"சுரன்"

📰  காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு. விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டம் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி அமல்.📰  கும்மிடிப்பூண்டி அருகே வட மாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை. பீகார் மாநில கொடூரனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.📰  கும்மிடிப்பூண்டி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆவேச போராட்டம். ஒருநாள் கழித்து ஆறுதல் கூற வந்த தவெக எம்எல்ஏ உடன் வாக்குவாதம்.📰  3 வயது குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரஇளைஞரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு. வட மாநில கொடூரன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைப்பு.தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளான 7 சிறுமிகள். குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கீறதா?என பொதுமக்கள் அச்சம்.கேள்வி?📰  அக்னி நட்சத்திரம் முடிந்தும் விடாமல் கொளுத்தும் வெயில். தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு.📰  தமிழ்நாட்டில் தாம்பரம், செஞ்சி, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் கனமழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி.குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கோட்டை விடுவதாக உதயநிதி புகார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்.📰  தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கேள்வி. 6 மாத Trial Period முடியும் வரை சிறுமிகள் பாதுகாப்பையும், உயிரையும் இழக்க வேண்டுமா என்றும் காட்டம்.📰  குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாக செல்வப்பெருந்தகை வேதனை. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பெ.சண்முகம் ( சி.பி.எம்)கண்டனம்.📰  திருவண்ணாமலை அருகே கர்ப்பிணியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர். தர்ம அடி கொடுத்து போலீசிடம் பிடித்துக்கொடுத்த பெண்.📰  தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு. 55 லட்சம் ரூபாய் வருவாய்க்காக 7 கோடி ரூபாயை இழப்பதா என அரசுக்கு கேள்வி.📰  ராசிபுரத்தில் சாலையோரம் தங்கக் காசு கிடப்பதாக பரவிய தகவலால் ஊரே தேடுதல் வேட்டை. கிடைத்த அனைத்தும் செப்பு காசுகள் என தெரியவந்ததால் ஏமாந்த மக்கள்.📰  புதுச்சேரி பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம். நண்பர்களை ஏவி தந்தையை மகனே தீர்த்துக் கட்டியது அம்பலம்.📰  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல். ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணையுள்ளதாக வெளியான தகவலால் அதிமுகவினர் அதிர்ச்சி.📰  நடிகர் வாகை சந்திரசேகருக்கு ஒன்றிய அரசின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு. கலைத்துறையில் சிறப்பான முறையில் பங்காற்றியதற்காக கவுரவம்.📰  சேலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர். கட்டுப்படுத்த முடியாமல் தவித்த சிங்கப்பெண் படைக்கு பொதுமக்கள் உதவி.📰  ஜெய்ப்பூரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் மீது தாக்குதல். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் தாக்கப்பட்டதால் பரபரப்பு.📰  டெல்லி, ராஜஸ்தானில் வானுயர அளவுக்கு வீசிய புழுதிப் புயல். சாலை தெரியாத அளவுக்கு புழுதி புயல் சூழ்ந்ததால் மக்கள் அவதி.📰  ஹோர்மூஸ் நீரிணை வரும் வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக திறக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு. ஈரான் வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி தொடரும் என்றும் உறுதி.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை