நீதிமன்றம் வாங்க!




ஆதாரத்துடன் நீதிமன்றம்  வாங்க!
 

கடந்த திமுக ஆட்சியில் மொத்தம் உள்ள 32 துறைகளில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனும் தலா 16 துறைகள் எனப் பிரித்துக் கொண்டு ஊழல் செய்து பணம் வசூலித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில்  பேசியிருந்தார்.அதேபோன்று, திமுக ஆட்சிக்காலத்தில் மின் கட்டண உயர்வு மூலம் கிடைத்த வருவாயால் பயனடைந்தது சபரீசனா அல்லது முதல்வரின் குடும்பத்தினரா என்ற கேள்வியை எழுப்பியதுடன், திமுக – அதிமுக இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில் சபரீசன், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதாவது கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் தம்மைக் குறித்து உள்நோக்கத்துடன், உண்மைக்கு மாறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்த இரு அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருவதாக சபரீசன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது 

இது தொடர்பாக சபரீசன் சார்பில் அனுப்பிய நோட்டீஸில், “நான் எந்தவொரு அரசுப் பொறுப்பிலோ அல்லது திமுகவின் கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், வெறும் திமுக தலைவரின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காகத் தம்மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே, அமைச்சர்கள் இருவரும் தங்களது ஆதாரமற்ற கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, எந்தெந்த ஊடகங்களில் பேசினார்களோ அதே ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். 

என்னைப் பற்றி அவதூறாகப் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இது போன்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களைப் பேச மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அமைச்சர்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கத் தவறினால், அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் சிவில் மற்றும் கிரிமினல் ரீதியான அவதூறு வழக்குத் தொடரப்பட்டு சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை