சர்சைகள் நாயகன். !

 சென்னை மணலியில் ஒரு வாரமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார்; தவெக அரசை கண்டித்து மணலி காமராஜர் சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.தேவையின்றி மக்கள் மீது திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியல்: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்குற்றால அருவியில் குளித்தவர்களை அலற வைத்த பாம்பு! '  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சுற்றுலாப் பயணிகள்.கன்னியாகுமரியில் நிறத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகதாக வந்த பள்ளி வாகனம் மோதி விபத்து.8மாணவர்கள் காயம்.சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது: போலீசார் நடவடிக்கை.உத்தரப்பிரதேசத்தின் கஸ்கஞ்சில் விமானம் விபத்துக்குள்ளானதில், பயிற்சி பெண் விமானி காயமடைந்தார் .



ஜன(சர்ச்சைகள்)நாயகன்!

ஒன்றிய, மாநில அரசுகளின் முக்கிய நிகழ்வுகளில் பாலமாக செயல்படும் வகையில் மாநில அரசுகள் சார்பில் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம்.


இவர் ஒன்றிய கேபினட் அமைச்சரின் அந்தஸ்தில் இருப்பார். ஒன்றிய அமைச்சகங்கள், நிதிஆயோக் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதி ஆகியவற்றை பெற்றுத்தரும் பணியில் ஈடுபடுவார்.


முந்தைய திமுக அரசில் ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். இதேபோல் திமுக ஆட்சியில் கம்பம் செல்வேந்திரன், அதிமுக ஆட்சியில் ஜக்கையன், தளவாய்சுந்தரம் என்று நமது மண்ணின் மைந்தர்கள் பலர், டெல்லி சிறப்பு பிரதிநிதிகளாக பணியாற்றினர்.

தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக யாரை நியமிக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.


இப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் அரசு தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில் யாருமே கேள்விப்படாத ஒருவர் டெல்லி சிறப்பு பிரதிநிதியா? இந்த வெங்கடநாராயணா என்பவர் யார்? என்ற விவாதம் மக்கள் மன்றத்தில் பரவலானது.

கர்நாடகா திரைப்பட தயாரிப்பாளரான இவர், விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்தவர் என்பது தெரியவந்துள்ளது.


விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர், முதல்வர் பதவியேற்க ஆளுநரை சந்தித்தபோது உடன் சென்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது கூடுதல் தகவல். ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக இருந்து நமது மாநிலத்தின் பெரும் திட்டங்களுக்கான நிதியை பெற்றுத்தந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதில் ெடல்லி சிறப்பு பிரதிநிதியின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுமட்டுமன்றி தமிழகம் சார்ந்த காவிரி உரிமை, கலாசார பாதுகாப்பு என்று உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் மக்களின் குரலாக அவர் ஒலிக்க வேண்டும்.


இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வெங்கடநாராயணா, கர்நாடகாவின் பெங்களூரில் சட்டம் படித்து தற்போது சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.


அதைவிட முக்கியம் இவர் தற்போதைய கர்நாடகா முதல்வர் சிவகுமாரின் பினாமியாக செயல்பட்டவர்.இவர் படத்தயாரிப்புகளில் அவர் பணம்தான் மூலதனமாம்.


அவரை நமது தமிழ்நிலத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

நமது உணர்வுகளை அறிந்து, உரிமைகளை பெற்றுத்தர சிறப்புடன் பணியாற்றும் எத்தனையோ பிரதிநிதிகள் இங்கு உள்ளனர்.


அவர்களுக்கு முதல்வர் விஜய் வாய்ப்பளித்து கவுரவப்படுத்தி இருக்க வேண்டும் என்பது உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக இப்போது ஒலிக்கத்துவங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க தனது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட்டிற்கு அரசியல் ஆலோசகர் பதவியை வழங்கிய விஜய், கடும் எதிர்ப்பால் அதை திரும்ப பெற்றார்.


அதேநேரத்தில் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருந்த ஜெகதீஷ்பழனிசாமிக்கு முதல்வரின் தனிச்செயலாளர், அரசியல் வியூகவகுப்பாளர் ஜான்ஆரோக்கியசாமிக்கு முதல்வரின் அரசியல் ஆலோசகர், நண்பர் விஷ்ணுரெட்டிக்கு முதல்வரின் அரசியல்ஆலோசகர் (பொதுநிகழ்ச்சி) என்று உயர்பதவிகளை அடுத்தடுத்து ஓசையில்லாமல் வழங்கியுள்ளார்.


அந்தவகையில் தற்போது தனக்கு நெருக்கமான கன்னட சினிமா தயாரிப்பாளரை தமிழகத்தின் சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது சர்ச்சையின் உச்சமாகியுள்ளது என்பதே உண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை