கில்லியைத் தொடர்ந்து ராக்கெட்?
ரவுடிடன் இருக்கும் தவெக பெண் அமைச்சர்
புகைப்படம் பரவல்!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தவெக அரசு வெற்றிபெற்று ஆட்சி அமைந்துள்ளது.முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று அமைச்சரவையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கே. ஜெகதீஸ்வரி தற்போதைய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் நீண்ட காலத்திற்கு பிறகு இராஜபாளையத் தொகுதியிலிருந்து ஜெகதீஸ்வரி அமைச்சராக பொறுப்பேற்றது அப்பகுதி மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகரில் தமிழக அரசு சார்பில் மாணவர் மாணவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது விழாவில் தன்னுடைய பெயர் முதலில் இடம் பெறாதது குறித்து ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பினார்.
துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனது பெயரை முதலில் வரவேண்டும் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் ஏன் போட்டு உள்ளீர்கள் உங்களுக்கு புரோட்டோகால் தெரியாதா?
என்று அரசு அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தவெகவில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு பெண் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனாவுடன் அமைச்சர் ஜகதீஸ்வரி சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானது. அடுத்த கட்டுக்கதைக்காவது நல்ல அதிர்ஷ்டம் அமையட்டும்” (Better luck with the next fiction) என்று அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்த அவர், தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும், நல்ல நட்புறவுடன் செயல்பட்டு வருகிறோம் என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் தவெக அரசு ஒன்றரை மாதங்களை நிறைவு செய்த நிலையில் தவெக அமைச்சர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் தவெக அமைச்சர் கில்லி சரத்குமார் ஐபில் தொடரின் போது போதை பொருள் போன்று வெள்ளை நிற பொருளை ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து அமைச்சர் பதவி விலக வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து , அமைச்சர் சரத்குமார் அது பழைய வீடியோ குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது பாராசிட்டமல் மருந்து கொடுத்தேன். அது சமூகவலைத்தளத்தில் தவறாக பயன்படுத்துவதாக விளக்கம் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சரத்குமாரின் மாத்திரை வீடியோ சர்ச்சை , அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு அடங்குவதற்குள், அடுத்ததாக பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ரவுடி ராக்கெட் ராஜாவுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ராக்கெட் ராஜா மீது தென் மாவட்டங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் பத்திரிகையாளராக இருந்த காலகட்டத்தில் ராக்கெட் ராஜாவை சந்தித்திருக்கலாம் என்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் அமைச்சரும் அவரும் ஒரே சமூகம் என்பதால் அவருக்கு ஆதரவாக அமைச்சர் செயல்பாடுவாரோ என்கிற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இது தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
"கவிஞர் புவியரசு."
இயற்கையுடன் கலந்தார்.
கோவையைச் சேர்ந்தவர் கவிஞர் புவியரசு (95). கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த இவர் கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
’கையொப்பம்’ என்ற கவிதை தொகுப்பிற்காகவும், வங்காள கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பிற்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர். ’வானம்பாடி’ என்ற இயக்கம் துவங்கப்பட்டதில், இவரது பங்கு மிக முக்கியமானது. ஓவியம் வரைவதிலும் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார்.
நவீன நாடகங்களின் முன்னோடியாக உள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும் பங்களித்துள்ளார். முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை கவிஞர் புவியரசு காலமானார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 1931ம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் புவியரசு. இவரது இயற்பெயர் ஜெகநாதன். பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புதல்வர் பட்டம் பெற்ற இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.’காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
ஆயிரக்கணக்கான கலையரங்கங்கள், பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறைப்புரை ஆற்றியுள்ளார். “தேடாதே, தொலைந்து போய்விடுவாய், வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன” என்பது கவிஞர் புவியரசு-வின் புகழ் பெற்ற வரிகள்.
ஆரம்பத்தில் ம.பொ.சி-யின் தமிழரசுக் கட்சியில் இருந்த இவர், முரண்பாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்த இவர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த கவிஞர் புவியரசு மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.