அரசு ரகசியம் பாதுகாப்பு!

 🔹 தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டம். அணைகளில் நீர் இல்லாததால் மழை பெய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் பேச்சு.🔹 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் விபி ஜி ராம் ஜி திட்டம் இன்று முதல் அமல். திட்டத்திற்கான நிதியில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 ஏற்க வேண்டும்.🔹 திமுகவில் 10 பேர் கொண்ட மறு சீரமைப்பு ஆலோசனைக் குழு அமைப்பு. கிளைக்கழகத்தில் தொடங்கி கட்சி கட்டமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும்.🔹 இன்று நடக்கும் தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என இடதுசாரி கட்சிகள் முடிவு. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்.🔹 பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர். அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்படி வழங்கியதாக அறிக்கை வெளியிட்டதால் அதிர்ச்சி.🔹 தேர்தல் வாக்குறுதி படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வலுக்கும் போராட்டம். 🔹 வடலூரில் சாலையின் நடுவே பற்றி எரிந்த தனியார் பேருந்து. அருகில் இருந்த கடைகள், வாகனங்களுக்கும் பரவியதால் பல லட்ச ரூபாய் இழப்பு.🔹 மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி உயிரிழந்த விவகாரம். பெண் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதால் பதற்றம்.🔹 பண்ருட்டி அருகே சாலையில் மோதி கொண்ட இளைஞர்கள். வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது.🔹 நத்தம் அருகே தனியார் மதுபான பாருக்கு எதிராக மக்கள் போராட்டம். அரசு மருத்துவமனை அருகே உள்ள மதுக்கூடத்தை மூட வேண்டும் என வலியுற்றுத்தல்.🔹 சிவகாசி அருகே தனியார் நிறுவனத்தின் கிணறு தோண்டும் பணியால் வீடுகள் சேதம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நள்ளிரவில் சாலை மறியல்.🔹 மரக்காணம் அருகே போதையில் இளைஞர்கள் அட்டகாசம். சாலையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் மக்கள் அச்சம்.🔹 மகாராஷ்டிரா, குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள். மும்பை அந்தேரி சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தம்.🔹 இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு, வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு.🔹ஆந்திராவில் மலையில் இருந்து பறக்கப்போவதாக பள்ளத்தில் குதித்த கோயில் பூசாரி. பாறைகளில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்.🔹 ஹோர்முஸ் நீரிணையில் பழைய நிலைக்கு திரும்பிய கப்பல் போக்குவரத்து. 4 மாதங்களுக்கு பின் ஒரே நாளில் 76 கப்பல்கள் பயணம்.தடுத்து நிறுத்துக!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒரு தேசியப் பிரச்சனையாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. வேளாண் விளை பொருள்களுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்காதது, இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது, கடன் சுமை, வறட்சி போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு. 

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்து வந்துள்ளது.இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரம் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது. 

இந்தியாவில் ஆண்டுதோ றும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், நாளொன் றுக்கு சராசரியாக 35 மாணவர்கள் உயிரி ழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் மாண வர்களின் தற்கொலை விகிதம் 60 சதவீதத்திற் கும் மேல் அதிகரித்துள்ளது.

 ஒட்டுமொத்த தற் கொலைகளின் எண்ணிக்கையில் மாணவர்க ளின் தற்கொலை 7.6 சதவீதத்திலிருந்து 8.5 சத வீதம் வரை உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன.

இந்திய அளவில் மாணவர்கள் தற்கொலை யில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடி யாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மாணவர்களின் தற்கொலைக்கு தேர்வு முறையே முதல் காரணமாக உள்ளது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர் செய்தியாக உள்ளது. ஒவ்வோராண்டும் நீட் தேர்வின் போது நடை பெறும் மோசடி தொடர் கதையாகிறது.

ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் புதிய கல்விக் கொள்கை தேர்வு முறையை மேலும் சிக்கலாகவும், கடினமானதாகவும் மாற்றி யுள்ளது. இந்த முறை முழுமையாக நடை முறைப்படுத்தப்படும் போது, இந்தியாவின் எதிர்காலம் என்று கருதப்படுகிற மாணவர்க ளின் தற்கொலை விகிதம் மேலும் அதிக ரிக்கவே வாய்ப்பு உண்டு.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கூட சாதியப் பாகுபாடு அதிகரித்து வருகிறது. சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடை பெறுகிறது. 

கல்வி வளாகச் சூழல் இன்னமும் பாலின சமத்துவம் உள்ளதாக இல்லை. பாலி யல் பாரபட்சம் மற்றும் கொடுமைகளாலும் தற்கொலைகள் நிகழ்கின்றன. தாராளமய பொருளாதாரக் கொள்கை கல்வியையும் கடைச் சரக்காக மாற்றி வருகிறது.

 கல்வி என்பது அறிவு என்பது மாற்றப்பட்டு வியாபாரம் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது.

 மாணவர்களின் தற்கொ லையை முற்றாக தடுத்து நிறுத்தவும், விலை மதிப்பற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.

XWhatsApநடவடிக்கை தேவை அரசி​யலமைப்பு சட்​டத்தை மீறி, அரசுக்கு தொடர்​பில்​லாத நபர்​களை அரசு கூட்​டத்​தில் அனு​ம​தித்​த​தாக முதல்​வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி நேற்று புகார் மனு அளித்​தார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள விஜய், இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி ரகசியகாப்பு பிர​மாணம் எடுத்​துக் கொண்​ட​வர்.அமைச்​சரவை கூட்ட விவாதங்​கள் மற்​றும் அரசின் முக்​கிய கொள்கை முடிவு​களை ரகசி​ய​மாக பாது​காக்க வேண்​டியது அவரது கடமை.

ஆனால், ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த ஜான் ஆரோக்​கிய​சாமி மற்​றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனி நபர்​கள், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெறும் அமைச்​சரவை கூட்​டங்​கள், உயர்​மட்ட அரசு ஆய்​வுக் கூட்​டங்​கள் மற்​றும் ஆலோ​சனை​களில் தொடர்ந்து பங்​கேற்று வரு​கின்​றனர்.

மேலும், அரசு அதி​காரி​களுக்கு நேரடி​யாக உத்​தரவு பிறப்​பிப்​பது, கொள்கை முடிவு​களில் தலை​யிடு​வது போன்ற செயல்​களில் ஈடு​படு​கின்​றனர். 

இவர்​களுக்கு தலை​மைச் செயலக வளாகத்​துக்​குள் முதல்​வரின் அறைக்கு அரு​கிலேயே தனி அலு​வலக அறை​களும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​கள் இரு​வரும் அரசு ஊழியர்​களோ தமிழக அரசின் அலு​வல் விதி​களின்​படி அங்​கீகரிக்​கப்​பட்​ட​வர்​களோ அல்ல. அப்​படி​யிருக்​கும்​போது ரகசிய அரசு கோப்​பு​களை​யோ, அமைச்​சரவை ஆவணங்​களையோ பார்​வை​யிட இவர்​களுக்கு அனு​மதி வழங்​கி​யிருப்​பது அரசு ரகசிய காப்பு சட்​டத்தை மீறு​வ​தாகும்.

எனவே, இந்த விவ​காரத்​தில் பொது அதி​காரத்தை தவறாக பயன்​படுத்​துதல் உள்​ளிட்ட பிரிவு​களின்​கீழ் உடனடி​யாக முதல்​கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்​டும்.

தலை​மைச் செயல​கத்​தின் வரு​கைப்பதிவேடு​கள், சிசிடிவி காட்​சிகள் மற்​றும் கோப்பு நகர்வு பதிவேடு​களை ஆதா​ரங்​களாகக் கொண்​டு, முதல்​வர் விஜய் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட நபர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை