வெற்றி செல்லாது ?

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போதைய முதலமைச்சர் விஜய். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்
விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டுகள்திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது மனுவில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் பயன்படுத்தி விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது, தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வருமான வரி (Income Tax) வழக்கு குறித்த விவரங்களை மறைத்துள்ளார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விஜய் தரப்பில் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டுப் பெறப்பட்ட இந்த ஒட்டுமொத்த வெற்றியையும் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே மனுதாரர் இனிகோ இருதயராஜின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
முதலமைச்சராக இருக்கும் ஒருவரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, எதிர்க்கட்சி வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வடமாநிலத் தொழிலாளர் பதிவு கட்டாயம்!வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களும், அவர்களை அழைத்து வரும் முகவர்களும் முழுமையான ஆவணங்கள் மற்றும் அடையாள விவரங்களை கட்டாயம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.!
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வசிக்கும் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து முறையான ஆவணங்களோ, பட்டியலோ இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்கள், ஆவணங்களை முறையாக வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், வேலைக்கு அழைத்து வரும் ஏஜெண்டுகளும் சேகரித்து வைத்து இருக்க வேண்டும் என்றும் அது போல சேகரித்து வைக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளுர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பதிவு தமிழ்நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.மாநிலம்முழுக்க பரவலாக உள்ள வடமாநிலத்தவர் பலர் தொழிலாளர்களாக வேலைபார்த்தாலும் அவர்களில் சிலரும் அவரகளைப்போல் நுழையும் சிலர் சிலரும் கொள்ளை,வழிப்பறி,நகைப்பறிப்பு,கற்பழிப்பு,சிறுமிகள் பாலியல் பலாத்காரம்,கொலை என பலகுற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழகம் முழுக்க நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
பதிவாகும் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலோனோர் 10 வயதுக்கு குறைவானவரே ஆவர்.
கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும்.
இதனை முன்னிறுத்தியே தனது பிரச்சாரங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசி வந்தார்.
ஆனால் அது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை ஏற்படுத்திய பிறகும் மாநிலத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை.மாறாக முன்னெப்போதும் இல்லாததைக் அதிகரித்து மக்கள் பெண்களுக்கு பாதுகாப்பேயில்லை என அச்சப்படும் அளவிற்குசென்றுவிட்டது.
இதில் பெண்களுக்கெதிரான பலவற்றுக்கும் த.வெ.க,வினர்தான் குற்றவாளிகள்,மீதியுள்ளோர் வடமாநிலத்தவர் என்ற அளவு ஆகிவிட்டது.
கோயம்பேடு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 23 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. நேபாளை சேர்ந்த வட மாநில தொழிலாளர் அந்த பெண் வசிக்கும் பக்கத்து கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
திங்கள்கிழமை அதிகாலை அந்த பெண்ணின் வீட்டை உடைத்து அந்த பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி தொடர்ச்சியாக வட மாநிலத்தவர் அதிக அளவிலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
தி.மு.க,பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வட மாநில தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில்தான், வட மாநில தொழிலாளர்களின் தரவுகளை சேமிக்காத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ







