வெறும் தொடக்கம் மட்டுமே!

 🗞️ இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் தேவதானப்பட்டி அருகே உள்ள பண்ணையில் இன்று நல்லடக்கம். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் - பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு🗞️ காங்கிரஸ் உடனான இணைப்பு குறித்து தகவலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு. இரு கட்சியினரும் சாத்தியமான கூட்டணிக்கு கதவை திறந்தே வைத்துள்ளதாகவும் தகவல்.🗞️ ஓமன் அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு சம்மன்.




    அனுபவ பொன்மொழி!



விரிவாகும்   வின்பாஸ்ட்!

வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தனது தூத்துக்குடி உற்பத்தி ஆலையில் ரூ. 7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட (Phase II) விரிவாக்கத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

இந்த விரிவாக்கத்தின் மூலம், பயணிகள் கார்களைத் தாண்டி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளையும் தயாரிக்கும் வகையில் தனது உற்பத்திப் பிரிவை விரிவுபடுத்துகிறது. 

தென் தமிழகத்தின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் ஆலை ஒரு சாதாரண மின்சார கார் தொழிற்சாலையாக இருக்கும் நிலையில்,இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த ஆலையை, கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளைத் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட உற்பத்தி மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இதனை பூர்த்தி செய்யவும், இந்திய அரசின் ‘ஃபேம்-II’ (FAME-II) மற்றும் சுயசார்பு இந்தியா திட்டங்களுக்கு ஏற்பச் செயல்படவும், வின்ஃபாஸ்ட் இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கத்தைத் திட்டமிட்டுள்ளது. 

இந்த விரிவாக்கத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதிப் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் 2,000 மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள தனது 408 ஏக்கர் உற்பத்தி ஆலையின் முதற்கட்டத்திற்காக சுமார் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்துள்ளது. 

இதன் மூலம் ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025-ல், நிறுவனம் தனது இந்திய தயாரிப்புகளை கார்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், மின்சார பேருந்துகள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்புகளையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. 

நாட்டில் விற்பனையாகும் பேட்டரி மூலம் இயங்கும் ஒட்டுமொத்த வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இருசக்கர வாகனங்கள் ஆகும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம், ஒரு முக்கிய மின்சார வாகன உற்பத்தி மையமாக உருவெடுக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் தொலைநோக்கு. லட்சியத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாகும்.

"16 வயதினிலே"

நினைவுகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்   காலமானார்.

 இதைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு   பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் அவரது உடல், நாளை பிற்பகல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

இதற்காக அந்தப் பண்ணை தோப்பில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மாவட்ட காவல்துறை சார்பிலும் முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, அவருடைய நினைவலைகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய ‘16 வயதினிலே’ படம் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. 

அதன்படி, ’16 வயதினிலே’ படத்துக்காக நடிகர் கமல்ஹாசனை அணுகியுள்ளார்.

அவரைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அதுகுறித்து 2017இல் பேட்டியளித்தஸ நடிகர் கமல், "அவருடைய அழுக்கு ஆடைகளின் அடிப்படையில் நான் அந்த வாய்ப்பை மறுத்திருந்தால், இன்று உங்களுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். 

கதையைக் கேட்ட பிறகுதான், அவர் ஒரு மாபெரும் மேதை என்பதை நான் உணர்ந்தேன்" என்றார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனையே மொத்தமாக மாற்றியிருப்பார் பாரதிராஜா..

 வெற்றிலை பாக்கு வாய், காலை இழுத்து நடக்கும் நடை, வெட்டாத தலைமுடி, அழுக்கு வேட்டி.. என அவரது சப்பானி கதாபாத்திரம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. 

ஒருகட்டத்தில் இந்தப் படத்தில் அவரை கோவணத்துடனும் நிற்க வைத்திருப்பார். அப்படியான உழைப்பில் வெளிவந்த அந்தப் படம் வெள்ளிவிழா கண்டது. பல விருதுகளையும் வென்றது.

முகமூடியைக் கிழித்த 31 நாட்கள்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பதவியேற்று 31 நாட்கள் கடந்துவிட்டன.


"மாற்றம்" என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வாங்கிய அதிகாரத்தில், இந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு கண்டது என்ன?


ரத்தக்களரியான சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள், இருண்ட தமிழகம், விண்ணை முட்டும் விலைவாசி, தவெக தொண்டர்களின் அதிகார மமதை மற்றும் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் கைகாட்டும் கோழைத்தனமான தலைமை!

இதுதான் நீங்கள் வாக்களித்த மக்களுக்குத் தரும் மாற்று அரசியல் பரிசா?


இந்த ஒரு மாதகால செய்திகளைப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள், அதில் 4 இரட்டை கொலைகள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அதிலிருந்து தெரிய வருகிறது.


சிங்கப்பெண் படை என்று மேடையில் வெற்று பில்டப் கொடுக்கும் அதே வேளையில், உங்கள் கட்சியின் நிர்வாகி சென்னையில் சிறுமியைச் சிதைத்த போக்சோ வழக்கிலும், உங்கள் தவெக இளைஞரணி நிர்வாகிகள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் கைதாகியுள்ளனர்.


உங்கள் கட்சியின் பிரமுகர்களே பாலியல் கொடூரர்களாக உலாவரும்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீக அருகதை இருக்கிறது? இதைவிடக் கேவலமான அவமானம் வேறு என்னவாக இருக்க முடியும்?


தவெக நிர்வாகிகளின் இந்த வக்கிர புத்தி ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. உங்களின் Abusive Warriors செய்யும் அசிங்கமான இணையக் கலாச்சாரம், ஆட்சி அதிகாரம் வந்த திமிரில் தெருவுக்கும் வந்ததின் அப்பட்டமான வெளிப்பாடு இது!

தவெக அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி கேட்டாலோ, விமர்சித்தாலோ, உடனடியாக வீட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது, தரம் தாழ்ந்து தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது என ஒரு மாஃபியா கூட்டத்தையே வளர்த்து வைத்துள்ளீர்கள்.


ஊடகவியலாளர்கள், கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் என எவரையும் விட்டுவைக்காமல் பாய்ந்து குதறும் இந்த அராஜக கும்பலை அடக்கத் துப்பற்ற அரசாக உங்கள் அரசு செயல்படுகிறது.


கோடை வெயிலில் மக்கள் தவியாய்த் தவிக்கும்போது, சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு! மறுபுறம் எம்-சாண்ட், ஜல்லி, சிமெண்ட், ஸ்டீல், உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது.


இது போதாதென்று, தவெக தொண்டர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. ஆய்வு என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, அரசு அலுவலகப் பணிகளைத் தடுத்து நிறுத்தி சமூக வலைதளங்களுக்காக Reels எடுத்துப் பெருமை பீற்றுவது என ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் கேலிக்கூத்தாகிவிட்டது.

மாநிலமே பற்றி எரியும்போது, மாநிலத்தின் முதலமைச்சர் என்ன செய்கிறார்? இன்றுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்த தைரியமில்லாமல், மக்களைச் சந்திக்கத் திராணியில்லாமல் கேமராக்களுக்கு முகம் காட்டாமல் ஓடி ஒளிந்துகொள்கிறார்!


அமைச்சர்களிடம் கேட்டால் No Comments என்று தப்பியோடுகிறார்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ஒவ்வொரு தோல்விக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறீர்கள்.


தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல!


முதலமைச்சர் விஜய் அவர்களே, உடனடியாக மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்லுங்கள்! சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்கள்! பழியைத் தூக்கிப் போடுவதை நிறுத்திவிட்டு, நேர்மையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்யுங்கள்!


மக்களின் குரல் ஒருபோதும் அடங்கப் போவதில்லை.


இது வெறும் தொடக்கம் மட்டுமே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை