யார் அந்த ராசா ?

 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியபோது, தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக மட்டுமே அறிவித்துக் கொண்டார்.

 காரணம், அந்த இடம் பெரியாருக்கானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். திராவிடர் கழகத்தின் வழிக்காட்டியாக தந்தை பெரியார் எப்போதும் நீடிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்கானது என்று அப்பீடத்தை காலியாகவே வைத்திருந்தார் அண்ணா. 

ஆனால், அண்ணா மறையும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக அவர் எடுக்கும் முடிவே கட்சியின் முடிவாக இருந்தது. அண்ணாவின் மறைவு வரை திமுகவின் முழு அதிகாரத்தையும் கொண்ட ஒரு பதவி என்றால், அது பொதுச் செயலாளர் பதவி தான். 

அது திமுகவைவிட அதிமுகவில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்பதே நிதர்சனம்.

அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராக மாறிய நிலையில், அனைத்து அதிகாரங்களும் தலைவருக்கே சென்றது.

 இருந்தாலும், பொதுச் செயலாளருக்கே நிர்வாகிகள், வேட்பாளர்கள், நடவடிக்கைகள் என அனைத்தையும் கையாலும் அதிகாரம் வழங்கப்பட்டது. 

அண்ணாவிற்கு பிறகு திமுகவின் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன்(1969 – 77), அன்பழகன் (1977 – 2020), ஆகியோர் இருந்த நிலையில், 2020 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் இருந்து வருகிறார். 

துரைமுருகனை பொறுத்தவரை வயது மூப்புக் காரணமாக அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்வது சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த போது, துரைமுருகனுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்ததே பெரிய விஷயம் என்றும், அவர் தன்னுடைய வயதை காரணமாக வைத்து அனுதாபத்தால் சீட் பெற்று வாங்கிவிட்டார் என்றும் கூறுகின்றனர். 

அவருடைய தொகுதி பக்கம் விசாரித்து பாருங்கள் அங்கு எதுவுமே செய்யவே இல்லை, பெயருக்கு பொதுச் செயலாளர் ஆனால் கட்சிக்கும் அவர் எதுவும் செய்யவில்லை என்கின்றனர் அவரது நெருங்கிய உடன்பிறப்புகள். 

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை, கள ஆய்வுக் குழு அறிக்கையாக சமர்ப்பித்த பின், கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கட்சியின் மாநில நிர்வாகத்தில் யார் யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து, ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். 

அதன்காரணமாக, நமக்கு எப்படியோ ஸ்கெட்ச் ரெடியாகிவிடும் என்று உணர்ந்த துரைமுருகன், தாமாக முன்வந்து பொதுச் செயலாளர் பதவியை துறக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், தேர்தல் தோல்விக்கு பின் துரைமுருகன், கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சரிவர வருவதில்லை என்றும், ஓய்வு எடுக்க விரும்புவதாகவும் கூறும் அவர்கள், தன் பொதுச்செயலர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர். 

திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலுவை பொதுச்செயலராக்க, கட்சி தலைமை முன்வந்தால், தான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் செல்வேன் என்ற கண்டிஷனோடும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் உடல் நிலை ஒத்துழைக்குமா எனத்தெரியவில்லை.. .

மறுபக்கம், ஆ.ராசாவிற்கு பொதுச் செயலாளர் பதவிக் கொடுக்கப்படலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். கட்சியைக் கொள்கை ரீதியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தலைமையின் முடிவாக இருப்பதால், ஆ.ராசா இதற்கு பொருத்தமாக இருப்பர் என்று நினைக்கிறதாம். 

இதற்கு மறுப்பக்கம் எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளனவாம். காரணம், விசிக போன்ற கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கிறேன் என்று பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக ஆ.ராசாவின் பதிவிட்டது தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


மறுபக்கம், கனிமொழியை கட்சியின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்ததுள்ளதாகக் கூறப்பட

எது எப்படியோ, பொதுச் செயலாளராக துரைமுருகன் நீடிப்பதும், விலகுவதும் தலைமையின் கையில் தான் இருக்கிறது. திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.




தானே மண் அள்ளிப் 

போட்டுக் கொண்ட ராகுல்!

‘‘தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது.

இத்தகைய முடிவை தி.மு.க. எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும். 

அதிலும் குறிப்பாக, ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளே இதற்குக் காரணம்! தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார்.


 அதைப் பச்சையாக வெளிப்படையாகவே செய்தார். இதைச் சகித்துக் கொள்ளும் தேவை தி.மு.க.வுக்கு இல்லை.

தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். 

இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது. தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.

2018 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுலை மேடையில் வைத்துக் கொண்டே ‘’பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.

 இத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்துவதைத் தான், நம்பிக்கைத் துரோகம் என்று தெரியாமல் செய்து வந்துள்ளார் ராகுல்.

ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்து, ‘நீங்கள்தான் என் சகோதரர்’ என்று சொன்னார் ராகுல். ‘நான் யாரையும் சகோதரர் என்று சொன்னதில்லை’ என்றார் ராகுல். 

இது வெறும் நடிப்புதான் போலும். தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவார் என்பதற்காகச் செய்யப்பட்ட நாடகமாகவே கருத வேண்டி உள்ளது.

ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாகப் பேசிவிட்டு, பிரதமர் இருக்கைக்கு வந்து அவரைக் கட்டிப் பிடித்தார் ராகுல். 

அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டே நாடாளுமன்றத்தைப் பார்த்து கண் அடிக்கவும் செய்தார் ராகுல். அவரது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய காட்சி அது. அந்த இரட்டை வேடத்தைத் தான் எல்லா மாநிலங்களிலும் நடத்திக் காட்டி வருகிறார் ராகுல்.

பீகாரில் தேஜஸ்வீயை முதுகில் குத்திய காட்சியை யாரும் மறக்க முடியாது. தேஜஸ்வீக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கபளீகரம் செய்வதற்காக அவர்களோடு கூட்டணி போட்டார் ராகுல். 

தேர்தல் நெருங்கி வரும் போது பிரச்சாரமும் சரியாகச் செய்யாமல் வெளிநாடு போனார் ராகுல். தேர்தலுக்குப் பத்து நாட்கள் இருக்கும் போதுதான் தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டது. 

அதை அறிவிக்கவும் ராகுல் வரவில்லை. இறுதியாக பீகாரில் தோல்வியைத் தழுவியது இக்கூட்டணி. இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் ராகுல்தான். இப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அணைத்துக் கெடுக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். 

அதையே தான் தமிழ்நாட்டிலும் செய்தார் ராகுல்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்மொழிவதற்கு முன்னதாகவே அவர் பெயரை முன்மொழிந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 

அத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ராகுல் பேசினாரா என்றால் இல்லை. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டம் பேசாமல் அடம்பிடித்தார், ஆணவமாக நடந்து கொண்டார் ராகுல்.

புதுச்சேரியில் திருபுவனை, மங்களம், காலாப்பட்டு, ராஜ்பவன், உழவர் கரை, காரைக்கால் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது. 

இத்தகைய போட்டி வேட்பாளர்கள், ராகுலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். அதாவது, தி.மு.க. வேட்பாளர்கள் வென்று விடக் கூடாது என்பதற்காக ராகுலே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள்?

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது.

இவர்கள் புதிதாக ஒருவரோடு சேர்ந்துள்ளார்களே.. அந்த விஜய், காங்கிரஸ் கட்சியைப் பற்றி என்ன சொன்னார்?

‘சிலபல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார்’ என்று பேசினார். 

இன்று சில பல கோடிகள் கொடுத்துத்தான் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றாரா விஜய்? காங்கிரஸ் கட்சி எவ்வளவு பெற்றது? அதில் ராகுல் எவ்வளவு பெற்றார்? ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி மட்டும்தான் காங்கிரஸுக்கு தரப்பட்ட விலையா? அவ்வளவுதானா?

தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.விடம் ஒரு ராஜ்ய சபா. தேர்தலுக்குப் பின்னதாக த.வெ.க.விடம் ஒரு ராஜ்ய சபா. இப்போது ஏதோ ராஜ்யத்தையே பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் இருக்கிறது காங்கிரஸ்.

 ‘இந்தியா’ கூட்டணியை இழந்து, ஒரு ராஜ்ய சபா இடத்தைப் பெற்றுள்ளது காங்கிரஸ். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி இருக்கிறது காங்கிரஸ்.

இவ்வளவுக்குப் பிறகும், ‘இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது’ என்று சொல்வதற்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் ஜோடங்கருக்கு வெட்கமாக இல்லையா?





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை