மீண்டும் வெற்றிப்பாதைக்கு,

 மீண்டும் வெற்றிப்பாதைக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது. தொடர்ச்சியாக இரு தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அதிமுக கடந்த 2021 ஆம் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் பெற்றது.

 அதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

புதிதாக துவங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றது. 

கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு என பலரால் சொல்லப்படுகின்றது. தேர்தலில் தோல்வி மட்டுமல்லாமல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் தவெகவில் இணைகின்றனர்.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல் இந்நாள் எம்எல்ஏக்கள் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

 இதனால் அதிமுக கட்சி மேலும் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவே சொல்லப்படுகின்றது. ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக இரு பிரிவாக பிரிந்தனர்.

அதன் பின் சமரசம் ஏற்பட்டு மீண்டும் எஸ். பி வேலுமணி தரப்பு அதிமுகவில் இணைந்தாலும் சிவி ஷண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் அதிமுகவில் இணையவில்லை.

 விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். இப்படியான சூழலில் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஓ. எஸ் மணியன்தெரிவித்து இருக்கின்றார். அவர் கூறியதாவது, அதிமுக கட்சியின் நிர்வாகிகளுடன் கருத்து கேட்கப்பட்டது.

 நிர்வாகிகள் சந்தித்த பிரச்சனைகள் ,நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி தோல்வி குறித்து அனைத்து நிர்வாகிகளுடமும் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிஅவர்கள் யார் வேண்டுமானாலும் எந்த கருத்துக்களை வேண்டுமானாலும் சொல்லலாம் என கூறினார். அதன்படி அனைவரும் தங்களது கருத்துக்களை கூறினார்கள். 

அவர்கள் அனைவரின் கருத்துகளையும் எடப்பாடி பழனிச்சாமி உள்வாங்கிக்கொண்டார். மேலும் அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் கட்சியை வழி நடத்துவோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார் என்றார் ஓ. எஸ் மணியன்.

மேலும் உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி எந்த தேர்தலாக இருந்தாலும் சரி அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ் மணியன். இந்நிலையில் ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டுக்கொண்டு இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் அதிமுக தற்போது பின்தங்கிய நிலையில் தான் இருப்பதாக சிலர் சொல்வதை பார்க்க முடிகின்றது.

அதுவும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு செல்கின்றனர்.

 இதனால் அதிமுக தற்போது வலுவிழந்து இருப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனாலும் யார் கட்சியை விட்டு போனாலும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இங்கே தான் இருக்கின்றனர்.

 கண்டிப்பாக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் அனைவரும் நம்பிக்கையுடன் செயலாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சகரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக, வடமாநிலங்களைச் சேர்ந்த 7 அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவமும், 60-க்கும் மேற்பட்டோர் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாமல், தொழிலாளர்களின் உயிரோடு விளையாடிய அந்த தனியார் நிறுவனத்தின் அலட்சியப் போக்கிற்கு  கடுமையான நடவடிக்கை தேவை.

நச்சு வாயுக்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில், வாயு கசிவைக் கண்டறியும் தானியங்கி எச்சரிக்கை கருவிகளோ அல்லது அவசர காலப் பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாததே இந்த கோர விபத்திற்கும், இத்தனை உயிர்கள் பறிபோனதற்கும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

தொழிலாளர்நலன் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் முறையாக ஆய்வு செய்யவேண்டும். 

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும்  தரமான மற்றும் உயர்தர சிகிச்சையும், உரிய நிவாரணமும் அளிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த விபத்திற்குக் காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இறால் பதப்படுத்தும் நிறுவனங்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல வாரியமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து உடனடியாகப் பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை