குதிரைப் பேர வேகம்!

 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்புஓசூர் ஜூஜூவாடி செக்போஸ்ட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.3.40 லட்சம் பறிமுதல்நுரை பொங்கி வழியும் கெலவரப்பள்ளி அணை பெங்களூருவிலிருந்து தென்பெண்ணையில் 1400 எம்எல்டி கழிவுநீர் வெளியேற்றம்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்களை தூக்கி ஆட்டத்தை தொடர்வார் விஜய்:   முன்னாள் அமைச்சர் உதயகுமார்.தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைதவெகவினருக்கு ஆர்வக்கோளாறு அமைச்சர்களுக்கு பக்குவம் வேணும்: கார்த்தி சிதம்பரம் அறிவுரை.பாட்டிலுக்கு ரூ.10 பிரச்னைக்கு தீர்வு காணவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு. பாரில் 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதித்தால் பார் அனுமதி ரத்து: அமைச்சர் விக்னேஷ் தனது கட்சியின் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.தொல்லியல் துறை இயக்குநராக ஜெயசீலன் நியமனம்.அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை சின்னம் விவகாரம் உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் பேசி தீர்க்க  நீதிமன்றம் உத்தரவுகரப்பான் பூச்சி கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கம் ரத்து: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு 38 தீவிரவாதிகளுக்கும் மரண தண்டனை உறுதி: குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்புபயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி விவசாயிகள் பேரணி: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெக அரசை கண்டித்து மறியல்.


குதிரைப் பேர வேகம்!
அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம். எல். ஏ. க்கள் பதவி விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரம் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டை முன்வைத்து திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்துள்ள நிலையில், தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆளுநர் ஆர். வி. அர்லேகர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள அதிமுக எம். எல். ஏ. க்கள் விலகல் மற்றும் ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டு விவகாரம், தற்போது ஆளுநர் மாளிகையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர். வி. அர்லேகர் விளக்கம் கேட்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம். எல். ஏ. க்கள் அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். 

இந்த நடவடிக்கை தன்னிச்சையானதல்ல; அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பேரம் மூலம் நடைபெற்றிருக்கலாம் என திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் சில வீடியோ ஆதாரங்களும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், ஆளுநர் அலுவலகம் கிடைத்துள்ள ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இணைந்த பின்னர் அளித்த பேட்டியில், மதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம். எல். ஏ. க்களை பதவி விலகுமாறு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டதாக வைகோ தெரிவித்திருந்தார். அந்த பேட்டியின்வீடியோ பதிவை எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் ஆதாரமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவும் மனுக்களுடன் இணைக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிப்பதிலும், அரசிடம் விளக்கங்கள் கோருவதிலும் ஆளுநர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் மனுக்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம்அதிகாரப்பூர்வமாக விளக்கம் கேட்க ஆளுநர் முடிவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், தமிழக அரசின் விளக்கம், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இந்த விவகாரத்தின் சட்டரீதியான முன்னேற்றம் ஆகியவை வரும் நாட்களில் முக்கிய அரசியல் விவாதமாக மாறும் என  கருதுகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை