‘ரீல்ஸ்’ வெளியிடும் அரசு

# குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள்; ஆதாரம் இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாதீர்கள்.ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறாமல் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது- செந்தில் பாலாஜி.
@ திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
# முதல்வர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிடப்படுகிறது.
ஏதோ இத்தனை ஆண்டுகள் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாததுபோல, அமைச்சர் பேசுகிறார்.
பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை.-செந்தில் பாலாஜி.
# தினமும் சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? கரூரை கைகழுவி விட்டது போல, இதையும் புறக்கணிக்கிறீர்களா விஜய் அவர்களே?
- திருவள்ளூரில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தை முதலமைச்சர் சந்திக்காததை விமர்சித்த நயினார் நாகேந்திரன்.
@ தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.. இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.
மாதர் சங்கத்தினர் புகார்
* திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
* திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாஞயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிக்கு அனுமதி கொடுக்க திமுக அரசு லஞ்சம் கேட்டதாக ஸ்ரீதர் வேம்பு சொன்னது பொய்?
அம்பலமான ஆதாரம்
தவெக அரசை பாராட்டும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு செய்த போஸ்ட் ஒன்று தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வேண்டுமென்றே பொய் சொல்வதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, லிங்க்ட்இன் (LinkedIn), எக்ஸ் (X) போன்ற தளங்களில், புதிய தமிழக அரசு மிக வேகமாகச் செயல்படுவதாகவும், லஞ்சம் எதுவும் வாங்காமல், சிவப்பு நாடா முறையும் இன்றி ஒரே நாளில் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், முந்தைய திமுக அரசை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்காகவே ஒரு தரப்பினர் இந்த புதிய தவெக அரசைத் திட்டமிட்டு அளவுக்கு அதிகமாகக் கொண்டாடுகிறார்களோ என்ற ஐயமும் மற்றொரு பக்கத்தில் எழாமல் இல்லை.
இந்த அரசியல் விவாதத்தின் மையப்புள்ளியாக தற்போது ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் சமூக வலைதளப் பதிவு மாறியுள்ளது. அது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதர் வேம்புவின் வழமையான புளுகு பதிவு
தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தங்களது 'கலைவாணி கல்வி மையம்' (Kalaivani Kalvi Maiyam) பள்ளிக்கு முந்தைய ஆட்சியில் அனுமதி பெறுவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருந்ததாக ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வி வழங்கும் எங்களது கலைவாணி கல்வி மையம் பள்ளி, முந்தைய அரசிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் பெரும் தாமதத்தைச் சந்தித்தது. அது ஒரு இலவசப் பள்ளியாக இருந்தபோதிலும், கணிசமான அளவு பணம் லஞ்சமாகக் கேட்கப்பட்டது; அதுமட்டுமே ஒரே வழி என்றும் எங்களிடம் கூறப்பட்டது. ஆனால், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதற்கான அனுமதிகள் மிக விரைவாகவும், தானியங்கி முறையிலும் (Automatic) கிடைத்துள்ளன. நமது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான மாற்றத்தைப் பாராட்டுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்திற்கு விஜய் அவர்களுக்கு எனது நன்றிகள்."
ஸ்ரீதர் வேம்புவின் இந்தபுளுகு மூட்டைப் பதிவு, தவெக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு மற்றும.
நெட்டிசன்களின் பதில்கள..
ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பாராட்டுப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் அவருக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். ஸ்ரீதர் வேம்பு அரசியல் காரணங்களுக்காகவும், முந்தைய திமுக அரசு மீதுள்ள வெறுப்பாலும் முழு உண்மையை மறைத்து, தவறான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இணையவாசிகள் முன்வைக்கும் முக்கிய வாதங்கள் இதோ:
2024-லேயே பள்ளி செயல்பட்டதற்கான ஆதாரம்:
நெட்டிசன்கள் ஸ்ரீதர் வேம்புவின் பழைய பதிவுகளையே தோண்டி எடுத்து ஆதாரமாகக் காட்டியுள்ளனர். "ஸ்ரீதர் அவர்களே, உங்களுடைய இந்த கலைவாணி கல்வி மையம் 2024 ஆம் ஆண்டிலேயே முழுமையாகச் செயல்பட்டு வருவதாக நீங்களே ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளீர்கள். பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட பிறகு, இப்போதுதான் புதிய அரசு அனுமதி கொடுத்தது என்று கூறுவது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது மெட்ரிகுலேஷன் பள்ளி அல்ல; NIOS முறை:
இந்த விவாதத்தில் உள்ள மிக முக்கியமான தொழில்நுட்ப விவகாரத்தை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கலைவாணி கல்வி மையம் என்பது தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் அல்லது மாநிலப் பாடத்திட்டத்தின் (State Board) கீழ் வரும் பள்ளி அல்ல. இது தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling - NIOS) மாதிரியில் செயல்படும் ஒரு சிறப்புப் பள்ளியாகும். இதற்கு தமிழக அரசு அனுமதி தேவையில்லை.
மத்திய அரசின் அனுமதிப் பிரிவு:
NIOS கல்வி முறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அங்கீகாரமும், அனுமதியும் வழங்குவது மத்திய அரசின் (Union Government) நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். இதற்கு மாநில அரசோ அல்லது தற்போதைய தவெக அரசோ அனுமதி வழங்க வேண்டிய அவசியமே இல்லை எனும் போது, தவெக அரசுதான் இதற்கு அனுமதி அளித்தது என்று கூறுவது அப்பட்டமான அரசியல் பொய் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் நோக்கமா? சமூக வலைதளப் போர்
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு நெட்டிசன், "வேம்பு சார் முந்தைய அரசு மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், இப்போது புதிய அரசுதான் அனுமதி கொடுத்தது என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால், அவரே 2024 இல் அந்தப் பள்ளி செயல்படுவதாகப் பதிவிட்டுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பதற்காகப் பெரிய மனிதர்களே இப்படித் தவறான தகவல்களைப் பரப்புவது வேதனை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தவெக ஆதரவாளர்கள் எதைச் சொன்னாலும், அரசியல் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களை மக்கள் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது" என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு இதுவரை ஸ்ரீதர் வேம்பு தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை. விளக்கம் தந்தால் அதையும் வெளியிட தயாராக உள்ளோம்.
அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு வெளியிட்டுள்ள மின்சார வாரிய வெள்ளை அறிக்கை குறித்தும், புதிய பணி நியமனங்கள் குறித்தும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் மின்சாரத் துறை அடைந்த வளர்ச்சியையும், தற்போதைய நிர்வாகத் குளறுபடிகளையும் அவர் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுக் காட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய செந்தில் பாலாஜி, “முந்தைய அதிமுக ஆட்சியில் நலிவடைந்த நிலையில் இருந்த மின்சாரத் துறையை மீட்டெடுக்கவும், அதனை மேம்படுத்தவும் திராவிட மாடல் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல அதிரடி நடவடிக்கைகள் எடுதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலின், மின்துறையைத் தனதுசொந்தத் துறையைப் போலக் கருதி, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிக உன்னிப்பாகக் கவனித்து வழிகாட்டினார்.
இதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து பல மடங்கு அதிகரித்த போதிலும், எவ்விதத் தடையுமின்றி பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடிந்தது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தற்போது தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு ஏமாற்று வேலை என்று சாடிய அவர், “தங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மின்சார வாரியத்தின் உண்மையான செலவினங்களை மறைத்து இந்த வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால், மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்படவில்லை என்பது இந்த வெள்ளை அறிக்கையின் மூலமாகவே தங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கோடைக்காலமான மூன்று மாதங்களில் மட்டும்தான் தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை மிக உச்சத்தில் இருக்கும்.
அந்த குறுகிய காலத் தேவைக்கு, தற்காலிக மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்களை மேற்கொள்வதே பொருளாதார ரீதியாகச் சரியானது. அப்படி இருக்கும்போது, தேவையில்லாமல் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என்று தற்போதைய மின்துறை அமைச்சர் கூறுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த காலக் கடன்கள் குறித்துப் பேசிய அவர், “அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்கும் போதே, மின்சார வாரியம் சுமார் 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மின் வாரியத்தில் மின்சாரக் கொள்முதல் உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைத்துக் காட்டினோம்.
தடையற்ற மின்சாரத்தையும் உறுதி செய்தோம். இந்த உண்மைகளை எல்லாம் தற்போதைய அரசு மறைக்கிறது” என்றார்.
மின்துறையில் வழங்கப்பட்ட புதிய பணி நியமன ஆணைகள் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, தற்போதைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் நிர்வாகத்தைக் கடுமையாக விமரிசித்தார்.“ஏதோ கடந்த இத்தனை ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வுகளோ, நியமனங்களோ வழங்கப்படாதது போல தற்போதைய அமைச்சர் பேசி வருகிறார்.
கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில் தேர்தல் அறிவிப்பு (Model Code of Conduct) வெளியான காரணத்தினாலேயே சில பணி நியமனங்களையும், பதவி உயர்வுகளையும் எங்களால் இறுதி செய்ய முடியாமல் போனது.”
மேலும் அவர் கூறுகையில், “நேற்று முதல்வர் விஜயின் கரங்களால் பணி நியமன ஆணை பெற்ற ஊழியர்கள் அனைவரும் திமுக ஆட்சிக் காலத்திலேயே முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
ஆனால், தவெக அரசு ஏதோ தாங்கள் பொறுப்பேற்ற இந்த 40 நாட்களுக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகளையும் அறிவித்து, ஆட்களைத் தேர்வு செய்தது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.
‘வெளிப்படையாகத் தேர்வு நடந்தது’ என்று அவர்கள் போலிப் பெருமையுடன் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வருகிறார்கள்” என்று சாடினார்.
மின்துறையின் உண்மையான நிலைமையை மறைத்து, விளம்பர அரசியலில் தவெக அரசு ஈடுபட்டு வருவதாக செந்தில் பாலாஜி தனது பேட்டியில் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பலன்களைத் தங்களின் சொந்தச் சாதனையாகக் காட்டும் முயற்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



