நான் முதல்வன்

 நான் முதல்வன்

பெயர் மாற்றம்-


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கியத் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

குறிப்பாக, லட்சக்கணக்கான மாணவர்களின் வேலைவாய்ப்பையும் திறன் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.


'நான் முதல்வன்' திட்டத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்

கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை சர்வதேச அளவிற்கு உயர்த்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.


இத்திட்டத்தின் கீழ் தற்போதைய உலகளாவிய சந்தைக்குத் தேவைப்படும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள், மென்திறன் பயிற்சிகள் (Soft Skills) மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.



வேலைவாய்ப்பு உறுதி: முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் (MNCs) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கல்லூரிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்குப் வளாக நேர்காணல்கள் மூலம் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டன.


பொது ஆவணங்களின் மதிப்பு: இத்திட்டத்தின் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள், என்னென்ன நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன போன்ற விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் தளங்களில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.


இவை வெறும் விளம்பரப் பதிவுகள் அல்லாமல், மாநிலத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் பொது ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.


தற்போது அமைந்துள்ள புதிய அரசின் கீழ், இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


@naanmudhalvan_ என்ற பழைய பயனர் அடையாளத்தை (User ID) அப்படியே தக்க வைத்துக் கொண்டு, அதன் முகப்புப் பெயரை ' TNSkill Corporation ' என்று மாற்றியிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


மே மாதத்தின் பாதியைக் கடந்து அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டிருந்த சாதனைப் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


மேடைகளில் வெளிப்படையான நிர்வாகம் (Democratic Transparency) குறித்துப் பேசும் புதிய அரசு, முந்தைய அரசின் திட்ட ஆவணங்களை டிஜிட்டல் தளங்களில் இருந்து மறைப்பது நிர்வாகப் பொறுப்புணர்வுக்கு (Public Accountability) எதிரானது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

அரசியல் காழ்ப்புணர்ச்சி

முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, அரசியல் காரணங்களுக்காக முடக்க நினைப்பது அல்லது பெயர் மாற்றித் தங்களின் திட்டமாகத் தம்பட்டம் அடிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்ற கருத்து திமுக ஐடி விங் வலுவாக முன்வைக்கப்படுகிறது.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,


ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறினாலும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கும் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


ஸ்டிக்கர் கலாச்சாரம்: பழைய திட்டங்களின் வரலாற்றை அழித்துவிட்டு, புதிய பெயர்களைச் சூட்டி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் 'ஸ்டிக்கர் அரசியல்' இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன.


அரசியல் களத்தில் விமர்சனங்களும் கொள்கை மாறுபாடுகளும் இருப்பது இயல்பானது என்றாலும், அவை மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களைப் பாதிக்கக் கூடாது.


இன்ஸ்டாகிராம் போன்ற பொழுதுபோக்குத் தளங்களில் பதிவுகளை அழிப்பது போல, ஒரு மாநிலத்தின் கல்வி வரலாற்றையோ அல்லது மாணவர்களின் உழைப்பையோ அத்தனை எளிதாக மறைத்துவிட முடியாது.


எனவே, புதிய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கடந்து, தமிழக இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சிறந்த நிர்வாகத்தை வழங்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாகும்.





ரீல்ஸ்’சை விட்டு, ‘ரியல்’லுக்கு வாங்கோ…

விஜய் ப்ரோ…!


கோட்டு’ போடுங்கோ… ‘சூட்டு’ போடுங்கோ…!

உங்க கோட்… உங்க சூட்… அவற்றை நீங்கள் அணிவதை தப்புனும் யாரும் சொல்லல.

அதே வேளையில் தமிழ் ‘நாட்டு’ மக்கள் ‘பட்டு’ அல்லலுரும் ஒரே மாதக் கொடும் துயரங்கள் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் என்று தான் கோருகிறோம்.


முடியலையா? இடத்தை ‘காலி செய்யுங்கள்’ என்று தான் வேண்டுகிறோம்!


ஏனெனில் ஆட்சியைப் பிடிக்க நீங்களும் உங்கள் அடிவருடிக் கும்பலும் வினாடிக்கு வினாடி பரப்பிக் கொண்டிருந்த ‘ரீல்ஸ்’ அனைத்திற்கும் தீர்வு காண வேண்டிய இடத்தில் இன்று நீங்கள் அல்லவோ அமர்ந்து விட்டீர்கள் ப்ரோ?


இப்போதும் அதே ‘ரீல்ஸ்’சை விட்டுக் கொண்டிருந்தால் கொதித்தெழும் மக்கள் முன்னிலையில் தவெக சாம்பலாகி விடும் என்பதை மட்டும் உணருங்கள் ப்ரோ.

திமுக ஆட்சியில் இருந்த பொழுது, பாஜக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றும்போது என்ன சொன்னீங்க?


‘ஸ்டாலின் ப்ரோ எது எதுக்கோ டெல்லிக்கு பறக்குறீங்கல்ல…கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கும் கொஞ்சம் அப்படியே டெல்லிக்கு பறந்து போய் பாஜகவுடன் போராடாலாமுல்ல…’ என்று கதைத்தீர்கள் தானே? நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை எட்டி விட்டதே!


நீங்கள் டெல்லிக்கு பறக்க வேண்டாம்; போராட வேண்டாம்; வாய் திறந்தாவது பாஜகவுக்கு எதிராக இரண்டே வார்த்தைகள் கண்டனம் தெரிவித்தீர்களா? முதல் சந்திப்பை பிரதமருடன் 10 நிமிடம் நிகிழ்த்தியதாக(?) கூறப்பட்டதே,

அப்பொழுதாவது ‘போர்க் காரணங்களை போலியாக கூறி வணிக சிலிண்டர், வீட்டு சிலிண்டர் விலையை ஏற்றாதீர்கள்’ என்று கோரிக்கை வைத்தீர்களா?


உங்களது ‘வீரப்பராக்கிரக’ வாய்ச் சவடால்கள் எல்லாம் எங்கே தொலைந்து போயின ப்ரோ?


விஜய் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள்ளாக தமிழ்நாடே தாங்க முடியாத அளவிற்கு  கொடுமையான குற்றச் சம்பவங்கள், மக்கள் துயரங்கள் நடக்காத நாளில்லை. இவற்றில் பலவற்றை யாம் ஏற்கனவே பட்டியலிட்டு இருக்கிறோம்.


கோவை சூலூர் பகுதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியது.

காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமியை தவெக கிளைச் செயலாளர் தினேஷ் பாலியல் வன்புணர்வு செய்தது.

நடைப்பயிற்சி சென்ற 85 வயது மூதாட்டி முதல் தொட்டிலில் படுத்து உறங்கிய 2 ½ வயது குழந்தை வரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது.


விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது.

15 வயது முதல் 18 வயது வரையிலான இளம் சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது; சிறுவர் சிறுமிகளுக்கான சீண்டல்கள் மோதலாக வெடித்து ஒரு இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டது.


ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ஒரு இளம் பெண்ணை தொடர்பு கொண்ட தவெக-வினர் ஆதவ் அர்ஜூன், புஸ்ஸி ஆனந்திடம் கூறி வேலை வாங்கித் தருவதாக பொய் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்தது; இதில் ஜெயபால்,  பாலமுருகன் இருவர் மட்டும் கைதாகி இருப்பது; இதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வில்லை என்பதோடு அவர் அப்பெண்ணுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டிருப்பது.


காங்கேயம் பகுதியில் சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்து பலியாக்கி இருக்கிறார்கள் சிறுவர்கள்.

ராமநாதபுரத்திலும் ஒரு பெண்ணை ஏமாற்றி தவெகவினர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து லாட்ஜில் தங்க வைத்து பாலியல் சீண்டலுக்கு முயற்சித்தது.

திருப்பத்தூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.


அரசுப் பேருந்து ஓட்டுநரை தவெக ‘பிரமுகர்’ தலைமையிலான கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பது.

கொலை – கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருப்பது.

போதை வஸ்துகள்; போதை மாத்திரைகள் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வ சாதாரணமாக வியாபாரத்திற்கு உள்ளாக்கப்படுவது.


தங்குதடையற்ற ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற அனுமதிப்பது.

விவசாய கடன் தள்ளுபடி பிரச்சனையில் விவசாயிகளை ஏமாற்றி வயிற்றில் அடித்திருப்பது.


வறுமையின் காரணமாக மதுரை ராமராயர் மண்டபம் சாலையில் வள்ளி (45) தற்கொலை செய்து கொண்டு மாண்டிருப்பது.


அரசுப் பள்ளி துவக்க நாளில் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குதல் என்ற பெயரில் வழக்கத்திற்கு மாறாக தவெக-வினர் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து மாணவ மாணவியர், ‘முதல்வர் விஜய்யின் கொள்கைகளை கற்று முன்னேற வேண்டும்; அப்பொழுதுதான் எதிர்காலம் ஒளி மிகுந்ததாக மாறும்’ – என்று உரை நிகழ்த்தி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் பாய்ச்சியது. இதனால் ஆசிரிய பெருமக்கள் பெரும் வேதனைக்குள்ளானது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள காரையூரில் அஸ்வின் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் உட்பட கும்பலாக தண்ணி அடித்து விட்டு ஏற்பட்ட தகராறில் அஸ்வினை கழுத்து அறுத்து கொலை செய்தது.


விஜயின் சொந்த தொகுதியான பெரம்பூரில் தலை, கால், கை இல்லாத ஆண் சடலம் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது.


தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில்/ கிராமங்களில் கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு போன்ற அக்கிரமங்கள் நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி இருப்பது.


நாள்தோறும் குறைந்தது 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு நடைபெறுவது; குழந்தை குட்டிகளுடன் மக்கள் தெருவில் தஞ்சம் புகுவது; மின்வாரிய அலுவலகங்களை மக்கள் முற்றுகையிடும் சூழல் உருவாகி இருப்பது; போலீஸ் சமாதானப்படுத்துவது; ‘நாங்கள் மறுநாள் வேலைக்குப் போக வேண்டுமா? இல்லையா?


ஒட்டுமொத்த தூக்கத்தையும் நாங்கள் தொலைத்தால் எப்படி மறுநாள் வேலைக்குப் போக முடியும்? மின்வாரிய அதிகாரிகள் ரெஸ்பான்ஸ் செய்ய மறுக்கிறார்கள்; மக்கள் பிரதிநிதிகள் ஓடி ஒளிகிறார்கள்…’- என்று தொழிலாளர் குடும்பத்தினர் ஆண் பெண் கூட்டம் சாலையில் நடுநிசியில் நின்று போர்க் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். பெயருக்கு போலீஸ் தான் வருகிறது!


கோரிக்கைகளை நிறைவேற்ற, விஜய் ஆட்சியில் காது கொடுத்து கேட்கத்தான் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் உட்பட வேறு எவரும் இல்லை.(‘ஸ்டாலின் சார், மக்கள் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா?’ – என்று ‘ரீல்ஸ்’ காண்பித்த விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின் இன்று ‘ரியல்’லில் முக்காடு போட்டு படுத்துக் கொண்டார்.)


இப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு பிரச்சனைகளும், கொலை கொள்ளை கொடூரங்களும், மின்வெட்டு பிரச்சனைகளும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் நாள்தோறும் உழைக்கும் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.


இவை ஒருபுறம் என்றால், வாக்குகளை அறுவடை செய்ய மக்கள் செவிகளில் தேனாகப் பாயச் செய்த எண்ணற்ற வாக்குறுதிகள் அனைத்தும் மூட்டை கட்டி ஓரங்கட்டப் பட்டிருக்கிறது விஜய் அவர்களே!

ஓரிரண்டையாவது பெயருக்கென நிறைவேற்ற முடியவில்லையே உங்களால் ஏன் ப்ரோ?


விஜய் ப்ரோ, தமிழகத்தை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்ற எத்தனிக்காதீர்!


தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை தவெக கட்சி தலைமை அலுவலகமாக மாற்றிட முயற்சிக்காதீர்!


அதன் மூலம் குதிரை பேரத்தை முடுக்கி விட எத்தனிக்காதீர்!


‘ரீல்ஸ்’ வேறு; ‘ரியல்’ வேறு என்பதை உணர முற்படுவீர்!



எழில்மாறன்


    


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை