அரசுப்பள்ளியில்....,

📄 தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு, உயிர் கொல்லும் சூழ்ச்சி ஆகியுள்ளதாக உதயநிதி வேதனை. நீட் ஒழிப்பிற்காக திமுக அரசு எடுத்த சட்டப் போராட்டத்தை அரசு தொடர வலியுறுத்தல்.📄 திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி. அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதால் பெற்றோர் அதிருப்தி.📄 2021-ல் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கோவை மாநகராட்சியில் முறைகேடு. புறவாசல் வழியாக நியமிக்கப்பட்ட 54 பேரை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை. பகலில் வெயில் வாட்டிய நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.📄 கோவையை தொடர்ந்து சேலத்திலும் நீட் மறுதேர்வால் விரக்தியடைந்து மேலும் ஒரு மாணவி மரணம். எடப்பாடி அருகே வீட்டில் தனித்து இருந்த மாணவி தற்கொலை. 




அட்லீயும்,,சட்னியும்!

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே  சுவாரசியமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது பேசிய தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளை இயக்குனர் அட்லியின் திரைப்பட உருவாக்கத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில்:

“இயக்குனர் அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை ஆங்காங்கே எடுத்து, அதனை வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார். அதேபோலத்தான் முந்தைய எங்கள் ஆட்சியின் சாதனைகளை வைத்துக்கொண்டு தற்போது இந்த ஆட்சி நடத்தப்படுகிறது.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு ட்ரெய்லர் ஹிட் அடிக்க வேண்டும் என்றால், அதில் காட்சிகள் மிகவும் சுருக்கமாகவும் சுறுசுறுப்பாகவும் (Crisp) இருக்க வேண்டும். அதேபோல, காலங்களும் மாறும், காட்சிகளும் விரைவில் மாறும்” என்று விமர்சித்தார்.

தி.மு.க. உறுப்பினரின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாக பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்:

“ சட்டசபையில் இயக்குனர் அட்லீ குறித்தும், எடிட்டிங் குறித்தும் பேசுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. அட்லிக்கும் இந்த சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்?

 வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

http://அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மீண்டும் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், 

“உங்களையும் நான் ‘எக்ஸ்’ தளத்தில் பின்தொடர்கிறேன், இயக்குனர் அட்லீயையும் பின்தொடர்கிறேன்.

 அதனால், சட்டசபையில் நான் அட்லீ குறித்தும் பேசுவேன், தேவைப்பட்டால் சட்னி குறித்தும் பேசுவேன்” எ நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் பதிலளித்தார்.

திரைப்பட இயக்குனர் அட்லி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை மையப்படுத்தி, சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நடந்த இந்த விவாதம் அவையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



அதிக ஒலி எழுப்பிய 35 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் 'சைலன்சர்கள்' பொருத்தப்பட்ட 35 இருசக்கர வாகனங்களைப் போக்குவரத்துப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்;

குறிப்பாக, கல்லூரிப் பகுதிகளில் பைக்குகளில் அதிவேகமாகவும் அதிக சத்தத்துடனும் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மொத்தம் சுமார் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க. நிர்வாகி

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணை செயலாளர் அகிலன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதோடு, குன்னலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் அதிகாரத் தொனியில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது;

மக்கள் பிரதிநிதியோ அல்லது அரசு அதிகாரியோ இல்லாத ஒரு நபர், அரசு விதிமுறைகளை மீறி பள்ளி வளாகங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை