எல்லாமே உன்னாலதானே...?
சிங்கப்பெண்பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது. இதை பல ஆண்டுகளாக கண்டுக்காமல் விட்டது யார் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை..
அது உங்களுக்கே நன்றாக தெரியும்.. அதை பற்றி இப்போது பேசி எந்த பலனும் இல்லை.. பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.” என்றுவிஜய் பேசியிருந்தார்..
இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரிக்க முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம் என மறைமுகமாக பழி போடும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே, தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” என்று குறிப்பிட்டுள்ளார்..
தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரிக்க முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம் என மறைமுகமாக பழி போடும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே,

— M Appavu – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) June 10, 2026
மேலும் முதல்வர் விஜய் சிங்கப்பெண் அதிரடி படை தொடக்க விழாவில் பேசிய வீடியோவையும், மாஸ்டர் படத்தில் மது பானம் குடிக்கும் காட்சியையும், அழகிய தமிழ்மகன் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்..
"புஸ்ஸி " வேளை?
முதல்வர் விஜய் தலைமையில் மூன்று கட்டமாக 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு சய்து 15 நாட்கள் கடந்துவிட்ட பிறகுஅரசு சார்பில் மூன்று நிலைகளில் பணியாற உத்தரவுகளை வழங்கவிடாமல் புஸ்ஸி ஆனந்த் முட்டுக்கட்டை போடுகிறார்.
பொதுவாகவே புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்துறையைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், துறையின் செயல்பாடுகள் திட்டங்கள் குறித்து விளக்கி கூறுவார்கள். துறை அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையேயான அன்றாட பணிகளை முறைப்படுத்த ஸ்பெஷல் பர்கனல் அசிஸ்டென்ட் (ஸ்பெஷல் பி.ஏ.). சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட் சீனியர் ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட் என மூன்று நிலைகளில் அரசு அதிகாங்கள் நியமிக்கப்படுவார்கள்.
இப்படி நியமிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றக்கூடிய அண்டர் செகரட்டரி செக்ஷன் ஆபிஸர் உதவி செக்க்ஷன் ஆபீஸர் அந்தஸ்தில் உள்ள அரசு பணியாளர்களாகவே இருப்பார்கள் அரசின் பொதுத்துறை மூலம் இந்த அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பணி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இப்படி அமைச்சர்களுக்குரிய மூன்று கடத்தும் ஐ.எம். பி.ஏக்கள் துறையை அதிகாரிக்கு அமைச்சருக்கும் இடையே இருந்து துறையின் கோப்புகள், அன்றாட செயல்பாடுகள் தங்குதடையின்றி நடக்க செய்வார்கள்
இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் அறைகளில் அரசுப் பணியில் உள்ள அரசு அலுவலர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்வார்கள் இப்படிப்பட்ட பி,ஏக்கள் நியமனம் அமைச்சராக பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே நடந்து முடிந்துவிடும் எந்தவொரு குழப்பமோ தாமதமோ இருந்ததில்லை.
ஆனால் ஜெயலலிதா இருந்த வரையில் அவரது ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டிய பி.ஏக் களை அவர்களாகவே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. முதல்வரின் கனிப்பட்ட செயலாளர்களுக்கு அந்த அங்கீகாரத்தை ஜெயலலிதா வழக்கியிருந்தார் அதன்படி பொதுக்குறை அலுவலகம் மூலமாக அமைச்சர்களிடம் பி.ஏ.வாக பணிபுரிய தகுதியுடைய அல்லது விருப்பம் தெரிவிக்கிற தலைமைச் செயலக அலுவலர்களை, துறை வாரியாகத் தேர்வு செய்தவர்களுக்கு மூன்று நிலைகளிலும் பி.ஏ.எக்களை நியமிப்பார்கள். இந்த முறையிலும் தாமதம் ஏற்பட்டது இல்லை.
ஆனால் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் புதிய அரசில் அமைச்சர்களுக்கு பி.ஏ.க்கள் நியமனம் செய்யும் விவகாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஊரக வளர்ச்சித் துறை புஸ்ஸி ஆனந்த் என்பதுதான் தலைமை அதிகார்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர்களுக்கு பி.ஏ க்கனை நியமிக்கும் விவகாரத்தை புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்திருக்கிறார் விஜய்.
அப்போது பி.ஏக்கள் நியமனத்தில் திமுகவினராகவோ,ஆதரவாளராகவோ இராமல்பார்த்துக்கொள்ளசொன்னாராம். பெற்ற அமைச்சர்களான அருண் கே.ஏ செங்கோட்டையன் உள்ளிட்ட சிலரிடம் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள பி.ஏக்கள் மட்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வராமல் விட்டுவிட்டார் ஆனால் மற்றவர்களின் பிஏ.க்கள் யார் யார் அவர்களில் பின்னணி என்ன என துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணைக்கே இருபது நாட்கள் எடுத்துக்கொண்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த் முடிந்து ஒரு மாதம் கடத்துவிட்ட பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்குரிய பி.ஏ.க்கள் நியமனத்தில் காலதாமதம் செய்துவருகிறார்.
இதனால் துறைச் செயலரளர்களிடம் இருந்து வரும் கோப்புகள் ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி கையெழுத்திட முடியாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் துறைச் செயலாளர்களிடம் இருந்து வரும் கோப்புகளை ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி கையெழுத்திட பிறகுதான் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க முடியும்.
அதன் பிறகு அந்த கோப்பு முதல்வரின் அனுமதி பெறுவதற்கு அனுப்பிவைக்கப்படும். கடந்த 15 நாட்களாக முதல்வர் விஜய்யின் அனுமதிக்காக பெரும்பாலான அமைச்சர்களிடம் இருந்து துறை வாரியாக கோப்புகள் அனுப்பப்படாமல் அமைச்சர் கள் அறையிலேயே முடங்கிக் கிடக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தவிர அனைத்து அமைச்சர்கள் மீதும் சந்தேகப்படுகிறார். குறிப்பாக அமைச்சர்களாகியுள்ள அனைவருமே தனது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுவிடக் கூடாது என கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
புதிய அமைச்சர்களுக்கு பி.ஏ.க்களை நியமிக்கும் பணி இதற்கு முந்தைய காலங்களில் இவ்வளவு காலதாமதம் ஆனதே கிடையாது இந்த விவகாரத்தில் பிடிவாதாமாக செயல்படும் புஸ்ஸி ஆனந்த்திற்கு எடுத்துச் சொல்லப்போவது யார் என்றே தெரியவில்லை என்று விரிவாக கூறினார்கள்
இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு !
ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக தலைமைச்செயலகம் ,!
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழைக்கும் மக்களுக்கு, வாக்கு வங்கி – போலி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக எவ்வித நிரந்தரத் தீர்வையும் பெற்றிட இயலாது என்பதற்கு உலகளாவிய எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு தேர்தல் முறைகேடுகளும், தில்லு முல்லு மோசடிகளும், அரசியலற்ற தற்குறி அரசியலும், கவர்ச்சி மோகமும், ஊழலும், கொள்ளையடிப்பதற்காகவே அரசியலில் பிரவேசித்து, கொள்கையற்ற அப்பட்டமான பிழைப்புவாதிகளாக கட்சி மாறும் இழி பிறவியினராய் வலம் வரும் ஆயிரக்கணக்கானோரை அனைத்துவித முதலாளித்துவ கட்சிகளிலும் தொடர்ந்து அவதானித்தே வருகிறோம்.

எண்ணிக்கை களில் தான் சற்று வேறுபாடுகளைக் காணலாம். இப்படிப்பட்ட அனைத்துவித மானங்கெட்ட பிழைப்பிற்கு அதிகார வர்க்கமும் சகல வழிகளிலும் துணை நிற்பதையும் காண்கிறோம்.
அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து மாநில அளவில் ஒன்றிய அளவில் நாட்டை – மக்களைச் சீரழிக்கின்றன. திடீர் திடீரென தலைவர்கள்/ கட்சிகள் முளை விடுவதும், ‘அதுகளுக்கு’ எண்ணற்ற பட்டங்களைச் சூட்டி, ஒளிவட்டப் பிம்பத்தை உருவாக்குவதிலும் அரசியல் பிழைப்புவாதிகள் முன்னணிப் பாத்திரம் வகிப்பது ஒரு புறம்; திரைப்படக் கவர்ச்சி மோக பொறுக்கி அரசியல் மூலமாக கவர்ந்திழுக்கப்பட்ட ரசிக மனோபாவம் கொண்ட இருபால் ரசிகர் கூட்டம் மறுபுறம்!
அதன் வளர்ச்சிப் போக்கே இன்று தமிழ்நாடு, நடிகரும் அரசியலற்ற ‘பொறுக்கி’ அரசியல் வாதியுமான விஜய் கரங்களில் ஆட்சி அதிகாரம் அகப்பட்டுக் கொண்டு சீரழிவதை அவர் பதவியேற்ற ஒரு மாதம் முடிவதற்கு உள்ளாகவே அவதானிக்க முடிவதைக் காண்கிறோம்.
உறுதியாக பாசிசம் குறித்து எள்ளின் முனையளவும் அறிந்திராத விஜய்யும்கூட பாசிஸ்டாக பரிணமிப்ப தற்கான வாய்ப்புகள் கூடுதலாகவே உள்ளன என்பதை உணர முடிகிறது.
_பேசுவோம்









