அதானிக்கு காலக்கெடு




நண்பர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறை!

ரகசிய கூட்டங்களில் கலந்து கொள்வது ஏன்? வில்சன் கேள்வி

ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்? என்று தி.மு.க எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

த.வெ.க அரசு தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அரசு பதவிகளை வழங்குவதாக கருத்து பரவி வருகிறது. முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்துக்கான அரசாணை திரும்பப் பெறப்பட்டது.அதேபோல், சமீபத்தில் முதல்வரின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே அது பொதுவெளியில் வெளியானது விவாதத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, தயாரிப்பாளர் வெங்கட் ரமணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆனால், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாதது த.வெ.க அரசின் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்ப வழிவகுத்துள்ளது.


இந்நிலையில், தி.மு.க எம்.பி வில்சன், முதல்வர் விஜய் தனது உதவியாளர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிரக் கேள்விகள் எழுந்துள்ளன.


ஆந்திர மாநித்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய உதவியாளர்களும் நண்பர்களும் ஆவர்.


இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே அவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.


அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்?

முதல்வர் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.


இத்தகைய நபர்களை இதில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள்  மற்றும் அவரது ரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றைப் பின்பற்றுவது குறித்து தீவிரக் கவலைகளை எழுப்புகிறது.

இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை முதல்வர் பகிரங்கப்படுத்த வேண்டும்;


அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதானிக்கு காலக்கெடு


:இந்திய அரசு அதிகாரிகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி குழுமத்தின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.


மேலும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டை பெற்றதாக கெளதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் கெளதம் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.


இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, மேலும் கூடுதல் நேரத்தை செலவிட அமெரிக்க நீதித்துறை விரும்பவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் புரூக்ளினை தளமாக கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோஃபிஸிடம் இந்த வழக்கை உடனடியாக முறைப்படி தள்ளுபடி செய்யுமாறு அதானி வழக்கறிஞர்கள் வாதாடினர்.


இதையடுத்து தொழிலதிபர் கெளதம் அதானி மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியான தீர்ப்பு வழங்க அமெரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.


மேலும் இந்த வழக்கை கைவிடுவதற்கான தங்களது முடிவை நியாயப்படுத்தும்படியும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்தான ஒரு விரிவான விளக்கத்தை அதானி தரப்பு வழக்கறிஞர்கள் ஜூலை 13, 2026-க்குள் சமர்ப்பிக்கும்படியும் காலக்கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை