சமூக வலைதள ஆட்சி?
சட்ட சேவைகள் குழுத்தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா நியமனம்
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை; ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவிப்பு.
கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் பரபரப்பு; குரங்கு சரமாரி கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்: 3 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்பட்ட விவகாரம் பிரதமரின் பிரித்தாளும் கொள்கையின் விளைவு: ராகுல்காந்தி ஆவேசம்
தனியார் நர்சிங், பார்மசி கல்லூரிகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3.50 கோடி மோசடி செய்த அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்.
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 புத்த துறவிகள் பலி..
திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு
நீட் மறுதேர்விலும் தவறான கேள்விகள் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிப்பு
"சோசியல் மீடியாவை வைத்து ஆட்சி மாற்றமே பண்ணி இருக்கீங்க ; மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாத என்ன ?-பாமக அன்புமணி
பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்-உயர்நீதிமன்றம்.

ஆளுநரை ஆய்வு செய்யவிடாதீர்' மாநில உரிமைகள் இழக்காதீர்” -
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சியினர் இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், ‘'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த ஷோஃபா மாடல் அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார்.
ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டப்பேரவையில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்
பு தெரிவித்தோம்.
ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்குரைஞர் !.
தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பு தான் பேசிய ஒவ்வொரு மேடைகளிலும், ஏன் அண்மையில் சட்டப்பேரவையில் கூட ஊழலை ஒழிப்பேன் என்றும், லஞ்சம் யாரும் பெறக்கூடாது என்றும் வாய்க்கிழிய பேசினார்.
ஆனால் தங்கள் கட்சியில் பதவி வழங்குவதற்கே பல லட்சம் லஞ்சம் பெறுவதாக பாதிக்கப்பட்ட பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் தூய சக்தி விஜய்.
இப்படியான சூழலில் ரூ.5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.ஞானசௌந்தரி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து எம்.ஞானசௌந்தரி தாக்கல் செய்துள்ள மனு...
"அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பட்டியல் இனத்தை சேர்ந்த, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நான், தவெக மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால் விண்ணப்பம் செய்வதற்கான கெடு ஜூன் 29ஆம் தேதி மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகலிலேயே நியமன பட்டியல் என்று வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் விசாரித்தபோது அதுதான் இறுதி பட்டியல் என்று கூறியதால் நான் அதிர்ச்சியடைந்தேன்.
மேலும் ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ,30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
தவெக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளது.
மேலும் எனது கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கொள்கிறேன்." " என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து பேசும் விஜய், தனது கட்சிக்குள் இருக்கும் ஊழலை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்





