பேச்சுரிமையை நசுக்காதே?.

மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்.
இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.
அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.
இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.
நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன.
பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும்.
இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மவுனம் ஒன்றே மொழி?
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட்டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத்த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?

கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த பயங்கர தீவிபத்தில் இருந்து, தப்பிய ஜெனிபர் என்ற சிறுமி தற்போது துணை ஆட்சியராகி உள்ளார்..
ஜெனிபரின் து வெற்றிப் பயணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ஜெனிபர், “ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழல் இருந்தது.
அப்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் எனக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதன் மூலம் அடையாறில் 8 மாதங்கள் தங்கிப் பயிற்சி பெற்றேன். அதன் பின்னரே என்னால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, இன்று இந்த இடத்துக்கு வர முடிந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் பெயர் மாற்றம் குறித்து விமர்சித்துள்ளார்.
. தனது பதிவில் “ நீங்கள் நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன்.
அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!” என்று தெரிவித்துள்ளார்..


