எரிகிறது...
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.89 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,283 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது.
ஆனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் பீப்பாய் 108 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 15 டாலர் குறைந்துள்ளது.
ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது அநியாயமாகும்.
ஒன்றிய ஆட்சியாளர்கள் வேறொரு விநோ தமான காரணத்தையும் முன் வைக்கின்றனர். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக எரி பொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாததால் அதை ஈடுகட்ட தற்போது தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுகிறது என்கிறார்கள்.
எண்ணெய் விலையை அரசு தீர்மா னிப்பதில்லை. சந்தைதான் தீர்மானிக்கிறது என்பது போலித்தனமான ஏமாற்றுவாதம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அரசு நினைத்தால் விலை உயர்வை நிறுத்தி வைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். ஆனால் தேர்தல் ஆதாயத்திற்காக விலையை உயர்த் தாத ஒன்றிய அரசு தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றி மக்களை தண்டிக்கிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதன் முறையாக 8.3 சதவீத மாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மேலும் உயரக்கூடும் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து அபாயச் சங்கு ஊதுகின்றனர்.
சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிவதும், இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேசச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை விடுத்து எரிசக்திக்கு அமெரிக்காவை மேலும் சார்ந்திருக்கச் செய்யும் மோடி அரசின் திட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கும்.
போலி லாட்டரி மார்ட்டின் சொத்து முடக்கம்!
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த உத்தரவின்படி, அமலாக்கத்துறை அடுத்த ஆறு வாரங்களுக்குள் தங்களது பதிலை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில், விதிகளை மீறி சிக்கிம் மாநில போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததன் மூலமாக, அம்மாநில அரசுக்கு சுமார் 910 கோடி ரூபாய் அளவிற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சிபிஐ (CBI) தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கேரள நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
சி.பி.ஐ பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின் முடிவில், மார்ட்டினுக்கு தொடர்புடைய சுமார் 457 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது.
இந்த சொத்து முடக்க நடவடிக்கையை அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஏற்கனவே உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், தங்களது சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக மார்ட்டின் மற்றும் அவருக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், தங்களிடம் முறையான எந்தவொரு விளக்கமும் கேட்கப்படாமலும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமலும் தன்னிச்சையாக இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த முடக்க உத்தரவை ரத்து செய்து, தங்களது சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து அமலாக்கத்துறை தரப்பில் ஆறு வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தள்.
த வெ க , வில் இணைந்த
4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை .
தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த கட்சித் தாவல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 எம்.எல்.ஏ.க்களும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்து விளக்கக் கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது.

அவர்கள் தெரிவித்த வருத்தத்தையும், கட்சி தலைமையின் கருத்தையும் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதன் மூலம் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால், மற்றொரு பக்கம் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடவடிக்கை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
கட்சியின் கொறடா உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாமல், பதவியையும் துறந்து வேறு கட்சியில் இணைந்துள்ளதால் அவர்கள் மீது தகுதி நீக்க நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கமளித்தார்.
அதன்படி, சத்ய பாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

ஏனெனில், 21 பேரை தகுதி நீக்கம் செய்திருந்தால் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை பலம் மேலும் குறைந்திருக்கும்.
அதே நேரத்தில், அந்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் வைத்துக்கொண்டு எதிர்கால அரசியல் திட்டங்களை முன்னெடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்பியதாக கூறப்படுகிறது.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேரின் விவகாரம் தற்போது சட்டரீதியாக சிக்கலை சந்தித்துள்ளது.அவர்களின் ராஜினாமா செல்லுபடியாகுமா, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் கவனித்து வருகின்றன.





