தேசீய சனாதனக் கல்விக் கொள்கை?

 புதிதாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், இயற்பியலின் தந்தை ‘சர் ஐசக் நியூட்டனுக்கு’, மிகச்சிறந்த விமானி என்றப் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது; கர்நாடக சட்டமன்றம், ஒடிசா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது; ஹம்பி கோயில் வளாகம், கோனார்க் சூரியக் கோயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது என்னப் புத்தகமாக இருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். அது தனிப் புத்தகம் எதுவும் இல்லை.

 தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் ஒடிசா பாடத்திட்டக் கட்டமைப்பு 2025 ஆகியவற்றின் கீழ், நடப்புக் கல்வியாண்டிற்காக பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப்புத்தகம்தான்.ஒடிசாவில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கொடுக்கப்பட்டுள்ள புதியப் பாடப்புத்தகங்களில் கண்டறியப்பட்டுள்ள 1,678 பிழைகளில் மேற்குறிப்பிட்டவை அடங்கும். 

அதிகபட்சமாக 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகளும், 7-ஆம் வகுப்பில் 387 பிழைகளும், 6-ஆம் வகுப்பில் 289 பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தால் இந்தப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.

 பாடப்புத்தகங்களை அச்சிடக் கிடைத்த குறைவான கால அவகாசமே இதற்கு காரணம் என மாநில கல்வி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் கணிதம், அறிவியல், புவியியல், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் உருது உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களில் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளது 

வெறும் கால அவகாசத்தால் ஏற்பட்ட பிழைப் போன்று தெரியவில்லை.

மேலும் இதை வெறும் அச்சுப்பிழையாக மட்டும் பார்க்கமுடியாது, ஒடிசாவின் கல்வி தரத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 உண்மை திரிபு, அறிவியல் தவறுகள், புவியியலை தவறாக காட்டுவது போன்றவை மாணவர்களை தவறாக வழிநடத்தக்கூடியவை.

மேலும் மீண்டும் பாடப்புத்தகங்களை அச்சிட ஆறுமாத காலம் ஆகும் என்பதால், அதேப் புத்தகங்களை கொண்டே ஆசிரியர் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால், அதிலுள்ள பிழைகளை ஆசிரியர்கள் திருத்திக் கொள்ள கூறப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின் இந்த செயல்பாட்டை அலட்சியம் என்பதா? 

அல்லது மெத்தனப்போக்கு எனக்கூறுவதா?

உண்மையில் எளியவர் கல்விகற்பதைகேவலப்படுத்தும் சனாதனப் போக்குதான்(பார்ப்பணசாதியம்)தென்படுகிறது.சேலம்.நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி முரளி  மாமூல் வசூல். சிவசேனா, திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்பிக்களுக்கு லஞ்சம் ரூ.15 கோடியா? ரூ.20 கோடியா?: சஞ்சய் ராவத் பதிவு.



சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,

மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. 

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, Actor Vijay என்பதை மறந்து, இனியாவது 

Chief Minister of Tamil Nadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நலனே கடவுள்பணி !

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது தங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக்கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

இதன் பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

”குன்னூர் என்பது சுற்றுலா பகுதி. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரக்கூடிய பகுதி. அப்பகுதியில் வாகனங்கள் நிற்கமுடியாத சூழல் உள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி,கோடைக்காலங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்துதான் ரூ.10 கோடியில் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நலிவடைந்த திருக்கோவில்களின் நிலையை மேம்படுத்துவதற்கும், பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்வதற்கும், வருவாயை பெருக்குவதற்காகவும்தான் கார்பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. 

அறிவுசார்ந்த அனைவரும் இதை வரவேற்பார்கள். திராவிட மாடல் ஆட்சியில் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை பற்றி முழுமையாக அறியாமல் தற்போதைய அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார்.

நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக. இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. இது போன்ற மிரட்டலுக்கு திமுக பயந்து நிற்காது.

 குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும். திமுகவை இன்னும் அடிக்க அடிக்க உயர்ந்து எழும்புகிற பந்தாகத்தான் இருக்கும். நாங்கள் மேலும் மேலும் நிமிர்ந்து எழுந்து திமிறி நிற்போம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

https://www.facebook.com/share/v/198DmJpvTc/

https://www.facebook.com/share/v/198DmJpvTc/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை