும் அவதி. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்.🌧️ கேரளத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழையால் ரெட் அலர்ட். கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை.😱 பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத உடல் மீட்கப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள். சிகிச்சைக்காக வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்தது அம்பலம்.🫩 ஸ்ரீவில்லிபுத்தூரில் அங்கன்வாடி திறப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடல்கள். அமைச்சர், தவெகவினர் அலப்பறையால் மக்கள் முகம் சுளிப்பு.🥥 வளைகுடா போர்ச்சூழல் காரணமாக ஈரோட்டில் கொப்பரை தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை. கிலோ 280 ரூபாயில் இருந்து 130 ஆக சரிவு.




ஸ்டிக்கர் ஒட்டுவதற்கென்றே ஒரு அரசாங்கம்... ஜால்ரா அடிப்பதற்கென்றே சில  விலைபோன ஊடகங்கள்!

திமுக அறிக்கை!

திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில 'பச்சோந்தி' ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்!

உண்மை என்ன? ஆதாரங்கள் இதோ! பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய "ஸ்டார் 3.0" (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்கள் இதோ அப்பட்டமாக உள்ளன.

வெட்கக்கேடான விளம்பர அரசியல்! ஆனால், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் 'Toxic' ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், 'வரலாற்றுச் சாதனை' போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம்!

 இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.

முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு "ஸ்டார் 3.0" ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசு. சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா?

ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும்!






ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.!

 தமிழகத்தில் தொடர் வெயிலின் தாக்கத்துக்கு இணையாக நள்ளிரவு மின்வெட்டு பொதுமக்களின் பொறுமையை சோதித்து வருகிறது.


தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினசரி 6 முதல் 7 மணி நேரம் வரை நீடிக்கும் மின்தடை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.


ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீதிகளில் இறங்கி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தக் காட்சிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் எக்ஸ் தளங்களில் காட்டுத்தீ போல் பரவி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசுக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது.


குறிப்பாக சென்னையின் தென் புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், முத்துக்காடு, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.


உப்பளம் போன்ற வெப்பமான வானிலையில் தூக்கமின்றி தவிக்கும் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ECR மற்றும் OMR சாலைகளில் மக்கள் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதேபோல் அம்பத்தூர், பெரம்பூர், பொன்னேரி, சீர்காழி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் தீப்பந்தங்களுடன் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.


இந்தப் போராட்டங்களின் நேரடி வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன. "மின்சாரம் இல்லை, தூக்கம் இல்லை; இதுதான் மக்கள் ஆட்சியா?" எனும் கேப்ஷன்களுடன் பகிரப்படும் ரீல்ஸ்கள் TVK அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.


குறிப்பாக, காஞ்சிபுரம் அருகே நாரப்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் பேசிக்கொண்டு இருக்கும் போதே மின்வெட்டு ஏற்பட்ட வீடியோ ரீல்ஸ் செம வைரலாகி வருகிறது.


அமைச்சரின் பொறுப்பற்ற செயலுக்கு எதிராக நெட்டிசன்கள் மீம்கள் மற்றும் கடுமையான விமர்சன ரீல்களை வெளியிட்டு TVK அரசை விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சென்னை திரு.வி.க. நகர் தொகுதி TVK எம்.எல்.ஏ எம்.ஆர். பல்லவி, "திமுகவினர் திட்டமிட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தி TVK அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.


இந்தக் கருத்து ரீல்ஸ் வடிவில் வைரலானதைத் தொடர்ந்து திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், எம்.எல்.ஏ பல்லவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோரவும், வீடியோக்களை நீக்கவும் வலியுறுத்தியுள்ளார்.


மின்வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். "தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை. சென்னை ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி கேபிள் பழுது மற்றும் மர்ம நபர்கள் பில்லர் பாக்ஸ்களை உடைத்து HRC பியூஸ்களைத் திருடுவதே மின்வெட்டுக்கு காரணம்" என்று தெரிவித்தனர்.


எனினும், காரணம் எதுவாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் மக்களின் கோபம் TVK அரசுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. அரசியல் விமர்சகர்கள், இந்த எதிர்ப்பு அலை வரவிருக்கும் நாட்களில் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என்று கருதுகின்றனர்.


தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினை அரசியல், சமூகம் மற்றும் டிஜிட்டல் உலகம் என மூன்று தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


மின்வெட்டுப்பிரச்னையால் முன்பு தி.மு.க,ஆட்சியிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை