கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?”
“கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” - ஆ.ராசா
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, பேசியதாவது.
“கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?”
அரசியலமைப்பு ஒழுக்கம் இன்றி உரையாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல் பிதற்றி இருக்கிறார். கர்ஜித்ததாக சொல்லி கொண்டு கத்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அல்லு சில்லு வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு அவர்கள் வாக்கை வாங்கினீர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?நோ கமெண்ட்ஸ் அமைச்சா்கள்
கச்சத்தீவு, மேகதாது விவகாரம் என எதைப்பற்றி கேட்டாலும் தவெக அமைச்சா்களின் ஒரே பதில் நோ கமெண்ட்ஸ்.
கச்சத்தீவு பற்றி கேள்வி கேட்டால் போராடுவோம், கேட்கிறோம் என பதில் கூறாமல் நோ கமெண்ட்ஸ் என பதில் சொல்கிறாா்கள்.
உங்கள் சக்தி என்னவானது?
பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro?
எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது?
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro? மதம் பார்க்க மாட்டோம் என்றார் முதல்வர்,
கை, நெற்றியில் ஒரு மதம், பதவியேற்ற போது ஜோசப் விஜய் என ஒரு மதம்.
தூக்கம் வரல விஜய் ப்ரோ...
மின்சாரம் கட் ஆகிறது விஜய் ப்ரோ, தூக்கம் வரல ப்ரோ, ஏதேனும் முடிவு எடுங்க ப்ரோ. தவெக 2ஆம் கட்ட தலைவா்களை போல் முதல்வர் விஜய் பேசுகிறாா்.
"கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசவில்லை"
கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை.
2ஆம் கட்ட தலைவா்கள் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம், எங்கள் தலைவா் பேசவில்லை.
தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசை எப்படி முதலமைச்சர் விஜய் குறைகூற முடியும்?
“சகோதர முரண்பாடு"
விடுதலை சிறுத்தைகள் மீதான விமா்சனம் சகோதர முரண்பாடு தான்; திருமாவளவன் எனது அண்ணன், எங்களுக்குள் இருப்பது சகோதர உணா்வு தான்.
யாாிடம் அதிக பாசம் வைத்தோமோ அவா்களிடம் தான் அதிக கோபம் வரும், விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம்.
தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு அளித்தபோது ஆபாசமாக விமா்சித்தது தொடா்பான கேள்விக்கு திமுக எம்.பி.ஆ.ராசா இவ்வாறு பதில் அளித்தார்.








