இதுவும் பொய்தான் !
தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி: எங்களை யாரும் அணுகவில்லை – இந்திய கம்யூனிஸ்ட்
தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் தங்களை அணுகவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ள அக்கட்சி, இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை.இதுவும் பொய்தான் .
என விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு நீதிமன்றக் காவல்தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய கணினிகளைச் சரிபார்க்கும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான கோபிநாத்திடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
அவர் முதலில் கூறப்பட்டபடி 18 ஹார்டு டிஸ்க்குகளை மட்டும் விற்கவில்லை என்றும், மொத்தம் 35 ஹார்டு டிஸ்க்குகளைத் திருடி, பெங்களூருவில் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘ குதிரை பேர சி.எம் தானே நீங்க!” !மக்கள் போராட்டங்களுக்காக ஒரு நாள் கூட வெயிலில் நின்று பழகாத, வியர்வையைப் பார்த்தாலே 'அய்யய்யோ' எனப் பதறும் ஒருவர் திடீரென்று 'அரசியல்' வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
சொந்தமாக 118 சீட்டுகளைக் கூட வெல்ல வக்கில்லாமல், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்த சோபாவின் புகழ் "குதிரை பேர சி.எம்" தானே நீங்க!
உங்களுக்கு எங்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
அட்மினிஸ்ட்ரேஷனில் 'அ' கூடத் தெரியாத, எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத ஒரு தற்குறியின் கையில் அதிகாரம் சிக்கியிருப்பதால்தான், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!அரசியலமைப்பு நெறிமுறைகளோ, மாநில உரிமையோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறதா உங்களுக்கு? முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் நாளிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'வந்தே மாதரத்தை' முதலில் வாசிக்க விட்டு, கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சுயமரியாதையற்ற சி.எம் தானே நீங்க!
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே அவமானம் இரண்டு முறை தொடர்ந்ததே, அதைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத தொடைநடுங்கி சி.எம் தானே நீங்க?
வழக்கம்போல மைக்கைப் பிடித்து ஆடியோ லான்ச் மாதிரி கத்த வந்தப்போ, ஆளுநர் "ஜஸ்ட் வெயிட்" என்று முகத்திலேயே அடித்த மாதிரி சொன்னபோது, ரோஷமில்லாமல் வாயடைத்து நின்ற நபர் தானே நீங்க!
மாநில மானத்தை ஆளுநரிடம் தான் அடகு வைத்தீர்கள் என்றால், மாநில உரிமையைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து நிற்கிறீர்கள்!
"தமிழ்நாட்டில் இப்போது உட்கார்ந்திருப்பது ஒரு டம்மி சி.எம்; அவரால் எங்களை எதுவும் எதிர்க்க முடியாது, நாங்க மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடகா துள்ளிக் குதித்துக் கொக்கரிக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி உரிமையைக் காக்கத் துப்பில்லாமல், அண்டை மாநிலத்துக்காரன் முகத்தில் கரியைப் பூசும்போதும் திருப்பிப் பேசத் தைரியமில்லாத கையாலாகாத சி.எம் நீங்க!
மாலை ஆறு மணிக்கு மேல் கேரவனுக்குள்ளும் ஏசி ரூம்குள்ளும் ஒளியும் உங்களுக்கு மக்களின் வலி என்ன தெரியும்? புயல், வெள்ளம் என்று மக்கள் தவித்தபோதோ, உரிமைக்காகப் போராடியபோதோ ஒரு நாளாகிலும் களத்திற்கு வந்தீர்களா?
சொகுசு வாழ்க்கையில் காலத்தைக் கழித்துவிட்டு, திடீரென்று 'ரட்சகர்' மாதிரி வரும் இந்த 'டூரிஸ்ட் அரசியல்வாதி'க்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
சொந்தப் பொறுப்புகளையே தட்டிக்கழிக்கும் ஒரு சோம்பேறியால் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியுமா வெட்டி சி.எம்?
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச சட்ட விதிகளோ, அறிவோ கூட இல்லாத மக்கு சி.எம் நீங்க!
கொள்கையை வைத்து ஓட்டுக் கேட்க வக்கில்லாமல், பிஞ்சுக் குழந்தைகளைத் தூண்டிவிட்ட உங்களது அரசியல் வறுமையும் கோழைத்தனமும் தான் உங்களது அக்மார்க் 'நாறசக்தி' அரசியல்!
ஆட்சியைப் பிடிப்பதற்காக நீங்க செய்த குதிரை பேர அரசியலையும், உங்களது காப்பி-பேஸ்ட் அரசியலையும் மூடி மறைக்க எங்களை வம்புக்கு இழுக்காதீங்க!
இந்தச் சோம்பேறித்தனமான சொகுசு அரசியலையும், மாநில உரிமையை அடகு வைக்கும் கோழைத்தனத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இல்லையென்றால், மக்கள் உங்க
ளை அரசியலை விட்டே அடித்து விரட்டுவார்கள்.
அள்ளிவிட்ட வாக்குறுதிகளை உருப்படியாகச் செய்யப் பாருங்கள்;
இல்லையென்றால் உங்களது வக்கற்ற, திறமையற்ற அரசு வெகு விரைவில் மக்களால் தூக்கியெறியப்படும்!
-தி.மு.க.ஐ.டி.அணி அறிக்கை.
கம்யூ கட்சி அலுவலகத்துக்கு ஆண்கள் அணியும் பேண்ட் அணியாமல், பெண்கள் அணியும் லெக்கிங்க்ஸ் அணிந்து பிரவீன் சக்கரவர்த்தி வந்ததால் பரபரப்பு.
சட்டமன்றப் பேரவைக் கூட்டம் !
தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் 2026 ஆம் ஆண்டு, ஜூன் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூடும். அன்று கூடும் சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வு கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை அதிகமாக பார்க்க வேண்டும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர், அரசியலில் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் மிக ஆர்வத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த முதல்வரை நேரலையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். சட்டப்பேரவை முழுவதுமாக நேரலை செய்வது தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

இதுவரையில் காலை 9:30 மணிக்கு துவங்கிய சட்டப்பேரவை கூட்டம், வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காலை 10.00 மணிக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது இருப்பினும், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாக கூறி, கடந்த திமுக ஆட்சியில் அவை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு கடந்த 2024 ஜூலை முதல் காலை 9.30 மணிக்கு கூடத்தொடர் நடைபெற்றது.
இந்த நடைமுறையே இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் 18 ஆம் தேதி கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு கூடும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை கூடிய சட்டப்பேரவைத் தொடரில் ஆளும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதம் அரசியல் ரீதியாக பெரிய பேசுபொருளாகியிருந்தது. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்த விமர்சினத்திற்கு முதல்வர் பேரவையில் பதிலளிக்காமல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பெரும் நகைச்சுவையாக மாறிப்போனது.
இந்நிலையில், மீண்டும் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், காரசார விவாதங்களும் ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதில்கூற வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போன்றவை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


