கரூர்
பரிதாப41கொலைகள்
சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது செய்தியாளர்களிடம் கூறிய ஆர்.எஸ்.பாரதி "அ.தி.முக.-வை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில் பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படக்கூடிய வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசி இருக்கிறார். கரூரில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி அவர் பொய்யும் புரட்டுமாக பேசி உள்ளார்.கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலே சேர்ந்துவிட்ட காரணத்தினால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்த தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் நேற்று அவ்வாறு பேசியிருக்கிறார்.
கரூர் சம்பவத்தின் போது எங்கள் தலைவர் தளபதி எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நாகரீகம் அறிந்தவர்கள் என அத்தனை பேருமே பாராட்டினார்கள்.
விஜய் அவர்களைப் போல 41 பேர் இறந்த போது முகத்தை மூடிக்கொண்டு ஓடி போய் ஒழிந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவர் அன்று மக்களோடு துணை நின்றார்.
உயிர்களை காப்பாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் உடனடியாக எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரே தலைவர் எங்கள் தலைவர் தளபதி என்பதை அந்த பகுதி மக்களும் மறக்க மாட்டார்கள் தமிழ்நாடும் மறந்திருக்காது.கரூர் வழக்கை விசாரிப்பதற்கு SIT அமைத்து அதன் தலைவராக யாரை அன்று நாங்கள் நியமித்தோமோ அதே காவல்துறை அதிகாரியை தான் இன்று மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறை ஐஜி ஆக நியமித்து உள்ளனர். ஆக நடுநிலையோடு தான் கடந்த திமுக அரசு நடந்து கொண்டது என்பதற்கு இதுவே சாட்சி.
நாங்கள் அமைத்த SIT குழுவின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். சிபிஐ விசாரணையும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரதத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் நேற்றைக்கு பேசிய ஆதவ் அர்ஜுனா. அவர் தான் மெயின் அக்யூஸ்ட். அக்யூஸ்ட் லிஸ்ட்டில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா நேற்றைக்கு சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டு உள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதியுடைய தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை போயிட்டு வந்தார். புஸ்ஸி ஆனந்த் , நிர்மல் குமார், முதல்வரின் தனி செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் , ஆதவ் அர்ஜூனா என இவர்கள் எல்லாம் A1, A2, A3. . என ஆகியூஸ்ட லிஸ்ட்டில் உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கிற போது வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட், வழக்கின் விசாரணையை கெடுக்கிற வகையில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார்.
ஆகவே இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம்.
இந்த ஆதவ்அர்ஜுனாவுடைய புளுகுகளுக்கும், பித்தலாட்டத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் கொண்டுள்ளது.
அவர் யார் என்பது இந்த நாட்டுக்கு தெரியும். இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது கேரளாவில 928 கோடிக்கு லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
அவரிடம் மனைவி அந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட் . இவர் இந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். இப்படிப்பட்ட அக்யூஸ்டுள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டு எங்களை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கு உரிய வகையிலே சட்டரீதியாக நாங்கள் பதில் சொல்வோம் நடவடிக்கை எடுப்போம்.
முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அவரது தொகுதியிலே ஆய்வுக்கு போகிற போது கைது செய்திருக்கிறார்கள் என்றால் இது சர்வாதிகாரத்தின் உச்சம் இதை நிச்சயமாக சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.
இந்த அராத்தை எல்லாம் மிக விரவில் நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த ஆட்சி எத்தனை நாளுக்கு என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. தினமும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாவிதமான தவறுகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கவனிப்பதற்கு இன்றைக்குஇருக்கிறஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. என தெரிவித்துள்ளார்.
கடிதம் மட்டும் போதாது!
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தின் போது, இடது சாரிக் கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகும்.
கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்களுக்கு பேருதவியாக இந்தத் திட்டம் அமைந்தது. ஆனால் இந்திய மக்களுக்கு நலன் பயக்கும் எந்தவொரு திட்டமும் இருக்கக் கூடாது என கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்கியது.
பாஜக ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை தூக்கினார்கள்.
இதற்கான எந்தவொரு காரணத்தையும் ஒன்றிய ஆட்சியாளர்களால் இதுவரை கூற முடியவில்லை.
அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் முழு நிதியுதவியுடன் நடந்து வந்த திட்டத்தின் நடைமுறையை மாற்றி இந்த திட்டத்திற்கான நிதிச்சுமையை 40 சதவீதம் மாநில அரசுகள் ஏற்க வேண்டும் எனவும் விபிஜி ராம்ஜி திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்குதி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது எனவும், நிதிச்சுமையை மாநில அரசு களுக்கு மடைமாற்றுவது பொருத்தமில்லை என்றும் வாதிட்டனர். ஆனால் ஒன்றிய அரசு பிடி வாதமாக மறுத்து விட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு உள்
இந்தநிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநி லங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 4.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு பெரு மளவு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வில்லை.
தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல் படுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும் ஒன்றிய, மாநில அரசுக்கிடையிலான செலவு பகிர்வு 60;40 சதவீதம் என்று கட்டாயமாக்கப்பட்டி ருப்பது பொருத்தமில்லை என்றும், மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை நியாயமாக பரிசீலிக்கும் வழக்கம் பிரதமர் மோடி க்கு ஒருபோதும் இருந்தது இல்லை. தமிழ்நாட் டின் நலன் பாதிக்கப்படும் போது வலுவாக போராடுவதற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான அரசு முன் வரவேண்டும்.
இந்தி, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு போன்ற பிரச்சனைகளில் வலுவான குரலை தமிழ்நாடு எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.
தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா, சட்டம் இருக்கிறதா, போலீஸ் இருக்கிறதா, காவல் நிலையங்கள் இருக்கிறதா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆளும் கட்சியாக வந்து விட்டோம், த.வெ.க.வினர் எத்தகைய அராஜகமும் செய்யலாம் என்று அக்கட்சியினர் நினைத்துக் கொண்டு விட்டார்கள். குற்றங்கள் அதிகமாகி விட்டன என்பதை விட, த.வெ.க.வினர் செய்யும் குற்றங்கள்தான் அதிகமாகி விட்டன என்றே சொல்ல வேண்டும்.
‘கில்லி’ சரத் என்று முன்பு அழைக்கப்பட்டவர், மாண்புமிகு சரத்குமாராக இப்போது இருக்கிறார். அவர் இழுப்பதற்கு முன் ‘பவுடர்’ தயாரித்த வீடியோக்கள் வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் தயாராக இல்லை.
தனது ரசிகை ஒருவரை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் தூண்டுதலின் பேரில் இரண்டு த.வெ.க. நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரப்பூர்வமாக அம்பலமான பிறகும் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் தயாராக இல்லை.இதுதான் சட்டம் ஒழுங்கை அவர் காக்கும் லட்சணம் ஆகும். அதனால்தான் த.வெ.க. நிர்வாகிகளின் ‘க்ரைம் ரேட்’ அதிகமாகி வருகிறது.
1. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே த.வெ.க.வைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு
இதில் சம்பந்தம் இருப்பதாக அந்தப் பெண் சொல்கிறார். அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களிடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார் அந்தப் பெண்.
தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது என்றும் சொல்கிறார் அந்தப் பெண்.
2. சென்னை காசிமேட்டில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆர்.கே. நகர் 43–ஆவது வார்டு த.வெ.க. பகுதி பொறுப்பாளர் ‘பாம்பு’ தினேஷ் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
3. தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த த.வெ.க. நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார்.
4. மதுரை கீழமாத்தூர் பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வரும் த.வெ.க. நிர்வாகி கண்ணன் 10–ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று பாலியல் தொல்லை கொடுத்தபோது கையும் களவுமாக சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
5. முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 25 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாகப் புதுக்கோட்டை மத்திய மாவட்ட த.வெ.க. செயற்குழு உறுப்பினர் சரவணன் கைதானார்.
6. கும்பகோணம் நாலுரோடு பகுதியில் சாலையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட த.வெ.க. பேனரை அகற்றக் கூறிய போக்குவரத்து காவலரைத் தாக்கி, அவரது கையை முறித்த த.வெ.க. தொண்டர்கள் அருண், காளி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், த.வெ.க. கிளைச் செயலாளர். இவரால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
8. நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் எம்.எல்.ஏ. திலீப் ஆய்வு செய்தபோது, உடன் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் சதீஸ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், ‘டிரான்ஸ்பர் செய்து விடுவேன்’ என மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9. பெருங்களத்தூரில், ஆப்ரேட்டர் துரை என்பவர், கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். த.வெ.க. கொடி அணிந்த வாகனத்தில் வந்த த.வெ.க. வட்டச்செயலாளர் ஜெய், ஒரு லட்சம் ரூபாய் கேட்டு அடாவடி செய்தார். தனது ஆதரவாளரிடம், ‘கத்தியை எடு’ என கூறிய த.வெ.க. நிர்வாகி ஜெய், ‘பொக்லைன்’ ஆப்பரேட்டரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்.
10. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வந்த முத்தம்மாளிடம் நகையை பறித்து கொலை செய்ததாக த.வெ.க. கிளை நிர்வாகி வாசுதேவனை போலீசார் கைது செய்தனர்.
11. வேலூர் மாவட்டம், கணியம்பாடியைச் சேர்ந்த த.வெ.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தங்கள் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குச் சென்று ஒரு லட்சம் மாமூல் கேட்டு மிரட்டினார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் மீதே வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
12. சென்னை அரும்பாக்கத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை த.வெ.க.வைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பல வருடங்களாக ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்திருக்கிறார். அதை அகற்றச் சொன்ன மாநகராட்சி அதிகாரிகளையும், கட்டுமான நிறுவன ஊழியரையும் தாக்கி இருக்கிறார் குணசேகரன். அவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
– தொடரும்

