"சுரன்"

📰 அடுத்து தேர்தல் எப்போது வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என மு.க.ஸ்டாலின் உறுதி. பாஜகவின் நகல் போல முதலமைச்சர் விஜயின் செயல்பாடு உள்ளதாகவும் கடும் விமர்சனம்.📰 அதிமுக முன்னாள் எம்.பி-க்கள் பாலகங்கா, வனரோஜா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்ட பாலகங்கா பேனரை கிழித்தெறிந்து அதிமுகவினர் ஆவேசம்📰 தவெக அரசின் தவறுகளை இன்ஸ்டா, ரீல்ஸ் மூலமே சுட்டிக்காட்ட அதிமுகவினருக்கு பழனிசாமி அறிவுரை. அடுத்தது தேர்தல் எப்போது வந்தாலும் தவெக தோல்வியடையும் என்றும் உறுதி.📰 வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டிய கனமழை. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.📰 தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் சதமடித்த வெயில். மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு.📰 சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது. மூன்று பேரின் பிடியில் இருந்து தப்பித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் நடவடிக்கை.📰 சேலம் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல். தவெக ஆதரவாளரை தீவிரமாக விசாரித்து பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிய டிடிவி. தினகரன் கோரிக்கை.📰 கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கல்லூரி மாணவி, அவரது தாய் மீது தாக்குதல். 9 பேர் கொண்ட கும்பல் மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்.📰 தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது. நாளை காலை முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்.📰 செங்கல்பட்டு அருகே அதிவேகமாக சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற விவசாயி பலியான பரிதாபம்.📰 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 மற்றும் 9ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம். குறைந்தபட்சம் ஒரு பிரிவிலாவது சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது கட்டாயம் என அறிவிப்பு.📰 அசாமில் தரையிறங்கும்போது விமானப்படை விமானம் வெடித்து விபத்து. அக்னி வீரர்கள் உள்பட 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு.📰 பாட்னாவில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற சிறுமிகள்.கடை உரிமையாளரின் முகத்தில் pepper spray அடித்து திருட முயன்றபோது சிக்கினர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை