ஆட்டம் ஆரம்பம்...!
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்.
நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க செயல்படுவேன்.
தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன்.
ஆளுநரிடமும்எதிர்பார்ப்புஇருந்தால்அரசிடமும் மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார்.
மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் அர்லேகர், “துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது.
நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் எங்கே?
இளைஞர்கள் நதியை மீட்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து நலத்திட்டங்களையும் ஆய்வு செய்திருந்தார்.
இதையடுத்து நலத்திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்ததற்கு எதிர்க்கட்சி தி.முக கடும் கண்டனம் தெரிவித்தது.ஆனால் ஆளும் த.வெ.க. ஆளுநரை கண்டித்து வாயு திறக்கவில்லை.
ஆளுநர் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், மக்கள் தங்கள் பிரச்சனையை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கடந்த சில தினங்களாக த.வெ.க அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருப்பது தெரிகிறது."நாறப்போவது யாரு..?"
தவெக கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ என். இளையராஜா . கடந்த ஜூன் 29 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் அளித்த அதிரடிப் புகார் தான் இந்த வழக்கின் தொடக்கம் ஆகும்.
அவர் தனது புகாரில், தனியார் நிறுவனத்தின் தலைவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய திருநாவுக்கரசு என்பவர் தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக-விற்கு எதிராக (திமுக-விற்கு ஆதரவாக) திசைதிருப்ப தனக்கு ரூ. 35 கோடி ரொக்கம் தருவதாகப் பேரம் பேசப்பட்டதாக இளையராஜா அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த ரகசியப் பேரத்தை ஏற்க மறுத்ததால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ இளையராஜாவின் புகாரைத் தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினர் குற்றவியல் சதி, கொலை மிரட்டல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
காவல்துறையின் தனிப்படையினர் நடத்திய மின்னல் வேக வேட்டையில், இந்த குதிரை பேரத்தின் பின்னணியில் இருந்த இடைத்தரகர்களான திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
தவெக எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியைச் சரிப்பதற்காக இந்த குதிரை பேரக் குழுவினருக்கு மொத்தம் ரூ. 180 கோடி வரை ஒதுக்கப்பட்டிருந்தது தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கைதானவர்களில் முக்கிய நபரான நரேஷ் என்பவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் தான் இந்த வழக்கின் திசையை மாற்றியுள்ளது.
இந்த மாபெரும் ஆட்சிக்கவிழ்ப்பு சதித் திட்டம் முழுவதும் முன்னாள் திமுக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் நேரடி வழிகாட்டுதலின் பேரிலேயே அரங்கேறியது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் காரணமாக, இவ்வழக்கில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் தலைமறைவாக உள்ளதால், அவர்களைத் தேடி தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கரூரில் உள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்குச் சென்ற தனிப்படை போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் நகலை வழங்கியுள்ளனர்.
அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமல் இருக்கவே தற்போது லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கைது நடவடிக்கை மிகத் தீவிரமாகப் பாய்ந்து வருவதை உணர்ந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆர்.வி. அசோக் குமார், உடனடியாக உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் அவர், இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை. புகார்தாரரான இளையராஜாவை நான் பார்த்ததே இல்லை.
வரவிருக்கும் கரூரின் இடைத்தேர்தலை மனதில் வைத்து, அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்பிணை மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் இன்னும் பல முக்கியத் தகவல்களைச் சேகரிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 6) ஒத்திவைத்துள்ளார்.
இதனால் அசோக் குமாருக்கு எந்த நேரத்திலும் கைது பயம் நீடித்து வருகிறது.
ஆளும் தவெக அரசு இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டு, சதியில் தொடர்புடைய அனைவரையும் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது. மறுபுறம், திமுக தரப்போ இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஒவ்வொரு கட்சி அலுவலகத்திற்கும் விஜய் சொபாவுடன் அலைந்த்து எதற்காக?சிவி. சண்முகம்,காஜாமொய்தின்,வைகோ வீடுகளுக்கு ஆட்சியமைக்குமுன் சோபாவுடன் சென்றது குதிரை,கழுதை பேரமல்லாது எதற்காக என்ற கேள்விகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எழுப்புவோம்.
அதில் விஜய் குதிரைப்பேர உண்மைகள் வெளிவந்து நாறப்போகிறது த.வெ.க.அரசு நிலைமை என்கிறார்கள்.






