குஜராத்தில் இருந்தே

 📰  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை. டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...📰  அம்பத்தூர் அருகே திமுக பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே  மின் இணைப்பு துண்டிப்பு. செல்போனில் டார்ச்லைட் அடித்தவாறு தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட திமுகவினர்.📰  தவெக அரசு அறிவித்த மதுக்கடைகளை மூடாததால் தீவிரமடையும் போராட்டம். செங்கல்பட்டு, பல்லடம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.📰  கோவையில் கோயில் பிரசாதம் தருவதாகக்கூறி பெண் கடத்தல். நகைக்காக காரில் கடத்திச் சென்ற தம்பதியை கைது செய்த போலீசார்.📰  முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு. நாமக்கலில் ஒரு முட்டை விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம்.📰  கோவை அருகே பள்ளி தோழியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகைகள் பறிப்பு. பெண்ணின் நண்பர்கள் 2 பேரை கைது செய்த போலீசார்.📰  மத்திய பிரதேசத்தில் ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கீழே இறங்கி நின்ற போது மற்றொரு ரயில் மோதி கோர விபத்து.📰  திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 20 அதிருப்தி எம்.பி.க்களும் திரிபுராவைச் சேர்ந்த மாநில கட்சியில் இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க நடவடிக்கை.📰  இந்திய ராணுவத்திற்கான சீருடையில் இருந்த பிரிட்டிஷ் கால மரபுகள் நீக்கம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பண்டி என்ற ராணுவ உடை அறிமுகம் 📰  ஆந்திராவில் சீசன் இருந்தும் விலை போகாத மாம்பழங்கள். உரிய விலை கிடைக்காததால் சாலையோரத்தில்ஸ கொட்டிச் செல்லும் விவசாயிகள்.📰  தெற்கு லெபனான் மீது இஸ்‌ரேல் தொடர் தாக்குதல். அமெரிக்கா, ஈரான் இடையேயான ஒப்பந்தம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு.📰  அமெரிக்காவில் ஸ்கை டைவர்கள் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து. விமானம் தீப்பிடித்ததில், பைலட் உள்பட 12 பேர் உயிரிழப்பு.

📰  ஜி-7 உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா நகரில் போராட்டம். கார்களுக்கு தீ வைக்கப்பட்டதால் போராட்டம் வன்முறையில் முடிந்தது.


தகர்ந்த நம்பிக்கை

கேன்சர் என்னும் புற்றுநோய் என்ற பெயரை கேட்டவுடன், ஒவ்வொருவர் மனதிலும் ஒரு இனம்புரியாத அதிர்வு வந்துபோகும்.


இயந்திரமயமான இன்றைய வாழ்க்கை சூழலில் ரத்தப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று பல்வேறு நிலைகளில் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.


இந்தியாவை பொறுத்தவரை புற்றுநோய் என்பது சமீப ஆண்டுகளில், ஒரு மிகப்ெபரும் சவாலாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ம் ஆண்டில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.61 லட்சமாக இருந்தது.

இது கடந்தாண்டு (2025) நிலவரப்படி 15.7 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதே இதற்கான சான்று. இதேபோல் இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.


இந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு புற்றுநோய் பாதிப்புகளுக்கு ‘கீமோதெரபி’ என்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது, பொதுவாக கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் என்ற 2 மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.


இந்த மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப, வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்து விலையை உயர்த்தியுள்ளன.


இந்தியாவை பொறுத்தவரை இந்த மருந்துகள், ஒன்றிய அரசின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளது.

இதனால் மருந்துகளின் விலையை ஒன்றிய அரசு, கட்டுப்படுத்தி வந்தது. தற்போதைய சூழலில் கட்டுப்பாடான விலைக்கு இந்த மருந்துகளை விற்றால் நஷ்டம் ஏற்படும் என்று மருந்து நிறுவனங்கள் தெரிவித்தன.

அதோடு பல நிறுவனங்கள் கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் மருந்து உற்பத்தியை நிறுத்தின. இந்தநிலையில் புற்றுநோய் மருந்துகளின் உற்பத்தி செலவு, மூலப்பொருட்கள் விலை போன்றவற்றை ஆய்வு செய்து, அதன்அடிப்படையில் விலை நிர்ணயிக்க தேசிய மருந்து ஆணையத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து மருந்து நிறுவனங்கள் வழங்கிய மூலப்பொருள் தரவுகளின் அடிப்படையில் முந்தைய விலையில் இருந்து 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, மருந்து விலையை உயர்த்த தேசிய மருந்து ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் மருந்துகளின் விலை பெருமளவில் உயரும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மேலும் விலையேற்றத்திற்கு அனுமதி கேட்டிருக்கும் 78 மருந்துகளின் விவரங்களையும் தற்போது ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயை பொறுத்தவரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செல்வந்தர், ஏழை என்று எந்த பாகுபாடும் இல்லாமல் தான் இதன் பாதிப்புகள் உருவாகிறது.


இந்தச்சூழலில் புற்றுநோயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் விலை கட்டுப்படியாக இருந்தது.

இதனால் அதனை எதிர்கொண்டு சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.


ஆனால் தட்டுப்பாட்டை போக்க கட்டுப்படியான விலைக்கு அங்கீகாரம் என்ற ஒன்றிய அரசின் முடிவு, இந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது என்பதே நிதர்சனம்.


எனவே இதற்கான தீர்வை ஒன்றிய அரசு தர வேண்டியது இன்றைய அவசியம்.






குஜராத்தில் இருந்தே

இந்தியா  முழுவதும் போதை பொருட்கள்

விநியோகம்!

பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை குஜராத் மாநிலத்தில் இருந்துதான் வருகின்றன என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக ஆட்சியில் குஜராத் மாநிலம் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக மாறியுள்ளது என்றும் சர்வதேச கடத்தல் மன்னன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு பாஜக பாதுகாப்பு வழங்குகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் பேசிய கெஜ்ரிவால்,

“லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு உத்தரவைப் பிறப்பித்து, அவரை அந்தச் சிறையை விட்டு வேறு எங்கும் மாற்றக் கூடாது என்று பஞ்சாப் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. பஞ்சாப் போலீசாரால் கூட அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியவில்லை.

ஓன்றிய அரசின் முழுமையான ஆதரவு இருப்பதால்தான், சிறைக்குள் சொகுசாக இருந்துகொண்டே உலகெங்கிலும் உள்ள தனது குற்றவியல் நடவடிக்கைகளையும், கொலைச் சம்பவங்களையும் பிஷ்னோயால் எளிதாக ஒருங்கிணைக்க முடிகிறது.குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ஒரே நேரத்தில் ரூ. 21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது நமக்குத் தெரியும்.

அதுமட்டுமன்றி, குஜராத் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2,200 கிலோ போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டன என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திற்குள் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை குஜராத் வழியாகவே வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது கடத்தல்காரர்களுக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாஜக, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி வர்த்தகர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து தேர்தல் நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயைப் பறிக்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை