சதுப்பு நிலம்
"பள்ளிக்கரணை" சதுப்பு நிலம்
பொதுவாகவே, மழைக்காலங்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.
இப்படியான சூழ்நிலையில், இந்த சதுப்பு நிலமானது அதிகப்படியான மழை நீரை உறிஞ்சி சேமிப்பதால் வெள்ளப் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பல்வேறு வகையான பறவைகள், மீனினங்கள், தாவரங்கள், உயிரினங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், 100க்கும் மேற்பட்ட வனமரங்கள் இருப்பதால் நகரத்தின் வெப்பநிலையையும் குறைக்கு உதவுகிறது.
எனவே, இந்த பகுதியை ஒட்டிவாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு சர்வதேச ஈரநிலப் பகுதிகளை பாதுகாக்கும் ‘ராம்சார் அங்கீகாரம்’ கொடுக்கப்பட்டது.
இந்த ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய கடமையாகிறது.
இந்நிலையில், இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த சதுப்பு நிலப் பகுதியில் 1,705 ஏக்கர் சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தவிர 1,375 ஏக்கர் சதுப்பு நிலத்தை அரசு துறைகளுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு தனியாருக்கும் ஒதுக்கப்பட்டது.
அவ்வாறு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனத்தால் முறைக்கேடாக வழங்கப்பட்ட நிலம் தான் சர்வே எண்கள் 453, 495/2C, 496, 497 & 498. இங்கு, ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் 1,250 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
இதையடுத்து, பிரிகேட் மார்கன் நிறுவனத்தின் ஐந்து சர்வே எண்கள் இருக்கும் பகுதிகளும் ராம்சார் சதுப்பு நிலப் பகுதி இல்லை என்று பொய்யாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடந்த 20 ஜனவரி 2025 சுற்றுச்சூழல் துறையும் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை (EC Identification No. EC23B3803TN5460899N) வழங்கியது.
சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) என்பது ஒரு புதிய திட்டம் அல்லது கட்டுமானப் பணி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாயச் சான்றிதழ் ஆகும்.
இதையடுத்து, கட்டுமானத்திற்கான பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. வழக்குகளும் போட்டப்பட்டன.
இப்படியான சூழ்நிலையில் தான், இந்த பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அதிரடியாக ரத்து செய்து அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

17 வது'
சட்டப்பேரவைக் கூட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கி, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.
தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
* கண்ணாடியை பார்த்து பேசி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
* இன்று நடைபெறும் குற்றச்செயல்களில் ஆளுங்கட்சியினரே ஈடுபடுகின்றனர்.
* நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி இருக்கிறார்கள்.
* முதல்வன் என்றாலே மு.க.ஸ்டாலின் பெயர் நினைவுக்கு வரும் என்பதால் பெயரை மாற்றி உள்ளனர்.
* உண்மையான பிரச்சனைகளை பற்றி முதலமைச்சர் எப்போது பேசுவார்.
* திமுக அரசின் சாதனைகளை தவெக அரசின் சாதனைகளாக ஸ்டிக்கர் ஒட்டி, காப்பி பேஸ்ட் அரசாக மாறி உள்ளது.
* தமிழக அரசின் சாதனைகளாக ஆளுநர் வாசித்தது கடந்த 30 நாளில் தவெக அரசு செய்த சாதனையா?
* மாற்றம் என ஆட்சிக்கு வந்தார்கள், மாட்டிக்கிட்டோம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
* இன்னும் பிரசார மூடிலேயே உள்ளார் முதலமைச்சர். மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காக கொஞ்சம் வாய் திறங்கள்.
* முதலமைச்சர் தான் எப்போதாவது பேசுவார் என்றால் அமைச்சர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
* பீரோ புல்லிங் போல் அதிமுக எம்எல்ஏக்களை புல்லிங் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.
இவ்வாறு அவர் கூறினார்.





