குதிரைகள் மிரட்சி?

🔹  நியாயமற்ற வகையில் ஊதியம் வழங்கப்படும் ஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊதியத்தை இறுதிசெய்யவும் கோரிக்கை.🔹  தவெக தோழமைக் கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என கூட்டத்தில் பேச்சு.🔹  இன்று தவெகவில் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை உள்ள இருவரான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் 15 பேரும் இணைய உள்ளதாக தகவல். 🔹  அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் பேசி இழுப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம். கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய கட்சிகளை சோஃபா கூட்டணிக்குள் நுழைக்க முயற்சிப்பதாகவும் காட்டம்.🔹  அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாம்பரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம். போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், வாகனத்தில் மேடை அமைத்து ஒலிப்பெருக்கி வைத்து முழக்கம்.🔹  நீட் குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தல்.🔹  தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தாதது ஏன். அரசியல் காரணங்களுக்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஆர்.இளங்கோ கண்டனம்.🔹  தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை. பருவமழை குறைவு, தீவன விலை உயர்வால் கால்நடைகள் வளர்ப்பில் சிக்கல்.🔹  வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல்லில் தேங்காய் விலை வீழ்ச்சி. பறித்த தேங்காயை மலைபோல் குவித்து வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை.🔹 நெல் உற்பத்தி குறைந்ததால் தஞ்சையில் அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம். சன்ன ரக அரிசியின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் தகவல்.🔹 கோவை அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல். வீட்டை சூறையாடி, பணம், நகையை திருடிச் சென்றதாகவும் புகார்.🔹 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் 17 உதவியாளர்கள் நியமனம் ரத்து. விதிகளை பின்பற்றி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவு.🔹 வட மாநிலங்களில் தீவிரமடையும் பருவமழை. தலைநகர் டெல்லி, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.🔹 மராட்டியத்தில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு.🔹 கனமழையால் அசாம் பிரம்மபுத்திரா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் அவதி.🔹 மேற்குவங்கத்தில் வாகன சோதனையில் சிக்கிய 24 கிலோ தங்கம். 7 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை.🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது முட்டை, கத்திரிக்காய் வீச்சு. திருடன் என்று பாஜகவினர் முழக்கம் எழுப்பியதாகவும் குற்றச்சாட்டு.பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு - 45 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

எம்எல்ஏ விடம் குதிரை பேரம்- ?

வெளியானது முதல் தகவல் அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்எல்ஏவிடம் மாற்றுக் கட்சியில் சேர்வதற்கு பேரம் பேசியதாக எழுந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரவோடு இரவாக அவசரமாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கருத்துக்கணிப்பு அமைப்பை நடத்தி வரும் திருநாவுக்கரசு ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் 'ஒரு நல்ல விஷயத்துக்காக உங்களிடம் பேசுகிறேன்.

இந்த ஆட்சி ரொம்ப நாள் நிலைக்காது. ஆனால் நீங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதே நேரம் நாங்கள் சொல்வதைக் கேட்டால் 35 கோடி வரை லாபம் கிடைக்கும். உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு நீங்கள் ஆதரவாக வாக்களித்தால் மட்டும் போதும்.

மற்றபடி நீங்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை' எனப் பேசியதாகவும், அதற்கு இளையராஜா பிடிகொடுக்காமல் பேசிய நிலையில் தொடர்ந்து திருநாவுக்கரசு போன் செய்து பேரம் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியே சொன்னால் வீட்டில் யாரும் உயிருடன் இருக்க முடியாது என திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகள் 

உட்பட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அசோக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஜோசப் விஜய் தனது ஆட்சியை தக்கவைக்க அதிமுக,வணிக,முஸ்லீம் லீக்,கம்யூனிஸ்கட்சிகளிடம் ஒவ்வரு கட்சி அலுவலகமாக சென்று சோபாக்கள் கொடுத்து ஆட்சிக்கு ஆதரவு கேட்டபோது நடந்தது என்ன?பேரம்தானே?

செந்தில் பாலாஜி மீது கரூர் படுகொலை காலம் முதலே முதல்வரான விஜய்க்கு இனம்புரியா பகைதானே?

பாட்டிலுக்கு பத்துரூபாய் எனப் பாடிய விஜய் ஆட்சியில் தற்போது பாட்டிலுக்கு முப்பது ரூபாய் அல்லவா?

சோபா கொண்டு சென்றதெல்லாம் பேரம்தானே?

ஆளுநர் வரை தி.மு.க,அதை இப்போது கொண்டு சென்றதால் தூயசக்தி மிரள்கிறது.மாமல்லபுரம் தோழமைக்கட்சிகள் கூட்டமே பைனல் செட்டிங்கிற்காகத்தானே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை