ஒழுங்கு நடவடிக்கை சரியே!

“தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன், மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்” என அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்

, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினரான சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர்.சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

குறிப்பாக, கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழகத்தில் மிகச் சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை(NCBH ) குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயார் செய்திருந்திருந்தனர்.

 அத்தகைய மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார்.

எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். 

அவர், தனது தவறுகளை திருத்திக்கொண்டு கட்சியுடன் தன்னை பொருத்திக்கொள்ள கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளாமல் தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். 

சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்




ஸ்டாலின்  வாழ்த்து!

எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இதற்காக அவருக்கு காலையில் இருந்தே பலத்தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

 அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்தது. குறிப்பாக நீண்ட காலமாக தொடர்ந்து வந்த திமுக கூட்டணி உடைந்தது. 

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது. எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தவெகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இது அரசியல் களத்தில் பல விதமான விமர்சனங்களை கிளப்பிய நிலையில், திமுகவினர் கடும் கோபம் அடைய செய்தது. திமுக கட்சியை சார்ந்தவர்களின் உழைப்பில் வெற்றி பெற்று, தற்போது கூட்டணி மாறியுள்ளது நியாயமே இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

 அதோடு ராகுல் காந்தி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே இல்லை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் எதுவும் வராது என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டார் மு.க. ஸ்டாலின். இது திமுகவினரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

அதோடு உங்களின் நாகரீக அரசியலுக்கு அளவே இல்லையா தலைவரே எனவும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், துரோகங்களை எல்லாம் மறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அணுகுமுறை அரசியலின் உச்சம் எனவும் பலரும் கருத்து கூறினார்கள்.

 இப்படியான நிலையில் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பகிர்ந்துள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில் அரசமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான நமது உறுதிப்பாடு தொடரும். இந்த போராட்டம் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கானது.

இதில் வெற்றி பெறும் வரை இணைந்து நாம் போராட்டத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதை போன்று அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு அரசியல் களத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பி இருக்கிறது. 

மேலும், இந்தியா கூட்டணி யில் திமுக தொடர வேண்டும் என்ற பொருள்படும் படி ராகுல் காந்தி இந்த பதிவினை பகிர்ந்து இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

 சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் திமுகவை காங்கிரஸ் நடத்திய விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. 

அதோடு இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் திமுகவை கொண்டு வர வேண்டுமெனவும் குரல்கள் வலுப்பெற்றன. 

இதையெல்லாம் மனதில் வைத்து ராகுல் காந்தி இந்த பதிவினை வெளியிட்டு இருக்கலாம் .




முகநூல்.

"இன்றைய சட்ட சபை கூட்டத்தில் 'தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு' பிரச்சனைகள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் விஜய் அமைதியாக அமர்ந்திருந்தார். பிற துறைகள் சார்ந்த கேள்விகளை கேட்டபோது அத்துறைகளுக்கான அமைச்சர்களும் வாயை திறந்து பேசவில்லை.தங்களுக்கு எதுவும் தெரியாது...வாய் திறந்து தவறாக பேசிவிட்டால், அது மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதாலேயே முதலமைச்சரும், அமைச்சர்களும் பேச வில்லையா...? இவர்களின் உண்மை முகங்கள் மக்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக தான் நேரலை ஒளிப்பரப்பை நிறுத்தினார்களா.."? - முன்னாள் அமைச்சர் சிவசங்கர்.

# இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா..? தமிழக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் இதற்கு வாய் திறக்கவில்லை எனில், அவர் ஏன் அந்த துறையை வைத்திருக்க வேண்டும்...?

'சட்ட சபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்வோம்..' என வாய் கிழிய பேசிய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஏன் ஒரு வார்த்தை கூட பேச தைரியம் வரவில்லை...?

சட்ட சபையில் அனைவரும் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க தான் நீங்கள் அனைவரும் பயிற்சி கூட்டம் நடத்தினார்களா...? வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதற்கு கூடவா உங்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது...?

உங்களுக்கு 6 மாசம் இல்லை....6 வருஷங்கள் அவகாசம் கொடுத்தால் கூட திமுகவினரின் கேள்விகளை உங்களால் தைரியமாக எதிர்க்கொள்ள முடியாது.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை கூட இல்லாத இவர்கள் மிக விரைவில் துடைத்தெரியப்படுவார்கள் !!!

Prakasam P Palani.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை