விவகாரம்?

📰 தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைந்துவரும் சூழலில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.. வாணியம்பாடியில் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்த நீர்📰 பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வலுக்கும் போராட்டம்.. திருவாரூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் த.வெ.க. அரசைக் கண்டித்து விவசாயிகள் முழக்கம்📰 கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், காவிரி நீரை கொண்டுவருவாரா என திமுக கேள்வி.. தேர்தலுக்கு முன்பே த.வெ.க. உடன் ரகசிய உறவில் இருந்த காங்கிரஸ் ஆட்சியே கர்நாடகாவில் நடப்பதாக சாடல்.📰 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை.. குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது என விவசாயிகள் வேதனை📰 காவிரி நீருக்கு வழியில்லாமல் குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிப்பதா என திமுக கேள்வி.. பொய்க்கால் குதிரை அரசின் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.📰 உத்தரப்பிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனத்தில் மணமகன் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம்.. போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை..📰 கர்நாடகா கலபுரகியில் அரசுக் கல்லூரி வகுப்பறையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. காயமடைந்த 5 மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி📰 உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்து எலான் மஸ்க் மாபெரும் சாதனை.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகளால், 100 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பைத் தாண்டி அசத்தல்.📰 அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகிறது.. மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் லெபனானும் இடம்பெறும் என அமெரிக்க தரப்பு தகவல்தர்மசாலா பாலியல் முறைகேடு.

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு தொடர்பு.?

பல பெண்கள் பலாத்காரம் செய்து கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக கூறி நாட்டையே உலுக்கிய தர்மஸ்தலா வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ( Actor Prakash Raj ) தொடர்பு இருப்பதாகவும், ரூ.200 கோடி கைமாறியதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் உள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தக் கோவிலில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணிக்காலத்தில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், மாணவிகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சடலங்களை, நேத்ராவதி ஆற்றின் கரையோரமாக உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட இடங்களில் புதைக்கவும், எரிக்கவும் உடந்தையாக இருந்ததாக நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று அமைத்தது.


தூய்மைப் பணியாளர் சுட்டிக்காட்டிய 15 இடங்களில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டிப்பார்த்த போது அவர் கூறியது போல உடல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

பின்னர் நடத்திய விசாரணையில் தர்மஸ்தலா கோவிலின் புகழை கெடுப்பதற்காக சிலர் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.

அதன்படி, பொய் புகார் கூறியதாக தூய்மை பணியாளரான சென்னையா ஒப்புக்கொண்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . இந்த விவகாரத்தில் சென்னையாவை, க்ரிஷ் மட்டண்ணவர், மகேஷ் திமரோடி, ஜெயந்த், விட்டல் கவுடா ஆகியோர்தான் தூண்டிவிட்டது தெரியவந்தது. அவர்களிடமும் எஸ்.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ஜாமினில் வெளியே உள்ள சென்னையா இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரையும் சென்னையா குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவில், ‘ஒருநாள் இரவு 8 மணிக்கு க்ரிஷ் மட்டண்ணவர் தொலைபேசியில் நடிகர் பிரகாஷ்ராஜை அழைத்து தன்னிடம் பேச கொடுத்ததாகவும், ஆப்போது தமிழில் பேசிய பிரகாஷ்ராஜ், க்ரிஷ் மட்டண்ணவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே அதிகாரிகள் முன்னிலையில் சொல்ல வேண்டும்.


அவ்வாறு செய்தால் உங்களை வந்து கட்டிப்பிடிப்பதாக பிரகாஷ் ராஜ் என்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.


ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனைமேலும் தர்மஸ்தலா வழக்கில் சதித்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் அந்த சதித்திட்டம் வெற்றி பெற்றால் தனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியதாகவும் சென்னையா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


மேலும் க்ரிஷ் மட்டண்ணவர், மகேஷ் திமரோடி, ஜெயந்த், விட்டல் கவுடா ஆகியோர் இந்த சதித்திட்டத்தில் முக்கியமானவர்கள் என்று கூறிய பிறகும் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சென்னையா கூறியிருக்கிறார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.


இதனால் தர்மஸ்தலா வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.


இதனிடையே தனது பெயர் ரிட் மனுதில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ்,

இது குறித்து விரைவில் நேரில் வந்து பதில் அளிக்கிறேன் , நான் தற்போது வெகு தூரத்தில் இருக்கிறேன், எனவே அதுவரை யாரும் எதையும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

த.வெ.க, வன்கொடுமை விவகாரம்!

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஸ்ரீவைகுண்டம் சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கு விஜய் ரசிகை ஒருவரை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்து சென்று தவெகவின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது

. அதோடு தவெக எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

இதுவும் அரசியல் களத்தில் மிகபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை தவெக அரசு மூடி மறைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.அதற்கு தவெகவின் ஐடி விங் தவெகவின் ஆட்சியை மாடர்ன் மனுநீதி சோழன் அரசு என்றது. அதாவது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.

அதில், அரசியல் அரிச்சுவடி தெரியாமல் விக்டிம் கார்ட் எடுத்து, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து அப்படியும் பாஸ் மார்க் எடுக்க முடியவில்லை. கடைசியில் வக்கற்று சோபா அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் திமுகவை விமர்சிப்பது நகைப்பிற்குரியது என கடுமையாக தவெகவை அட்டாக் செய்துள்ளது 

திமுக ஐடி விங். மேலும், ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் தொண்டரை அக்கட்சி நிர்வாகிகளே வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை மூடிமறைக்க முடியாமல், எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் ஐடி விங் மூலமாக அறிக்கை விட்டு அசிங்கத்தை மறைக்க பார்க்கிறார். 

இந்த மண்ணாங்கட்டிக்கு மாடர்ன் சோழன் பில்டப் ஒன்று தான் குறைச்சல் என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் கட்சியின் எம்எல்ஏ சரவணன், அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் வேளின் வாங்கி தருகிறேன் என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்களுடைய லட்சணமா?

குற்றவாளிகள் மேலிடத்துக்கு எல்லாம் தெரியும் என்று வாக்குமூலம் அளித்த பிறகு உங்களிடம் யாரந்த மேலிடம் என்ற கேள்விக்கு பதில் உள்ளதா? இல்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

 தொடர்ந்து திமுக நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, சிங்கப்பெண் என்ற பெயரில் வீடியோ போட்டவிட்டு, நிஜத்தில் பெண்களை சீரழிக்கும் சொந்த கட்சி பொறுப்பாளர்களை பாதுகாக்கும் உங்களின் சோபா மாடல் அரசுக்கு சிறிதும் கிடையாது என விளாசியுள்ளது திமுக ஐடி விங்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த சரவணன் எம்எல்ஏவையும், அதற்கு உடந்தையாக இருந்த மேலிடத்தையும் விசாரிக்கும் தைரியம் உங்களுடைய மாடர்ன் மங்குனி அரசுக்கு உள்ளதா? முதலில் அதை சொல்லுங்கள்! எனவும் தவெகவுக்கு சவால் விடுத்துள்ளது 

திமுக. இப்படி மாறி மாறி ஐடிவிங்கள் பகிர்ந்து வரும் இந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை