சாதனை என்பது ......

 சாதனை என்பது

வெறும் நாட்கணக்கு அல்ல!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறி யடித்து விட்டதாக கூறி மத்திய அமைச்சரவை பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


இந்த சாதனைக்காக உலகத் தலைவர்கள் பலரும் மோடிக்கு ‘பாராட்டு மழை’ பொழிவதாகவும் ஊடகங்கள் ஊதுகின்றன.

ஒரு ஆட்சியாளருடைய சாதனை என்பது நாட்கணக்கில் மட்டும் கணக்கிடப்படுவதில்லை.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்திருக்கிறார் என்ற புள்ளிவிபரக் கணக்கு சரிதான்.


ஆனால் இவருடைய இந்த ஆட்சி இந்திய மக்களுக்கானதா? அல்லது இவரது கட்சியான பாஜகவை வழிநடத்தும் பாசிச அமைப் பான ஆர்எஸ்எஸ் நலன் சார்ந்ததா?


என்கிற கேள்வியும், இவருடைய ஆட்சிக்காலம் ஏன் கோடானுகோடி ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டதா?

அல்லது பிரதமர் மோடி யின் கார்ப்பரேட் கூட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.


2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற் பதற்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணத்தை கைப்பற்றி அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை கிடைக்க வகை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் கிழிந்து தொங்கு கின்றன.


பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பிரதமர் நரேந் திர மோடியின் பொருளாதார நடவடிக்கைகள் பரிதாபமாக பிரதமரைப் பார்த்துச் சிரிக்கின்றன.


பிரதமராக நேரு இருந்த காலத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.


இன்னும் சில ஆண்டுகள் பிரதமராக மோடி நீடித்தால் அனைத்து பொதுத்துறைகளை யும் அழித்தவர் என்ற பெருமையும் அவருடைய ‘சாதனைப் பட்டியலில்’ சேரக்கூடும்.


நேரு பிரதமராக இருந்தபோதுதான், அயல் துறையில் கூட்டுச் சேராக் கொள்கை உருவாக் கப்பட்டது.


ஆனால் அந்தக் கொள்கையை முற்றாக கைகழுவிவிட்டு அமெரிக்க வல்லர சுக்கு ஆதரவான அயல்துறைக் கொள்கையை பிரதமர் மோடி பின்பற்றுகிறார். இவருடைய ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மை, ஜனநாய கம், கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமி யங்கள் மதிப்பிழக்க செய்யப்பட்டன.


சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர் தாக்கு தல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் பலவும், நேரடியாகவும் தொடுக்கப்படுகின்றன.


நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தை எந்த அளவுக்கு சேதப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு சேதப்படுத்தியுள்ளார். சாதனை என்பது நாட்களைக் கொண்டு அளக்கப்படுவது அல்ல.




குதிரை பேர அரசியலுக்குத் தலைமையகம் ?அரசுத் தலைமைச் செயலகமே…!

 தொங்கு சட்டமன்றமாகிப் போன தவெக அரசாங்கம், குதிரை பேர வணிகத்தில் குதிரை வேகத்தில் செயல் புரிந்து, அதிமுகவை உடைத்து அமைச்சர்கள் பதவி ஆசை காட்டி எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் கும்பல் தலைமையிலான 25 எம்எல்ஏக்களை சட்டமன்றத்தில் பெருமாண்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் விஜய் ஆட்சி பிழைக்க வாக்களிக்க செய்தது ‘விஜய் – வேலுமணி – சிவிஎஸ்’ கூட்டணி!

அதன்பின், ‘அதிமுகவை அரசாங்கத்தில் அங்கம் வகிக்க அனுமதித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் ‘போர்க்கொடி’ தூக்கியதும்,

விஜய் தரப்பினர், ‘அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க் களுக்கு இடம் இல்லை’  என அறிவித்ததும், அதன்பின் வேலுமணி தரப்பு எடப்பாடியிடம் ஒட்டிக்கொண்டதும் மற்ற பல மாநிலங்களைப் போல தமிழ்நாட்டு அரசியலும் சிரிப்பாய் சிரித்துக் கிடக்கிறது


என்பதையும் ஏற்கனவே பார்த்து விட்டோம்.

இந்நிலையில் ஏமாற்றமடைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் MC.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, MSM ஆனந்தன், MR. சிவபதி ஆகியோர்,  ‘மாபெரும் தலைவர்கள்’ ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் சால்வை அணிவித்து தவெக-வில் தஞ்சம் புகுந்தனர்.


தொடர்ந்து ‘அரசியல் தற்குறி முதல்வர்’ விஜய்யையும் சந்தித்து சால்வை அணிவித்து ‘வாழ்த்து’ப் பெற்றனர். தென்பட்டது. கட்சி மாறிய இவர்களால் முதலில் ஒரு கூத்தாடி விஜய்க்கு சால்வை அணிவித்து ஐக்கியமாகிக் கொள்ளும் தகுதியைக்கூட பெற இயலவில்லை. சற்று தாமதமாக தலைமைச் செயலகத்தில் கட்சி மாறியதை அடையாளப்படுத்தும் வகையில் விஜய்க்கு சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்கின்றனர்.


ஆக, தலைமைச் செயலகமே தவெக-வின் தலைமையகமாக மாறிக் கொண்டு இருக்கக்கூடிய அவலம் உருவாகியுள்ளது.

மேலும் இதில் முன்னாள் திமுக எம்எல்ஏக்கள் இருவர் கூட தவெக-வில் இணைந்துள்ளனர்.

‘பனையூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் 5000 பேர் தவெக-வில் இணைகின்றனர்’ என அறிவிப்பு செய்து 500 பேரைக் கூட திரட்ட முடியாத நிலையில் வேட்டி சேலை கொடுக்கப் போவதாக அறிவிப்பு செ இவர்களுக்கு முன்னதாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் KV.ராமலிங்கம், இசக்கி சுப்பையா இருவரும் தவெகவில் புகுந்து விட்டனர்.


இதில் பெரிய வேடிக்கை என்னவெனில் பனையூர் அலுவலக கேட்டுகளை உடைத்துக் கொண்டு ‘இதுகள்’, நான் முந்தி – நீ முந்தி என்று அடித்துப் பிடித்து இடித்துக் கொண்டு  உள்ளே புகக்கூடிய காட்சிகளைப் பார்க்கின்ற பொழுது கேவலத்திலும் கழிசடைத் தனமாகத்ய்து ஆண் பெண்களை திரட்டிய – மக்களை முட்டி மோத விட்ட அசிங்கங்களும் அரங்கேறி உள்ளன.

காலம் காலம் தொட்டு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகளில் பலரும் இப்படி சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் துளியுமின்றி தவளைகளைப் போல கட்சி தாவுகிறார்களே, எதற்காக? 

புதிய கட்சிகளில் இணைந்து தியாகபூர்வமாக உழைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அக்கறையாலா? இல்லை. நிச்சயமாக இல்லை. மாறாக, ‘தாம் ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சி தேய்மானத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது;

செல்வாக்கு உள்ள புதிய ஆளும் கட்சியில் நுழைந்து கொண்டால் ஏதேனும் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திப் புதிய பதவிகளைப் பெற்று விடலாம்; பொறுக்கித் திண்ணலாம்; வழக்கம்போல கொள்ளை அடிக்கலாம்; மேலும் மேலும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கலாம்’ – என்பதே இப்படிப்பட்ட பிழைப்புவாதிகளின் லட்சியமாக மாறி விட்டன.

மற்ற வகையில் இப்படிப்பட்ட பச்சோந்திகளுக்கு மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ, லட்சியங்களோ என்றும் இருந்ததில்லை. ஆம்! ‘பிழைப்பு வாதமே அரசியல்’  என்றாகிவிட்டது!

இதில் ஆதவ் அர்ஜுனா முதலிடம் வகிப்பவர் ஆவார். அவரைத் தொடர்ந்து நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், கீர்த்தனா எனப் பெரும் கும்பலே தவெக-விலும் இருக்கிறது. அனைத்திற்கும் மூலவர் ‘தளபதி விஜய்’ தான்!

இவர்கள்தான் ‘தூய சக்தி’யாம்? ஆனால் என்றுமே இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் அப்பாவி உழைக்கும் மக்களே!

மேற்காணும் தலைவர்களும் கட்சிகளும் விஜய்க்கு ஒளிவட்டம் ஏற்படுத்தும் பணிகளைச் செய்வதைப் பார்க்கும் பொழுது ஆபாசமாகத் தெரிகிறது. காங்கிரசைப் பொருத்தமட்டில் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கித் திளைக்கிறது.

திமுக ஆட்சியில் ‘காக்கா’ பிடித்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கையை பெற்றுக் கொண்டது. (திமுக தயவில் பெற்ற ஐந்து எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சர் பதவிகள் பெற்றாகிவிட்டன.) தற்போது தவெக கூட்டணிக்குத் தாவி மற்றுமோர் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கையைப் பெற்றுக் கொண்டு விட்டது.

காங்கிரசை திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு இழுத்துச் சென்றதில் முதன்மை பாத்திரம் வகித்த பலே கில்லாடி குற்றச் செயல்களை துணிந்து செய்யும் பிரவீன் சக்கரவர்த்திக்கு அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனாலேயே கட்சிக்குள் குஸ்தி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கோமாளி பிரவின் தமது ட்விட்டர் பக்கப் பதிவில் ‘இடதுசாரிகள் அனைவரும் எங்களைப் போலவே தவெக கூட்டணியில் இணைந்து விட்டனர்’ என்று வெட்கமில்லாமல் பொய்களைப் பரப்பினார்.

மெத்தப் படித்த மேதாவியான ப. சிதம்பரமோ காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைத்ததை பூரிப்பாகக் கருதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டதாகவும், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்க இடதுசாரிகளை அழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இடதுசாரிகளோ அப்படிப்பட்ட எண்ணமே இல்லை; நாங்கள் திமுக கூட்டணியில் தான் இன்னும் நீடிக்கிறோம் என்று கூறுகின்றனர்.

இந்தியா கூட்டணியில் திமுகவும்,  ஆம் ஆத்மியும் புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றன. INDIA கூட்டணியை உருவாக்குவதற்கு திமுகவின் பங்கு கூடுதலானது தான் என்பது உண்மையே.


ஆனால் திமுக போனால் என்ன; அளப்பெரிய செல்வாக்குள்ள விஜய்-யின் தவெக INDIA கூட்டணியில் இணைந்து கொள்ள இருப்பதாக சிவசேனா காங்கிரஸ் உட்பட  பலரும் நம்பிக்கை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர்.


இப்படிப்பட்ட அகில இந்திய அளவிலான ‘இந்தியா கூட்டணி’  குறித்த பிரச்சனையில், இது குறித்த கண்ணோட்டம் துளியுமற்ற தற்குறி அரசியல்வாதி விஜய், மேற்கண்ட விவரங்கள் குறித்து எதுவுமே வாய் திறக்காத போது, அவரது வாயாக (mouth)  இவர்களிருந்து கொண்டு செய்தி பரப்புகின்ற கோமாளித்தனங்களை என்ன வென்று பகர்வது?


தம்மை (விஜய்யின் தவெக) பெற்றெடுத்த பெற்றோருக்கு (பாஜக) எதிராக செயல்படும் INDIA கூட்டணியில் இணைந்து செயல்பட இது விடயத்தில் விஜய் முட்டாளா என்ன? அவ்வளவு துணிச்சல் தான் அவருக்கு வந்து விடுமா என்ன?

_எழில்மாறன்

இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு !

ரீல்ஸ் சூட்டிங் ஸ்பாட்டாக தமிழ்நாடு ,!

   



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை