தொடரும் குளறுபடிகள்!

அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையார் தின நல்வாழ்த்துக்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு.  நீட் தேர்வு ரத்து கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை; கைது செய்ததால் மாணவர்கள்-போலீசாரிடையே தள்ளுமுள்ளு: பெண் காவலர்கள் உள்பட 5 பேருக்கு காயம் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகன் கொலை: மீரட்டில் தாய் குர்பித் கவுர் என்பவருடன் வாலிபர் கைது கோவை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சார பாடல் இசைக்கப்பட்டதால் எதிர்ப்பு.தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அத்தியாவசியச் சேவையை,  எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக்கூடாது  - CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு .

தொடரும் நீட்தேர்வு குளறுபடிகள்: தவறுகளை திருத்திக்கொள்ளாத பாஜக அரசு

நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தேசிய தேர்வு முகமை நீட் மறு தேர்வுக்கான மையத்தை ஒதுக்கி ஹால்டிக்கெட் வெளியிட்டுள்ளது.


மறுதேர்வு நடைபெற ஒரு நாளே உள்ள நிலையில் (ஜூன் 21 ) இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலை களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது.


அப்துல்லா முகமது தாலிப் என்ற மாணவர் தனது மறுதேர்வுக்கான ஹால்டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார்.


அதன் பிறகு தேர்வு மையம் எங்குள்ளது என பார்த்தபோது, இந்தியாவில் தேர்வு மையம் ஒதுக்குவதற்குப் பதிலாக, அவருக்கு அபுதாபியில் உள்ள மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.


நாக்பூர், வர்தா மற்றும் பண்டாரா ஆகிய நகரங்களையே தேர்வு செய்திருந்த நிலை யில் வெளிநாட்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாஸ்போர்ட் கூட இல்லாத நிலையில், எப்படி வெளிநாட்டிற்குப் பயணம் செய்து தேர்வு எழுது வது என்ற பயமும் அவரை சூழ்ந்துள்ளது.


அந்த ஹால்டிக்கெட்டின் படம் இணை யத்தில் மிக வேகமாக பரவி நாடு முழுவதும் கடும் கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி யது. அதன் பிறகு தான் இந்த விவகாரம் உடனடி யாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.


தேசிய தேர்வு முகமை தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


மேலும், மாணவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, இந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, முறையான இந்தி யத் தேர்வு மையத்துடன் கூடிய புதிய ஹால்டிக் கெட் சில மணி நேரங்களில் வழங்கப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.


தனியார் ஊடகத்திடம் பேசிய அம்மாணவ னின் தந்தை டாக்டர் முகமது தாலிப், ஹால்டிக் கெட்டைப் பார்த்ததும் என் மகன் அழத் தொடங்கி விட்டான் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.


இந்நிலையில் நாடு முழுவதும் எத்தனை நீட் தேர்வர்களுக்கு இப்படி குளறுபடி நடந்துள் ளாது என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் தங்களது தனிப்பட்ட விவரங்கள், தேர்வு மையங்கள் அல்லது பிற முக்கிய விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கு மாறு தேர்வு முகமை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


நீட் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வுகளில் தொடர் குளறுபடிகள் இயல்பான ஒன்றாக மாறி யுள்ளது. கேள்வித்தாள் கசிவுக்கு இதுவரை போதிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுக்கவில்லை.


ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மீண்டும் நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.


நீட் கேள்வித்தாள் கசிவை தடுக்க ராணு வத்தின் உதவியுடன் கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டன. மோசடிகளை தடுக்க மாணவர்கள் தேர்வறைக்குள் செல்லும் முன் மிகக்கடுமையான சோதனைக்கு ஆளாக் கப்படுகிறார்கள்.

ஆனாலும் குளறுபடிகளும் மோசடிகளும் தொடர்கின்றன.


பாஜக அரசு தனது தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என கடுமையாக எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை