இதுதான் கலைஞரின் டானிக்!

 
இதுதான் கலைஞரின் டானிக்!

_ப.திருமாவேலன்

சூன் 3 – - சூல் கொண்ட சூரி­யன் தமி­ழி­னத் தலை­வர் –

- முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாள். இது 103 ஆவது பிறந்­த­நாள்.


இது தனி­ம­னி­த­னின் பிறந்த நாள் அல்ல. ஒரு தலை­வ­ரின் பிறந்­த­நாள். ஒரு தத்­து­வத்­தின் பிறந்­த­நாள். கோடிக்­க­ணக்­கான தமி­ழர்­களை தலை நிமிர வைத்த நெம்­பு­கோ­லின் பிறந்­த­நாள். உணர்ச்­சி­யால் சூடாக்­கிய சூரி­ய­னின் பிறந்­த­நாள்.


இலக்­கி­யத்­தால் குளிர வைத்த தமிழ்­நி­ல­வின் பிறந்­த­நாள். அவர் மறை­ய­வில்லை. முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­னும் மாம­னி­த­ரின் உரு­வில் இன்­றும் வாழ்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றார்.

பெரி­யா­ரை­யும் அண்­ணா­வை­யும் நினை­வூட்­டும் நிழ­லாக கலை­ஞர் இருந்­தார்.


அந்த மூவ­ரை­யும் நினை­வூட்­டும் நம்­பிக்­கை­யாக இன்­றைய தலை­வர் இயங்கி வரு­கிறார். பெரி­யா­ராக இருந்­தா­லும் அண்­ணா­வாக இருந்­தா­லும் கலை­ஞ­ராக இருந்­தா­லும் விதையை அடுத்த நூறு ஆண்­டு­க­ளுக்­கும் சேர்த்து விதைத்­துச் சென்­ற­வர்­களே தவிர, தன்­னோடு அனைத்­தை­யும் முடித்­துக் கொண்­ட­வர்­கள் அல்ல.


அவர்­கள் விதைத்த விதைக்­குள் இருப்­பது திரா­வி­டப் பெரு­நெ­ருப்பு. தமிழ் உயிர்த்­துடிப்பு. இரண்­டுக்­கும் எப்­போ­தும் அழி­வில்லை. அதனை அழிக்க நினைத்­த­வர்­கள் புதைக்­கப்­பட்ட இடத்­துக்கு முக­வ­ரி­கள் கூட இருக்­காது. அதுவே முழு உண்மை.

வயது முதிர்ச்­சி­யின் கார­ண­மாக கலைஞர் அவர்­கள் கோபா­ல­பு­ரத்­தில் ஓய்வு எடுத்­த­போது, நினை­வாற்­றல் கூட குறைந்து வந்­தது. அப்­போ­தும் எழு­தச் சொன்­னால், ‘அண்ணா’ என்று எழு­தி­னார் என்­பது அனை­வர்க்­கும் தெரி­யும்.

நான் இப்­ப­டித்­தான் இருப்­பேன் என்­பதை 1976 ஆம் ஆண்டு கலை­ஞர் எழுதி இருக்­கி­றார் என்­ப­தைப் படித்த போது அதிர்ச்­சி­யாக இருந்­தது.


6.1.1976 ‘முர­சொ­லி’­­யில் கலை­ஞர் எழு­து­கி­றார்: ‘‘மர­ணப்­ப­டுக்­கை­யில் என் நாக்கு அசை­யும் சக்­தியை இழந்­து­வி­டு­மா­னால் என் நெஞ்­சத் துடிப்­பு­கள் கழ­கத்­தின் பெரு­மைக்­கு­ரிய கொள்­கை­களை ஒலித்­துக் கொண்டே இருக்­கும்.


அம்மா, அப்பா என்று சொல்லி என் உயிர் பிரி­யப் போவ­தில்லை. அண்ணா, அண்ணா என்று சொல்­லித் தான் இந்த உயிர்த்­து­டிப்­பு­கள் இறு­தி­யாக அடங்­கும்” என்று எழுதி இருக்­கி­றார் கலை­ஞர். 1976 ஆம் ஆண்டு எழு­தி­யது தான் 2018 இல் நடந்­தது.


இது­தான் சாதா­ரண மனி­த­னுக்­கும் இலட்­சி­ய­வா­திக்­கும் உள்ள வேறு­பாடு. இலட்­சி­ய­வாதி, தனது கொள்­கை­களை மட்­டு­மல்ல; நடத்­தை­களை­யும் தான் நினைப்­ப­தைப் போலவே தீர்­மா­னிக்­கும் சக்தி படைத்­த­வன்.

பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா மறைந்த போது, ‘இர­வ­லாக இத­யத்­தைத் தந்­தி­டண்ணா, நான் வரும்­போது கொண்டு வந்து உன் கால் மல­ரில் வைப்­பேன் அண்ணா’ என்­பது உச்­ச­கட்ட கற்­ப­னைக் கவி வரி­கள்.


கடற்­க­ரை­யில் அண்­ணா­வுக்கு அரு­கில் கலை­ஞ­ருக்­கும் இடம் பெற்­றுத் தந்­த­தன் மூலம் மெய்ப்­பித்­தார் திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின். இவை வர­லாறு மட்­டு­மல்ல. வர­லாற்­றின் பெரு­மை­கள் ஆகும்.

கலை­ஞர், பல வெற்­றி­களை உரு­வாக்­கித் தந்­த­வர்.


தோல்­வி­க­ளில் இருந்து

மீட்­டுத் தந்­த­வர். அவ­ரது வாழ்க்­கையே இன்று நமக்கு வழி­காட்­டி­யாக இருக்­கிறது. நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தலில் தி.மு.­க­ழ­கம் ஆட்சி அமைக்­கும் அள­வுக்கு வெற்­றி­யைப் பெற முடி­யா­மல் போயி­ருக்­க­லாம்.


ஆனால் கழ­கம் இருக்­கி­றது. அந்­தக் கழ­கம், அடுத்து வெற்­றி­யைப் பெற்­றுத் தரும் வலி­மை­யோடுதான் இருக்­கி­றது. தொண்­டர்­க­ளும் அதே வலி­மை­யோடுதான் இருக்­கி­றார்­கள்.


‘ஆளும் கட்­சி­யாக இருக்­கும் போது தி.மு.­க.­வுக்கு 30 பேர் தான் அமைச்­சர்­கள். எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் போது தி.மு.­க.­வின் ஒவ்­வொரு தொண்­ட­னும் அமைச்­சர் தான்’ என்று எதிர் முகா­மைச் சேர்ந்த ஒரு­வர் இணை­யத்­தில் பேட்டி அளித்­துள்­ளார்.


‘‘தொலை­வில் வெடிச் சத்­தம் கேட்­கி­றது. காது அதிர்ச்சி அடை­கி­றது. அதற்­காக காது கீழே விழுந்து விடு­வது இல்லை. அப்­ப­டித்­தான் கழ­க­மும்” என்­ற­வர் கலை­ஞர். காது கீழே விழாது.


ஆனால் வெடிச்­சத்­தம் நெடு நேரம் நீடிக்­காது. இத்­த­கைய சொற்­க­ளில்தான் கழ­கத்­தின் உயி­ரும் இருக்­கி­றது. உடன்­பி­றப்­பு­க­ளின் உயி­ரும் இருக்­கி­றது. இது­தான் கலை­ஞ­ரின் டானிக்.


மலை­யில் உருட்­டி­னா­லும், விஷம் கொடுத்­தா­லும் பிர­க­லா­தன் பிழைத்­துக் கொள்­வது புரா­ண­மாக இருக்­க­லாம். ஆனால் இது­தான் தி.மு.க. உடன்­பி­றப்­பின் வாழ்க்­கை­யும். கட்சி பெரிது என்று வாழும் கூட்­டத்தை உரு­வாக்­கி­ய­வர் கலை­ஞர்.


அந்­தக் கூட்­டத்­தைத் தக்க வைத்­த­வர் இன்­றைய தலை­வர்.


கட்சி பெரிதா, ஆட்சி பெரிதா என்ற போது கட்­சி­யைத் தலை­யா­க­வும் ஆட்­சியை கிரீ­ட­மா­க­வும் சொன்­ன­வ­ரும் அவர் தான். ‘தலை இருந்­தால் கிரீ­டத்தை எப்­போது வேண்­டு­மா­னா­லும் வைத்­துக் கொள்­ள­லாம். ஆனால் கிரீ­டத்தை மட்­டும் வைத்­துக் கொண்டு தலை­யைத் தேட முடியாது’ என்­றார்.


இப்­போது தலை என்­னும் கட்சி இல்­லாத கும்­ப­லி­டம் தான்

கிரீ­டம் சிக்கி இருக்­கி­றது. அத­னால்தான்,

‘ஆட தெரி­யா­மல் தெரு கோணல்’ என்று சொல்­ப­வர் கையில் தமிழ்­நாடு சிக்கி இருக்­கி­றது.

யார் கையில் ஆட்சி அதி­கா­ரம் இருந்­தா­லும் மையப் பொரு­ளாக தி.மு.க.வே இருக்­கி­றது. ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் தமிழ்­நாட்­டின் நிரந்­தர தலைப்­புச் செய்­தி­யாக தி.மு.க.வை ஆக்கி வைத்­தார் கலை­ஞர். இன்­றும் பல­மு­னைத் தாக்­கு­த­லில் தி.மு.க. இருக்­கி­றது. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் தாக்­கப்­ப­டு­கி­றார். எதி­ரி­க­ளும் தாக்­கு­கி­றார்­கள்.


பழைய நண்­பர்­க­ளும் தாக்­கு­கி­றார்­கள். தாக்­கு­த­லி­னால் ஏற்­ப­டும் பய­னும் தி.மு.க.வினால் கிடைப்­பது தானே?

தலை­வ­ரால் அவர்­க­ளுக்­குக் கிடைத்­ததுதானே?


இப்­போது கலை­ஞர் சொல்லே நினை­வுக்கு வரு­கி­றது. ‘‘இரா­மன், அயோத்­தி­யில் இருந்­த­வரை இரா­மா­ய­ணம் இரா­ம­னைச் சுற்­றியே எழு­தப்­பட்­டது. இரா­மன் காட்­டுக்­குப் போன பிறகு பர­த­னைச் சுற்றி எழு­த­வில்லை இரா­மா­ய­ணம்.


இரா­மா­ய­ணம் எழு­திய வால்­மீ­கி­யும், கம்­ப­னும், துள­சி­தா­ச­ ரும் காட்­டுக்­குப் போய் விட்­டார்­கள். அதைப்­போ­லவே கழ­கத்­தைச் சுற்­றியே அனைத்­தும் நடக்­கி­றது” என்­றார் கலை­ஞர்.


இது­தான் கலை­ஞ­ரின் டானிக்!


அவ­ரது சொல்லை ஆயு­த­மாக்கி வெல்­வோம்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை