நல்லா ஆள்றாங்க ஆட்சி...!
அதிமுக கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுவரை அதிமுகவில் இருந்து மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி ராஜினாமா செய்து உள்ளனர்.
ராஜினாமா செய்த கையோடு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தும் வருகின்றனர். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணம்?
அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியே. அதாவது, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலமாக எதிர்க்கட்சி தலைவராக ஆக முடியாத நிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இங்கு தான் அதிமுகவின் பிளவு ஆரம்பித்து இருக்கிறது.
ஏனென்றால், தவெக என்ற புதிய கட்சி ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான பெரும்பான்மைக்கு சற்றே தடுமாறி போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடது சாரிகள், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கொடுத்ததால் தவெக தலைவர் முதலமைச்சரானர்.
ஆனால், இந்த சம்பவத்திற்கு முன்பாகவே தவெக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்ததாகவும் எம்எம்ஏல் சி. வி. சண்முகம் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு மத்தியில், சட்டசபையில் தவெக தலைமையிலான ஆட்சி தொடர கடந்த 13 மே 2026 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, அதிமுகவின் எஸ். பி. வேலுமணி தரப்பில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துவிட்டனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ். பி. வேலுமணி தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டியும், விமர்சித்தும் வந்த நிலையில், ஒரு கட்டத்தில் எஸ். பி. வேலுமணி தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் தவறை உணர்ந்து எடப்பாடி பக்கமே சாயத்தொடங்கிவிட்டனர்.
இதில், மற்றொரு டிவிஸ்ட்டாக 4 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியே வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு தவெகவில் ஐக்கியம் ஆகிவிட்டனர். இந்த 4 எம்எல்ஏக்களும் எஸ். பி. வேலுமணி தரப்பை சேர்ந்தவர்கள்.
மேலும், தவெகவு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற நினைத்த நிலையில் அதிலும் ஏமாற்றமே மிச்சம்.
இதையெல்லாம் பார்த்த எஸ். பி. வேலுமணி தரப்பு வேறு வழியே இல்லாமல் மீண்டும் எடப்பாடி பக்கமே சென்றுவிட்டனர்.
சரி ஒருவழியாக அனைத்தும் முடிந்து அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி எண்ணிக்கொண்டிருந்த வேளையில் மற்றொரு ஸ்விட்டாக சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, எம். ஆர். விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதுவரை 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து, அதிமுகவில் இருக்கும் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 47 லிருந்து 41 ஆக குறைந்துள்ளது.
1,ஜெயக்குமார் பெருந்துறை மே 25, 2026
2,மரகதம் குமரவேல் மதுராந்தகம் மே 25, 2026
3,சத்யபாமா தாராபுரம் மே 25, 2026
4,இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம் மே 26, 2026
5,சி. விஜயபாஸ்கர் விராலிமலை ஜூன் 16, 2026
6,எம். ஆர். விஜயபாஸ்கர் கரூர் ஜூன் 29, 2026
நல்லா ஆள்றாங்க ஆட்சி...!
தனது ஆஸ்தான ஜோசியருக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய். தனது புரமோஷன் அட்மினுக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய். இதுவரையிலான தனது செலவுகளைப் பார்த்துக் கொண்ட ஒருவருக்கு அரசாங்க பதவி கொடுத்தார் விஜய்.
ஓடாத தனது படத்தை எடுத்த படத்தின் தயாரிப்பாளருக்கு அரசாங்க பதவி கொடுத்துள்ளார் விஜய். இனி அடுத்தடுத்து அவர் யாருக்கு எல்லாம் என்ன பதவி எல்லாம் கொடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டமான காரியம் அல்ல.
தூய ஆட்சி என்று சொல்லி விட்டு கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் துப்பி வருகிறார் விஜய். சொந்தப் புத்தியும் இல்லை, சொல்லுவார் சொல்லும் உறைக்காது என்பதற்கு இந்த நியமனங்களே சாட்சியங்கள்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர், தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியவர்.
மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டியவர். தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசின் துறை சார்ந்த அமைச்சகங்கள் மூலமாக செயல்படுத்த வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.
அவர் ஒன்றிய அமைச்சர்களோடு பேச வேண்டும். ஒன்றிய அரசுத் துறை செயலாளர்களோடு பேச வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு சாதகமாக, அல்லது பாதகமாக ஒன்றிய அரசு செயல்படுவதைக் கண்காணித்து மாநில அரசுக்கு சொல்ல வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டிய ஒருவருக்கு தமிழ்நாடு தெரிந்திருக்க வேண்டும்.
மாநில நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இவர் பேரைச் சொன்னால் டெல்லியில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.

விஜய்க்கு மட்டுமே தெரிந்த, விஜய்யை வைத்து படம் எடுத்த, மற்றபடி தமிழ்நாட்டின் திரைத்துறைக்கே கூட தொடர்பு இல்லாத, கர்நாடகாவை மையமாகக் கொண்ட கே.வெங்கட நாராயணா என்பவரை தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமித்திருக்கிறார் விஜய்.
கேட்டால், 'அவர் கர்நாடகம் அல்ல, ஆந்திரா' என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். சரி, தமிழ்நாட்டைச் சாராத ஒருவரைத்தான் தமிழ்நாட்டின் சிறப்புப் பிரதிநிதியாகப் போட வேண்டுமா? ஜோசியர், நண்பர், அட்மின் வரிசையில் இவரையும் பக்கத்திலேயே சேர் போட்டு வைத்துக் கொள்ள வேண்டியது தானே?
அவரை எதற்கு டெல்லி பிரதிநிதி என்று சொல்லி தமிழ்நாட்டை அவமானப்படுத்த வேண்டும்?
'கே.வெங்கட நாராயணாவுக்கு என்ன அனுபவம் இருக்கிறது?' என்ற நியாயமான கேள்வியை பலரும் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான்.
'நமக்கே எந்த அனுபவமும் இல்லை, டெல்லி சிறப்புப் பிரதிநிதி மட்டும் அனுபவம் வாய்ந்தவரை நியமிக்க வேண்டுமா?' என்று முதலமைச்சர் விஜய் நினைத்திருக்கலாம்.
ஜோசியரை, தனக்கு செலவு செய்பவரை, தனது அட்மினை, தனது படத் தயாரிப்பாளரை நியமித்ததற்காக இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது விஜய்யின் துணிச்சலைத்தான். 'எவரையும் நான் நியமிப்பேன், கேள்வி கேட்க எவருக்கும் உரிமை இல்லை' என்று நினைக்கிறார் விஜய்.
தான் என்ன செய்தாலும் தனது கூட்டணிக் கட்சிகள் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் விஜய். அவர்களுக்கு சொரணையோ கோபமோ வராமல் இருக்க மந்திரி பதவியைக் கொடுத்தாகி விட்டது.
அவர்கள் தயவும் தேவைப்படாமல் ஐந்து பேரை ராஜினாமா செய்ய வைத்துள்ளோம். இடைத்தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைத்தால் இந்தக் கூட்டணிக் கட்சிகள் தயவும் தேவையில்லை.
ஊடகங்கள், இன்னமும் தி.மு.க.வைக் குறை சொல்வதில் தான் சுயசுகம் கண்டு வருகின்றன என்பதையும் விஜய் நன்கு புரிந்து வைத்துள்ளார். அவர்கள் எதிர்ப்பும் வராது.
தனது கட்சிக்கு பொதுக்குழுவும் இல்லை. செயற்குழுவும் இல்லை. கேள்வி கேட்பார் எவருமில்லை. கிடைத்த பதவியை தக்க வைத்தால் போதும் என்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்கள் மத்தியிலும் சலசலப்பு வராது.

இத்தகைய சூழலில் தான் வைத்ததுதான் சட்டம். தான் செய்வதுதான் ஆட்சி என்று இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
தேர்தலுக்கு முன்னதாக அவர் பேசிய பேச்சில் ஒரு துளி உண்மையான நம்பிக்கை இருந்திருக்குமானால் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாலியல் புகாரை தனது ரசிகை ஒருவரே வைத்த மறுநிமிடமே அவரது பதவியை பறித்து கைது செய்திருப்பார்.
அமைச்சர் சரத்குமார், போதை மருந்து பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதும், அவரது அமைச்சர் பதவியை பறித்திருப்பார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதனின் நடவடிக்கை மிகமிக அசிங்கமானது.
அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருப்பார். இது எதுவும் செய்யவில்லை விஜய். ஏனென்றால் இவர்கள் ஒவ்வொருவரும் அவருக்குத் தேவை. இவர்கள் எண்ணிக்கையில்தான் அவரது பதவி நாற்காலியே இருக்கிறது.
எனவேதான் பாலியல், போக்சோ, போதைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களால் முதலமைச்சர் நாற்காலியில் நீடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
முதலமைச்சர் விஜய் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி போட்ட வழக்கு,சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரி ஏய்ப்பு வழக்குகள், கரூரில் 41 பேர் மரணத்துக்கு காரணமானவர் என சிபிஐ வழக்கு. இப்படிப்பட்டவர் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?
தனது தகுதிக்கு ஏற்றவர்களை அவர் நியமித்துக் கொள்கிறார். நல்லா ஆள்றாங்க ஆட்சி...!






