12ஆயிரம் ஆண்டுகள்,!

📃 வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மும்பை வந்தன. 10 தமிழர்களின் சடலங்களையும் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு.📃 கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச உடைகளை அணியக்கூடாது என்ற புதிய நிபந்தனைகளை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.📃 சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே மின்வெட்டு. பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் அவதி.📃 அதிமுகவில் இருந்து தவெக சென்றவர்கள் சனிக்கிழமை சந்தையில் விற்கப்பட்டவர்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்.📃 ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் மத்திய கிழக்கில் குழப்பம்📃 ஹோர்முஸ் நீரிணை மேலாண்மையில் அமெரிக்காவுக்கு எந்தவித பங்கும் இல்லை என ஈரான் திட்டவட்டம். அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் நுழைய முயன்றால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.📃 ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல். பதிலடியாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியதால் பதற்றம்.





12ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்..!

சுமார் 12,000 ஆண்டுகளாக எவ்வித சலனமும் இன்றி, முற்றிலும் குளிர்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட எத்தியோப்பியாவின் 'ஹெய்லி குப்பி' (Hayli Gubbi) எரிமலை, எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிப்புடன் விழித்தெழுந்துள்ளது.

 இந்தத் திடீர் எரிமலை வெடிப்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த சர்வதேச புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பின் தீவிரம் எந்த அளவுக்குப் பயங்கரமாக இருந்தது என்றால், வெடித்த சில நிமிடங்களிலேயே பூமிக்கு அடியில் இருந்த கருகிய சாம்பல் மற்றும் நச்சு வாயுக்கள் சுமார் 14 கிலோமீட்டர், அதாவது 46,000 அடி உயரத்திற்கு வளிமண்டலத்தில் தூக்கி வீசப்பட்டன.விமானங்கள் பறக்கும் உயரத்தைத் தாண்டி இந்தச் சாம்பல் புகை பரவியதால், அந்தப் பிராந்தியத்தில் வான்வழிப் போக்குவரத்து உடனடியாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்த இயற்கை சீற்றத்தின் ஆகப்பெரும் விசித்திரமே, இதிலிருந்து வெளியான சாம்பல் துகள்கள் எத்தியோப்பியாவோடு நின்றுவிடவில்லை. 

வளிமண்டலத்தின் மேல்மட்டக் காற்றோட்டம் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து, ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா வரை பரவியுள்ளன. 

செயற்கைக்கோள் படங்களில் இந்தச் சாம்பல் படலம் ஆசிய வான்பரப்பை நோக்கி நகர்வது துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

பூமியின் மிக ஆபத்தான மற்றும் துடிப்பான டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் 'அஃபார் தரைச்சமவெளி' (Afar Depression) பகுதியில்தான் இந்த எரிமலை அமைந்துள்ளது. 

பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் உருகிய பாறைக் குழம்பான 'மாக்மா'  டெக்டானிக் தட்டுகளின் அழுத்தத்தால் திடீரென மேல்நோக்கி நகர்ந்துள்ளது. 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மூடிக்கிடந்த எரிமலையின் வாய்ப் பகுதியில் இந்த மாக்மாவும், அதனுடன் சேர்ந்த வாயுக்களும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியதால், ஒரு பிரஷர் குக்கரைப் போல எரிமலை ஒட்டுமொத்தமாக வெறி கொண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

ஹெய்லி குப்பி எரிமலை முற்றிலும் செயலற்ற ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால், இந்த வெடிப்பு நமக்கு ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.

 எவ்வளவு காலம் அமைதியாக இருந்தாலும், ஒரு எரிமலையை நாம் சாதாரணமாக எடைபோட முடியாது. 

பூமிக்கு அடியில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் நிகழலாம் எனப் புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி, சிறப்பிக்கப்பட்டுள்ளது.

 டெல்லியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கரன் சிங் இவ்விருதை அவருக்கு வழங்கினார்.நாடு முழுவதிலும் இருந்து இந்த விருதைப் பெறும் 60-வது இலக்கியவாதி வைரமுத்து ஆவார்.

 தனது பிறந்தநாளன்றே இந்த உயரிய தேசிய விருதை அவர் பெற்றுள்ளார்.

மேலும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். 

இதற்கு முன்னர் மறைந்த எழுத்தாளர்கள் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து ஏற்கனவே 7 முறை சிறந்த திரையிசைப் பாடலாசிரியருக்கான தேசிய விருது, சாகித்திய அகாடமி விருது (கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1964 முதல் ஆண்டுதோறும் இந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுடன், 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, கலைமகள் வெண்கலச் சிலை மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை