சிக்க வைத்தது யார்?

 தவெக பிரமுகரின் 'காம லீலைகள்';

செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி?


சிக்க வைத்தது யார்?



பணப் பிரச்சனை உள்ள பெண்ணுக்கு உதவி செய்து அவர்களிடம் நெருக்கமாக பழகி வீடியோ எடுத்து மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


சேலத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொடர்பாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், நெய்க்காரப்பட்டி அருகே புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் குறித்து பேசி உள்ளார்.


இதுகுறித்து அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

 

ஆடியோவால் சிக்கியதவெகநிர்வாகி

இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது

.

பின்னர் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.


இதுகுறித்து போலீசார்  கூறுகையில், சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த பெண் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.


அதில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் இருந்த நிலையில் இரு குழந்தைகள் உள்ளதாகவும் அவருக்கு கடன் பிரச்சனை ஏற்படவே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.



அந்த பெண்ணுக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்படி நெருங்கி பழகியதை மணிகண்டன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.


ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி

சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார்.


அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டனின் செல்போனை எதேர்ச்சையாக எடுத்துப் பார்த்தார். அப்போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் தன்னுடைய வீடியோவும் இருப்பதை பார்த்து திடுக்கிட்டு அந்த வீடியோக்களை அழித்துவிட்டு அங்கிருந்து மணிகண்டனிடம் சொல்லாமல் கிளம்பி விட்டார். பின்னர் மணிகண்டன் மொபைல் போனில் அழைத்த போது அந்தப் பெண் பேச மறுத்துள்ளார்.


மேலும், அந்தப் பெண் பேசிய ஆடியோவில் பணப் பிரச்சினை உள்ள பெண்களாக பார்த்து அவர்களுக்கு உதவுவது போல அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை மணிகண்டன் வீடியோ எடுத்துள்ளார்.


பின்னர் அந்த பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் விபச்சாரத்திற்கும் ஈடுபடுத்தி உள்ளார்.


இந்த நிலையில் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்து அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்துள்ளதாகவும்


மணிகண்டன் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருவதாகவும் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ் புகையிலைப் பொருட்களை விற்றதால் ஏற்கனவே அம்மாபேட்டை கொண்டலாம்பட்டி அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.


தொடர்ந்து மணிகண்டனை விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மணிகண்டன் தவெக நிர்வாகி எனத் தெரிய வந்துள்ளது.



பாஜகவுக்கு

 உதவும் ராகுல்


ராகுலின் அணுகுமுறை இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது. 

அது பஜவுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகவே இருக்கிறது என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.


பார்லி.யில் இண்டி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ. காங்கிரஸ் கட்சிகள் இருந்தாலும், கேரள மாநில அரசில் இவ்விரு கட்சிகளும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகின்றன.


இந்த கருத்து மோதல்களின் நீட்சியாக, இண்டி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று ராகுல் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறி உள்ளதாவது;

இங்கு யார், யாரை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் பிரதமர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்த போட்டோக்களை அனைவரும் பார்த்தோம். பிரதமரை கட்டிப்பிடித்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


மாறாக, ராகுல் கருத்துகள் ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்கின்றன. அதாவது, ராகுல் எவ்வாறு இண்டி கூட்டணியை பார்க்கிறார், எவ்வாறு அணுகுகிறார் என்பதை காட்டுகிறது. எனவே இதை பற்றி விரிவாக பேச ஒன்றும் இல்லை.


இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நான் மட்டுமல்ல, அகிலேஷ், தேஜஸ்வி, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சி தலைவர்கள் காங்கிரசின் செயல்பாடுகளை கண்டித்து, அக்கட்சிக்கு எதிராக பேசி உள்ளனர்.


தற்போது காங்கிரசின் அணுகுமுறையை உருவாக்கியது ராகுல். இந்த அணுகுமுறையானது இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது. இது பாஜவுக்கு உதவும் வகையிலே உள்ளது. பாஜ நலன்களுக்கு உதவும் வகையில் ராகுல் திறம்பட செயல்படுகிறார்.


இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.




பா.ஜ.க,வை எதிரத்து ஒரு வார்த்தை ?

பாஜக அல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும் என்பதற்காகவே தவெக-வை ஆதரிக்கிறோம்’ என்று பீற்றிக்கொள்ளும் ‘முற்போக்காளர்’களும் கூட இது குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.


பாஜக ஒன்றிய அளவில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்ப்பது ஒரு பக்கம் கிடக்கட்டும்; ஆனால் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக, உரிமைகளுக்கு எதிராக  ஒன்றிய பாஜக அரசும் ஆளுநரும் செய்கின்ற எண்ணற்ற துரோகங்களுக்கு எதிராக ‘கொள்கை எதிரி’யான பாஜக குறித்து ஒரு வார்த்தை பேசி இருப்பாரா இந்த விஜய்?


அப்படி இருக்கின்ற பொழுது தவெக-வை பாஜக எதிர்ப்பு சக்தி என்று கருதுவதும், அதனுடன் கூட்டணி சேர்ந்து அமைச்சரவையில் அங்கம் வகிப்பதும், அதனை நியாயப்படுத்துவதும் விசிக., ஐயூஎம்எல் போன்ற கட்சியினருக்கு அசிங்கமாகப் படவில்லையே ஏன் என்பதுதான் வேடிக்கையான விடயம்!

விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே நடக்கின்ற கணக்கற்ற குற்றச் சம்பங்களிலிருந்தே, அதிலும் தவெக-வினரே மிகுதியான குற்றவாளிகளாக பவனி வருவதிலிருந்தே மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமே என எண்ணி இன்னும் ஆதரவை வாபஸ் வாங்காமல் நீடித்திருப்பதற்கு என்ன வியாக்கி யானங்களை  இடதுசாரிகள் சொல்ல முனைந்தாலும் அவை ஏற்கத் தகுந்ததல்ல.


வைகோவும், துரை வைகோவும் ‘மாபெரும் புரட்சித் தலைவர்’ விஜய்யுடன் புதிய உறவு கொண்டிருப்பதை பெருமையாகக் கருதுவதும்,தமது இல்லம் தேடி வந்த விஜய்யை போற்றி புகழ்ந்து தமது வீட்டு பணியாளர்களை கூட விஜய்யிடம், வைகோ அறிமுகம் செய்து வைத்ததும், திருச்சியில் துரை வைகோ, விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து,  “ ‘துரதிர்ஷ்டவசமாக’ உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி யிட்டுவிட்டது; இல்லையேல் எங்களது இரு எம்எல்ஏக்களும் தங்கள் அரசுக்கு முழுமனதான ஆதரவை வழங்கி இருப்போம்” – என்ற பாணியில் புளகாங்கிதமாக மெய் சிலிர்த்துப் பேசி இருப்பதும் இவர்களின் பிழைப்புவாத ஆபாச வக்கிர அரசியலை பறைசாற்றுகிறது.


திமுக தயவில் திருச்சி எம்பியாக துரை வைகோவுக்கு…! மாநிலங்கள் அவை உறுப்பினராக திமுக தயவில் வைகோவுக்கு…! இப்போது அதிமுக பிழைப்புவாதிகள் போலவே தொண்டை கிழிய முற்போக்கு பேசும் வைகோ கும்பலும் திசை மாறுகின்றன என்பதே உண்மை.


அதிலும் பெரிய வேடிக்கை திமுகவிலிருந்து வெளியேறிய வைகோ, மதிமுக-வை உருவாக்கியதற்கான பிரதான காரணமாக கருணாநிதியின் குடும்ப அரசியலையே முன்னிறுத்தினார்.

ஆனால் இவரோ தனது மகன் துரை வைகோ-வை முன்னிறுத்துவது குறித்து அசிங்கமாகக் கருதவில்லை. இதனாலேயே எண்ணற்றோர் இவரது கட்சியிலிருந்து முன்னரே வெளியேறி விட்டனர்.


அண்மையில் அவரது கட்சியின் முக்கிய தளபதியாக இருந்த மல்லை சத்யாவும் வெளியேறி விட்டார்.

ஓட்டுக் கட்சிகளில், கட்சி மாறுவதில் கூட்டணி மாறுவதில் பெரும் பகுதியினர் இத்தகைய ‘யோக்கியதாம்சத்தையே’ பெரும் பகுதியினர் கொண்டுள்ளனர்.


அதே வேளையில் மிகக் குறைந்த எண்ணிக்கையினராய் இருந்தாலும் தாம் புரிந்து கொண்ட அரசியல் அளவிற்கு நியாயமான கொள்கை உணர்வின் அடிப்படையில் கட்சி மாறுவதை கூட்டணி மாறுவதை நாம் குறை சொல்வதற்கு ஏதுமில்லை.

அந்த வகை என்பது மிக மிக சொற்பமாக அருகி விட்டதே என்பதுதான் வேதனை!

-எழில்மாறன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை