அலப்பறைக் கழகம்,?

🔹 பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும், மும்பை, தானே நகரங்கள். சாலைகளை தண்ணீர் சூழ்ந்ததால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.🔹 கனமழையால் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து. குழந்தை உள்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு.🔹 வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 5 பேர் மீட்பு. 🔹 தமிழ்நாட்டில் ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம். எதிரி யார் என தெரிந்து விட்டதால், அடுத்த முறை விடமாட்டோம் என திட்டவட்டம்.🔹 மதுரையில் தவெக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்ட நெரிசல். பெண்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.🔹 திருவள்ளூர் அருகே நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அதிகரித்த பூச்சித் தொல்லை. விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் நடந்த பொதுக்கூட்டம்.🔹 மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கல்வெட்டில் இருந்த மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கம். பெயரை மீண்டும் பொறிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக நிர்வாகிகள் எச்சரிக்கை.🔹 பெரியபாளையத்தில் 3 வது நாளாக இன்றும் நடைபெறும் அமோனியா வாயு அகற்றும் பணி. ஆலை இருக்கும் பகுதியில் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி.🔹 மதுரை அருகே குப்பைக்கிடங்கில் பல மணி நேரமாக பற்றி எரியும் தீ. புகை பரவுவதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் அவதி.🔹 திருச்சி அருகே பட்டப்பகலில் போதைப்பொருள் பயன்படுத்தும் சிறுவர்கள். வீடியோ பரவும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.🔹 கன்னியாகுமரியில் விதிகளை மீறியதாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்ல தடை. மீன்வளத்துறையின் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் போராட்டம்.🔹 அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பங்கிடுவதில் சண்டை. செல்போன் உரையாடல்களின் மூலம் அம்பலம்.🔹 கர்நாடகாவில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து. முகப்பு விளக்கு எரியாததால் நடத்துநர் மேற்கொண்ட செயல் இணையத்தில் பரவல்.🔹 பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல். நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து பெங்களூரு வடிகால் வாரியம் அதிரடி.🔹 பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் மீண்டும் வெடித்த வன்முறை. மக்களின் போராட்டத்தில் பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழப்பு.🔹 ஈரானில் காமெனி உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள். ட்ரம்பை பழிவாங்கக் கோரி சிவப்புக் கொடியுடன் முழக்கம்.தறிகெட்டு அராஜகம்

செய்யும் த.வெ.க.வினர் - 2

13. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அடகுவைத்த 28 சவரன் நகையை திருப்பித் தராமல் கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் த.வெ.க. பிரமுகர் ஜெகதீசன் மீது புகார் தரப்பட்டுள்ளது. எஃப். ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.

14. மதுரை திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரின் உரிமையாளர் த.வெ.க.வைச் சேர்ந்தவர் என்பதே டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

15. நீலகிரி மாவட்ட த.வெ.க. பொறுப்பாளர் ரமேஷ், தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாகவும், வசூலித்த பணத்தை திருப்பித் தராமல் மிரட்டல் விடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.

16. திருச்செங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் த.வெ.க. நிர்வாகி நவீன். அவர் மீது புகார் தரப்பட்டுள்ளது.

17. மனமகிழ் மன்றங்களின் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு பணம் கேட்டு த.வெ.க.வினர் மிரட்டல் விடுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

18. விபத்தில் சிக்கிய கூலித் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரண நிதி பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சேலம் ராபின் என்பவர் மீது புகார் தரப்பட்டுள்ளது. புகாரை வாபஸ் வாங்கு என்று பெண் ஒருவரை மிரட்டியதாகவும் புகார் ஆகி இருக்கிறது.

19. ஆலந்தூரில் மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராக இருந்த பெண்ணுக்கு ஆலந்தூர் வடக்குப் பகுதி த.வெ.க. செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை உடனடியாக காவல் துறை கைது செய்யவில்லை. தலைமறைவான வேம்புலியை ஏழு நாட்கள் கழித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!

20. போலி ஜி.எஸ்.டி. எண்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்ததாக த.வெ.க. நிர்வாகி அருண் மீது ஈரோட்டில் புகார் பதிவாகி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் ஈரோடு எஸ்.பி. அலுவலக வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

21. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஏழாம் வகுப்பு மாணவி மீது பைக்கில் வேகமாக வந்த இருவர் மோதினார்கள். அதில் மாணவி உயிரிழந்துள்ளார். பைக்கில் வந்த இருவரும் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

22. திருவாரூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணிடம் திருத்துறைப்பூண்டி த.வெ.க. ஒன்றியச் செயலாளர் ஆனந்த் அத்துமீறியதாக புகார் ஆனது. ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு அசோக் என்பவரும் கைதாகி இருக்கிறார்.

23. செங்கல்பட்டில் அமைச்சர் சரத்குமார் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை த.வெ.க.வினர் தாக்கி செல்போன்களை பறித்துள்ளார்கள்.

24. சேலம் புதிய பேருந்துநிலைய நடைபாதையில் மாமூல் வசூலிக்கும் 45 ஆவது கோட்ட த.வெ.க. நிர்வாகி முரளியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

25. சைதாப்பேட்டை GEN Z கூட்டத்தில் பேசிய நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க. நிர்வாகிகள் குமாரவேல், ரவி மீது நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

26. ஆத்தூர் அருகே தம்பம்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்ததாக த.வெ.க. நிர்வாகி கார்த்தி கைதாகி இருக்கிறார். இவர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுடன் இருக்கும் படம் வெளியாகி இருக்கிறது.

“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!

27. சேலத்தில் பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாட்டியதும் த.வெ.க.வைச் சேர்ந்தவர் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் த.வெ.க. கட்சி சுவரொட்டிகளில் அவர் படம் பெரிதாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அவர் அக்கட்சிக்காகப் பணியாற்றி இருப்பது அம்பலம் ஆனது.

28. திருப்பூர் மாவட்டம் நொச்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷ் செபஸ்டியன், பெரியசாமி ஆகியோர் கைதானார்கள். இதில் பெரியசாமி த.வெ.க. உறுப்பினர்.

29. ரேசன் அரிசியைக் கடத்தி வந்து மக்களுக்கு நலத்திட்ட உதவி என்று கொடுத்துள்ளார் மதுரை த.வெ.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டி. இது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

30. கிருஷ்ணகிரி த.வெ.க. எம்.எல்.ஏ. முகுந்தனைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆய்வு என்ற பெயரால் மூன்றாந்தர மனிதர்களுடன் வந்து, தனக்கு தொடர்பு இல்லாத தளி, ஓசூர் தொகுதிகளிலும் அராஜகம் செய்வதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

31. கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் என்று சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியரை ஒருவர் தாக்கி இருக்கிறார். கேனில் பெட்ரோல் கேட்டுள்ளார் அந்த நபர். ஊழியர் தரவில்லை. ‘அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் நான். எனக்கே தரமாட்டாயா?’ என தாக்கி இருக்கிறார் அந்த நபர். பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32. த.வெ.க. ஆட்சியில் குட்கா பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனிடம் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் குணசேகரன் புகார் சொன்னார். அப்போது குட்கா வியாபாரிகளுக்கு ஆதரவாக திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

33. புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் உடன் பின்னால் காரில் வந்த த.வெ.கவினர், எதிரே வந்த காவல் ஆய்வாளர் காரில் மோதினார்கள். இதில் காவல் ஆய்வாளர் உஷா, ஓட்டுநர் சிவா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அமைச்சருடன் 5 கார்களில் வந்தவர்களால் இந்த விபத்து ஏற்பட்டது.

34. முன்னாள் ‘கில்லி’ சரத் – இந்நாள் மாண்புமிகு சரத்குமார், பவுடர் தயாரிக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவை வெளியிட்டதாக தனது பள்ளி நண்பர் சரண் ஜெயக்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ‘தனது வீட்டின் முன் கத்தியுடன் சிலர் நடமாடுகிறார்கள்’ என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார் சரண் ஜெயக்குமார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை