மக்களை எப்போது ?
📰 தவெக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை என தங்கம் தென்னரசு விமர்சனம்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூட்ட அரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
📰 விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா. ஓரிரு நாட்களில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.
📰 பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 29-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு.
📰 கடலூரில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்.
📰 அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் தரும் நன்கொடையில் பல கோடி ரூபாய் திருட்டு என புகார். 3 உயர் அதிகாரிகள் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவு.
நடிகர்-நடிகைகள் மட்டும் சந்திப்பு.மக்களை சந்திப்பது எப்போது?
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தினமும் சினிமா பிரபலங்களை சந்தித்து வருவது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மக்கள் பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள தவெக ஆட்சியில் பல நெகட்டிவ் விஷயங்கள் என இரண்டும் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபகாலமாக தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.
அதற்கேற்ப குழந்தைகள் தொடங்கி பெண் காவலர் வரை பல தரப்பினர் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டாலும் இன்னும் போதுமான தீவிரமான நடவடிக்கை தேவை என கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி முதல் 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் விஜய், அதன்பிறகு தனது இல்லத்தில் சினிமா பிரபலங்களுடனான சந்திப்பை நிகழ்த்துகிறார்.
ஆனால் இந்த சந்திப்பு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளில், முதலமைச்சர் விஜய் தினம் தினம் தனது இல்லத்தில் சினிமா பிரபலங்களை சந்திக்கிறார். இவர்களெல்லாம் தேர்தல் சமயங்களில் எங்கு இருந்தனர்.
திடீரென திரைத்துறையில் இருந்து ஒருவர் முதல்வராகி விட்டார் என்பதற்காக தங்கள் தொடர்பை பலப்படுத்திக் கொள்ள இப்படியான சந்திப்புகளை நடத்துகிறார்களா என்ற கேள்வியை முன்னெடுத்துள்ளனர்.
சினிமாத்துறையைச் சேர்ந்த தன்னை சந்திக்க விரும்பும் அனைவருக்கும் விஜய் நேரம் ஒதுக்க வேண்டியது இப்போதைக்கு அவசியம் இல்லை. காரணம் தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
மாற்றம் வேண்டும் என வாக்களித்திருக்கும் மக்களுக்காக சில கடமை கள் முதலமைச்சருக்கும் உள்ளது. எனவே இதுபோன்ற சந்திப்பை சில காலம் தவிருங்கள் என தங்கள்தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் மாதம் ஒருமுறை பெரம்பூர் தொகுதி மக்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.
ஆனால் வெற்றி பெற்று முதலமைச்சராகி ஒரு மாதமாகியும் அந்த பக்கம் நன்றி தெரிவிக்கக் கூட விஜய் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
இப்படி தேர்தலுக்கு முன், பின் விஜயின் செயல்பாடுகள் வேறும் வெற்று விளம்பரமாகவே அமைந்திருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழக அரசின் முன்னாள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது.
ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!.
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்





