யோக்யதை சிறிதும் உண்டா

 




 த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி.வில்சன், தி.மு.க. சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். இதேபோல், அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி இன்பதுரை ஆகியோர் த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மனு அளித்தனர்.தி.மு.க. புகார்  

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க. வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர். 

ஆளுநரிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "த.வெ.க அரசு குதிரைபேரம் செய்து வருகிறது. இது தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் போலீசார் துன்புறுத்தியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது த.வெ.க அரசு. தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்ததில்லை.

 முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு தனி நபர்கள் உத்தரவு போடுகின்றனர்.
 
த.வெ.க குதிரை பேரம் செய்து வருவதாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். ரூ.50 கோடி தருவதாகக் கூறி வேப்பனஹள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசனிடமும் குதிரை பேரம் நடத்தியது த.வெ.க. நீங்கள் இளைஞர், த.வெ.க-வுக்கு வாருங்கள் என சீனிவாசனை அழைத்துள்ளனர். 

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தால் அமைச்சரவை தருவதாக கூறி இருக்கின்றனர். த.வெ.க-வில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் குதிரை பேரம் செய்கிறார்.

 இதுதொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார். 

அ.திமுக. மனு!

தொடர்ந்து, சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்து அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி இன்பதுரை ஆகியோர் புகார் மனு அளித்தனர். அதில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குதிரை பேரம் எனவும், இடைத்தேர்தலில் பதவி விலகியவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது த.வெ.க; தகுதி நீக்க மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரினோம். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் ஆளுநரை சந்தித்துள்ளோம்; ஆளுநரின் அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்" என்று தெரிவித்தார். 

அ.தி.மு.க எம்.பி-யும் வழக்கறிஞருமான இன்பதுரை பேசுகையில், "எங்களின் புகாரில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்; குதிரை பேரம் நடத்த விடமாட்டேன் என முன்பு ஆளுநர் கூறியிருந்தார்; இப்போது என்ன நடக்கிறது? தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து ஆளுநர் விளக்கம் கேட்க முடியும்; குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது" என்று தெரிவித்தார். 

பா.ஜ.க, மனு!

முன்னதாக, இன்று காலை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரைச் சந்தித்து  த.வெ.க அரசு குறித்து புகார் மனுவை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

🔴 திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன், எஸ்.ஆஸ்டின் மற்றும் ஐ.பரந்தாமன் ஆகியோர் இன்று தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். 
🔹 காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படுதல், காவலில் வைத்து வற்புறுத்தப்படுதல் மற்றும் கட்சி மாறத் தூண்டப்படுதல் போன்ற விவகாரங்கள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன
🔹மேலும், கட்சி மாறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வுகளில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பங்கேற்பது குறித்த கவலைகளும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
🔹ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாத்திட அரசியலமைப்பு ரீதியான உடனடித் தலையீடு, சுதந்திரமான விசாரணை மற்றும் தகுந்த நடவடிக்கை ஆகியவற்றை அவர்கள் வலியுறுத்தினர்-ஆளுநர் மாளிகை அறிக்கை.






விஜய் ஆசி பெற்ற விஜய் பாஸ்கர்கள் 
!

“அரசாங்கப் பணத்தை தொட மாட்டேன். தொட்டால் விட மாட் டேன். இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டேன்” என்பது ‘தூய சக்தி' விஜய்யின் பொய்வேட கப்சாக்களில் ஒன்றாகும்.

 அந்த தூய சக்தி, கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டு காலத்தில் செலவழித்த தொகை எவ்வளவு, அதைச் செலவு செய்தவர்கள் யார் என்பதைச் சொல்ல முன் வருவாரா?

விஜய்க்கு ஏற்கனவே 'வரி கட்டாத புலி' என்றுதான் பெயர். ‘புலி’ திரைப்படத்துக்காக பெற்ற வருமானத்தில், ரூ.15 கோடியைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததை வருமான வரித்துறை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. 

இந்த அப்பட்டமான வரி ஏய்ப்பிற்காக ரூ.1.5 கோடி அபராதம் (Penalty) விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தில் இருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் விஜய். 

கடந்த பிப்ரவரி 6 அன்று உயர் நீதிமன்றம் விஜய் மனுவைத் தள்ளுபடி செய்தது. 'வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான், அபராதத்தைச் செலுத்தியே தீர வேண்டும்' என்று அதிரடித் தீர்ப்பளித்தது.

ஏற்கனவே வெளிநாட்டு இறக்குமதி காருக்கு வரிக் கட்டாத வழக்கும் அவர் மீது உண்டு. "நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோக்களாக இருக்க வேண்டும், வரி ஏய்ப்பவர்களாக இருக்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியால் கண்டிக்கப்பட்ட தூயசக்திதான் விஜய்.

கடந்த நாற்பது நாட்களாக நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரத்துக்கு விலை என்ன என்பதை நாடு அறியும். இவை போதாது என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைத்து வருகிறார் 'துர்நாற்ற சக்தி' விஜய். 

அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டு த.வெ.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுகிறவர்கள் அனைவரும் துர்நாற்ற சக்திகள் தான் என்பதை மக்கள் அறிவார்கள்.

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!

விராலிமலை விஜயபாஸ்கருக்கு 'குட்கா விஜயபாஸ்கர்' என்று தான் பெயர்.

 சென்னையில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. 

குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. 

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. 

அதில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்கள் இருந்தன. விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது.

 அவரைத் தான் எம்.எல்.ஏ. பதவி விலக வைத்து த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.

விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!

டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். (2023 மே. 22) வழக்கு நடந்து கொண்டு இருக் கிறது. 

இவரைத் தான் சேர்த்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய். கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போலிப் பத்திரம் தயாரித்து போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்.

வேறு ஒருவருக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்துக்கு போலிப் பத்திரம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். இது தொடர்பாக குற்றச்சாட்டு பதிவானதும் கரூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டார் அவர்.

 நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே தலைமறைவு ஆனார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்து இழுத்து வந்தார்கள். 

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக வருமான வரித்துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.

இதெல்லாம் அவர் அரசியலுக்கு நுழைந்த காலத்தில், அமைச்சர் ஆவதற்கு முன்பு நடந்தது அல்ல. அமைச்சராக இருந்த பிறகு நடந்தவை ஆகும். 

2024 ஜூலை மாதத்தில் நடந்தவை ஆகும். இந்த யோக்கிய சிகாமணியையும் இணைத்துக் கொள்ள இருக்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.

முதலமைச்சர் விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை