பூச்சுற்றும் வெள்ளை அறிக்கை?

🔺 தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 9 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை. நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்.🔺 தமிழ்நாட்டில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிவதால் விவசாயிகள் வேதனை. கடந்த ஆண்டு இதே நாளில் 114 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக சரிவு🔺 ஹார்முஸ் நீரிணையை கடக்கும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தல்.🔺 ஜூலை 1-ம் தேதி முதல் திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு.🔺 ஒப்பந்தம் பிடிக்கவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும். ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.வேறு வேலை,வெட்டியேகிடையாதா?வெள்ளை அறிக்கைகள்!

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற அதே மேடையில், 'நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்' எனச் சினிமாவில் பேசுவதுபோல் வீரவசனம் பேசினார்.

அவரது வீரவசனத்தின்படி நேற்று வெள்ளை அறிக்கையைத் த.வெ.க. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். 

அதில், 'தி.மு.க. அரசு முறைகேடு செய்துள்ளது' என்று இருக்கும் என்று பார்த்தால், 'மக்களுக்கான திட்டங்களுக்காகவே தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது' என பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'நிதி இல்லை; அதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது' என்ற தொனியிலேயே அந்த வெள்ளை அறிக்கை இருந்தது. 

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையோடு ஒப்பிட்டுத் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைத்தளத்தில் தெளிவாக விளக்கியுள்ளது."அதில், ”2021 திமுக அரசின் வெள்ளை அறிக்கை:

This report is not an attempt to create a rationale for diluting or abandoning the commitments made to the people during the recently concluded elections.

அதாவது, "நிதி நெருக்கடி இருந்தாலும், மக்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தோ, எங்களுடைய கடமைகளில் இருந்தோ நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம், அதை தட்டிக்கழிக்க இந்த அறிக்கையைப் பயன்படுத்த மாட்டோம்" என்று துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு!

2026 தொடைநடுங்கி  அரசின் வெள்ளை அறிக்கை:

the fiscal space available for taking up new programmes during the year can only be very minimal.

அதாவது, இந்த 'மங்குனி' 24ஆம் புலிகேசி அரசோ, "ஐயோ, எங்ககிட்ட காசு இல்ல, நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அதனால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி ரொம்ப ரொம்ப கம்மி"னு பம்மி, தங்களின் இயலாமையை மூடிமறைக்க இந்த வெள்ளை அறிக்கையையே ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது!

ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட நிதி நிலைமை எப்படி இருக்குனு தெரியாமலா ஓட்டுக் கேட்டீங்க விஜய்? 

அப்போதெல்லாம் ஜோசியர் உங்ககிட்ட சொல்லலையா? 

நிறைவேற்ற முடியாத அத்தனை போலி வாக்குறுதிகளையும் வாரி இறைத்துவிட்டு, இப்ப நாற்காலி கிடைச்ச உடனே "பட்ஜெட்ல இடமில்லை"னு காதுல பூ சுத்துறீங்க!

நிர்வாக ஆளுமையோ, பொருளாதாரப் புத்தியோ இல்லாத ஒரு 'முதிர்ச்சியற்ற' கத்துக்குட்டி அரசாங்கம் தமிழ்நாட்டின் அரியணையில் ஏறியதன் அப்பட்டமான விளைவு தான் இந்த நிதித் தப்பியோட்டம்!

விவசாயிக்குத் தண்ணீரும் வாங்கித் தரத் துப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கத் துப்பில்லை, இப்ப கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் துப்பில்லை!" என தெரிவித்துள்ளது.ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்? 

 மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (யுபிடி) கட்​சி​யில் உள்ள எம்​.பி., எம்எல்​ஏ.க்​களை தங்​கள் பக்​கம் இழுக்க மகா​ராஷ்டிர துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்​களாக முயன்று வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகின.


சிவசேனா கட்​சி​யின் (உத்​தவ்) எம்​எல்​ஏ.க்​களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டேவுடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், வரும் நாடாளு​மன்ற மழைக்காலக் கூட்​டத் தொடருக்கு முன்​பாக அவர்​கள் சிவசே​னா​வில் இணையக்கூடும் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.


சிவசேனா​வின் (ஏக்​நாத் ஷிண்​டே) இந்த நடவடிக்​கை, ஆபரேஷன் டைகர் என அழைக்​கப்​படு​கிறது.


இதனிடையே, கடந்த 14ம் தேதி முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்கரே கூட்​டிய அவசர ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மொத்தமுள்ள 9 மக்​களவை உறுப்​பினர்​களில் 5 பேர் கலந்து கொள்​ள​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

இந்​தச் சூழ்​நிலை​யில், சிவசேனா (உத்​தவ்) எம்​.பி.க்​கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோ​ருடன் இணைந்து சஞ்​சய் ராவத் டெல்​லி​யில் செய்தியாளர்​களைச் சந்​தித்​தார்.


அப்​போது அவர் கூறிய​தாவது: சிவசேனா எம்​.பி.க்​கள், எம்எல்ஏ.க்கள் யாரேனும் கட்​சியை விட்டு வெளியே செல்ல விரும்பி​னால் அவர்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு செல்லட்​டும். எங்​கள் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் குறித்து இது​போன்ற செய்​தி​கள் தற்​போது வரு​கின்​றன.


இதற்கு அவர்​கள் விளக்​கம் அளிக்க வேண்​டும். இந்த எம்​.பி.க்​களின் வெற்​றிக்​காக எங்​கள் கட்சித் தலை​வர் உத்​தவ் தாக்​கரே ஓய்​வின்றி உழைத்​துள்​ளார். நாங்​கள் அவர்​களை சும்மா விட மாட்​டோம்.


கட்சி மாறும் எம்​.பி.க்​களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. மேலும், எம்​.பி.க்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.15 கோடி முன்​பண​மாகக் கொடுக்​கப்​பட்​டுள்​ள​தாக எனக்கு தகவல் கிடைத்​துள்​ளது. குறைந்​தது அவர்​களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்​களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்​படு​கிறது.


மேலும் அவர்​களை அழைத்​துச் செல்ல 3 தனி விமானங்​களும் ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளன.


இந்த உத்​தர​வாதத்தை அடுத்தே அவர்​கள் நான்​டெட், புனே உட்பட 3 இடங்​களில் இருந்து தனி விமானம் மூலம் சென்​றுள்​ளனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்​துக்​குக் கூட தகு​தி​யானவர்​கள் கிடை​யாது.


சிவசேனா கட்சி என்ற பெயர் காரண​மாகவே இவர்​களுக்கு இவ்வளவு மதிப்​பு. எங்​கள் கட்சி சார்​பில் கொறடா உத்​தரவு பிறப்பிக்​கப் ​பட்​டுள்​ளது. நாடாளு​மன்​றக் கட்​சிக் குழுக் கூட்டத்தை நாளை கூட்​டி​யுள்​ளோம்.


இந்​தக் கூட்​டத்​தில் பங்கேற்காத எம்​.பி.க்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். எங்​கள் கட்​சி​யின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்​பாக மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.


இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அஇஅதிமுக வும் இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கலாமே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை