யார் பிடித்தது ஓட்டம்?

🔹திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை. தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.🔹கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி. 31 பேருக்கு முறைகேடான நியமன ஆணைகளை வழங்கினார் விஜய்.🔹ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம், ஆந்திர மாநில அமைச்சருடன் பேச்சுவார்த்தை. ரீல்ஸ் மூலம் முதலீடு வந்துவிடுமா என தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி.🔹அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வலியுறுத்திய ஈரானின் கோரிக்கை ஏற்பதாக டிரம்ப் அறிவிப்பு. தற்சமயம் போரை தொடர்வதில் உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டம்.வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா - விஜய்

அந்த வலியோடும் வேதனையோடும் @TVKVijayHQ ஓடி ஒளிந்த காட்சி!







நாகரிகம்,நிதானம் தேவை!

ஊழல் விற்பனர்களை வைத்து ஊழல் ஒழிப்பா?

விஜயபாஸ்கர்களை மேடையில் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் முதலமைச்சர் விஜய் என்று கூறி உள்ள முன்னாள் அமைச்சர் சிவசங்கர், 

திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்றவரால், கரூருக்கு செல்ல முடியவில்லை; இடைத்தேர்தல் காரணமாகவே, இப்போது கரூருக்கு சென்றிருக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது;கரூர் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் விஜய் கரூர் சென்று உள்ளார்.கரூர் துயரம் நடந்த பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய் மகிழ்ச்சியாக இருந்தார். கரூர் சம்பவம் நடந்து 285 நாட்கள் கழித்து விஜய் கரூர் சென்றிருக்கிறார். இத்தனை நாளும் மன வலியோடுதான் இருந்தாரா விஜய்? 

கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் வரும் வரை காத்திருந்து உள்ளார். கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் விஜய்.

 ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கியிருப்பவர் கரூர் விஜயபாஸ்கர்.

கரூரில், நினைவு மண்பத்தில் விஜயின் முதுகே நினைவுச் சின்னமாக வைக்கப்பட வேண்டும். இன்று விஜய் கரூர் கூட்டத்துக்கு செய்த ஏற்பாட்டை அன்றே செய்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. 

முதலமைச்சர் என்பதை மறந்து காவல் துறையையே குற்றம் சாட்டுகிறார். எந்த கட்சி தலைவரும் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என கூறியவர் மு.க.ஸ்டாலின். 

தாங்கள் செய்த தவறை மறைத்துவிட்டு முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டுகிறார். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீர்கள் ஆனால், மனதில் வலி இருப்பதாக கூறுகிறீர்கள்.

தவெக அரசின் வழக்கறிஞர் நியமனம் சந்தி சிரிக்கிறது. ஊழலற்ற ஆட்சிக்கு அரசு வழக்கறிஞர் நியமனமே போதும். 

மின்சார பிரச்சனை தொடர்பாக, இன்று வரை போராட்டம் தொடர்கிறது. பேச வேண்டிய இடங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை, ஆனால் பொதுக் கூட்ட மேடைகளில் வீர வசனம் பேசுகிறார். 

விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும், நிதானத்துடன் பேச வேண்டும்.

 முதல்வர் விஜய்க்கு விடியலே பிடிக்காது என்பதால் மகளிர் விடியல் பயணத் திட்டப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வறு சிவசங்கர் கூற உள்ளார்.

_-----------------------------------------------------------

ஒருவனிடம் எவ்வளவு

திறமை இருந்தாலும்,

அவனிடம்

அகந்தையும் ஆணவமும்

இருந்து விட்டால், 

 அவனால் பயன் 

 ஏதும் இல்லை. 

                                                      -   கன்பூசியஸ்  

-----------------------------------------------------------

அடுத்தடுத்து.  சிக்குவோர்?

கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வம் தொடர்­பாக சி.பி.ஐ. வழக்கு,

வரு­மான வரி வழக்­கு­கள், செங்­கல்­பட்டு நீதி­மன்­றத்­தில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட மண­வி­லக்கு வழக்கு – என பல்­வேறு வழக்­கு­க­ளில் சிக்கி இருப்­ப­வர்­தான் இன்­றைய முத­ல­மைச்­சர் விஜய். அவ­ரைப் போலவே அவ­ரது அமைச்­சர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும்

அடுத்­த­டுத்து பல்­வேறு வழக்­கு­க­ளி­லும் புகார்­க­ளி­லும் சிக்கி வரு­கி­றார்­கள்.

* அமைச்­சர் புஸ்ஸி ஆனந்த் : கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் இவர். விஜய் வரும் நேரத்தை மாற்­றிச் சொல்லி

மக்­களை முன்­கூட்­டியே வர வைத்­த­வர் இவர்­தான். நிர்­வா­கி­கள் நிய­ம­னம், வேட்­பா­ளர் தேர்வு ஆகி­யவை குறித்து புகார் பெட்டி வைத்­தாலே போதும் ஆனந்த் மீது ஏரா­ள­மான புகார்­கள் குவி­யும். இந்த நிலை­மை­யில், ஐந்து லட்­சம் முதல் 30 லட்­சம் ரூபாய் வரை லஞ்­சம் பெற்­றுக்­கொண்டு, அரசு வழக்­க­றி­ஞர்­களை நிய­மிப்­ப­தாக அவர் மீது சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.விழுப்­பு­ரம் மாவட்­டம் சாலா­மேடு பகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரும், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் வழக்­க­றி­ஞர் அணி இணை செய­லா­ள­ரு­மான

எம்.ஞான­சௌந்­தரி தாக்­கல் செய்­துள்ள வழக்­கில், அரசு வழக்­க­றி­ஞர்

நிய­ம­னத்­துக்கு விண்­ணப்­பம் செய்­வ­தற்­கான கெடு ஜூன் 29ஆம் தேதி மாலை என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், அன்­றைய தினம் பிற்­ப­க­லி­லேயே நிய­மன பட்­டி­யல் என வாட்ஸ் அப்­பில் தக­வல் பர­வி­ய­தா­க­வும், இது­கு­றித்து மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் விசா­ரித்­த­போது அது­தான் இறுதி பட்­டி­யல் என கூறி­ய­தால் அதிர்ச்சி அடைந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

ஒரு அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­துக்கு 5 லட்­சம் ரூபாய் முதல் 30

லட்­சம் ரூபாய் வரை லஞ்­சம் பெற்­றுக்­கொண்டு, அரசு வழக்­க­றி­ஞர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர்; த.வெ.க. மாவட்­டச் செய­லா­ளர் மோகன்­ராஜ்

மற்­றும் மாவட்ட ஆட்­சி­யர் ஆகி­யோர் கூட்­டு­சேர்ந்­தும், த.வெ.க. பொதுச் செய­லா­ள­ரும், அமைச்­ச­ரு­மான புஸ்ஸி ஆனந்த் பரிந்­துரை அடிப்­ப­டை­ யி­லும், இந்த நிய­ம­னங்­கள் நடந்­துள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளார். இவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய பொறுப்பு முதல்­வர் விஜய்க்கு இருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.எனவே அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் தனக்கு வாய்ப்­ப­ளித்து நிய­ம­னங்­கள் மேற்­கொள்ள உத்­த­ர­வி­ட­வும், அது­வரை அறி­விப்­பா­ணைக்கு தடை­வி­திக்க வேண்­டும் என்­றும் கோரிக்கை வைத்­துள்­ளார். இதே மாதி­ரி­யான நிய­ம­னக் குற்­றச்­சாட்­டு­கள் வந்து கொண்டு இருக்­கின்­றன.

* அமைச்­சர் ஆதவ் அர்­ஜூனா: கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் பல நாட்­கள் தலை­ம­றை­வாக இருந்­த­வர் இவர். கரூர் வழக்கை இப்­போது சி.பி.ஐ. விசா­ரித்து வரு­கி­றது. த.வெ.க. ஆட்­சி­யில் குதிரை பேரம் நடப்­ப­தாக உச்­ச­நீ­தி­மன்­றம், உயர்­நீ­தி­மன்­றம், தேர்­தல் ஆணை­யம் ஆகிய இடங்­க­ளில் பல்­வேறு புகார் மனுக்­கள் பதி­வாகி வரு­கி­றது. 

இவை அனைத்­தி­லும் சிக்­கப் போகி­ற­வர் இவர்­தான். இவ­ரது மனைவி மீது லாட்­டரி தொடர்­பான வழக்­கு­கள் உள்­ளன.

* அமைச்­சர் நிர்­மல்­கு­மார்: கரூ­ரில் 41 பேர் பலி­யான சம்­ப­வத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் இவர். ‘கூட்­டம் அதி­க­மாக இருக்­கி­றது, விஜய் வரத் தாம­த­ மா­னால் அசம்­பா­வி­தம் நடக்­கும், எனவே அவரை சீக்­கி­ரம் வரச் சொல்­லுங்­கள்’ என்று காவல் துறை அதி­கா­ரி­கள் சொன்­னது இவ­ரி­டம்­தான். இது முதல் தக­வல் அறிக்­கை­யி­லேயே இருக்­கி­றது. குதிரை பேர வழக்­கு­க­ளி­லும் சிக்­கு­வார்.

* அமைச்­சர் மரிய வில்­சன்: நிதி அமைச்­ச­ரான இவர், கட்­டை­யைத் தூக்கி ஒரு குடும்­பத்­தைத் தாக்­கும் வீடியோ இணைய தளத்­தில் பரவி அனை­வ­ரும் பார்த்த காட்­சி­கள் ஆகும். 

மரிய வில்­ச­னுக்­கும் அவ­ரது அண்­ணன் மரிய குளோத்­துக்­கும் இடையே சொத்­துப் பிரச்­சினை இருந்­துள்­ளது. 8.8.2022 ஆம் நாள் புதுச்­சே­ரி­யில் உள்ள மரிய குளோத்­தின் வீட்­டுக்­குச் சென்று அவ­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கட்­டையை வைத்து தாக்கி இருக்­கி­றார் மரிய வில்­சன். கத­றக் கதற தாக்கி இருக்­கி­றார். வீட்­டில் இருந்த பொருட்­க­ளை­யும் அடித்து உடைத்­துள்­ளார்.

 கொலை மிரட்­டல் விடுத்­துள்­ளார். இது தொடர்­பாக லாஸ்­பேட்டை காவல் நிலை­யத்­தில் புகார் தரப்­பட்­டது. மரி­ய­வில்­சன், அவ­ரது அப்பா நெஸ்­தோஸ் ஆகி­யோர் மீது ஆறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்கு பதி­யப்­பட்­டுள்­ளது. மரி­ய­வில்­சன், கடந்த4 ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­திற்கு நேரில் சென்­றி­ருக்க வேண்­டும். ஆனால் போக­வில்லை. அவரை மீண்­டும் 10 ஆம் தேதி­யன்று வரச் சொல்லி இருக்­கி­றது நீதி­மன்­றம்.

* அமைச்­சர் சரத்­கு­மார்: பொது இடத்­தில் போதை மருந்­தைப் பயன்­ப­டுத்தி மாட்­டிக் கொண்­ட­வர் இவர். ‘குழந்­தைக்கு மாத்­தி­ரையை நசுக்­கிக்

கொடுத்­தேன்’ என்­பதை அந்­தக் குழந்தை கூட ஏற்­றுக் கொள்­ளாது. இது

மட்­டு­மல்ல, பல வீடி­யோக்­கள் வந்து கொண்டு இருக்­கி­றது. இந்த வீடி­யோக்­களை வெளி­யிட்­டார் என்று சொல்லி சில­ருக்கு கொலை மிரட்­டல் விடுத்த புகா­ரும் பதி­வாகி இருக்­கி­றது.

* அமைச்­சர் விஸ்­வ­நா­தன்: விஜய் பிறந்த நாளை முன்­னிட்டு மாரத்­தான் ஓட்­டம் நடை­பெற்­றுள்­ளது. அதில் ஓடிய மாண­வி­கள் காலை நீட்டி உட்­கார்ந்­தி­ருந்தபோது அரு­வெ­றுப்­பாக நடந்து கொண்­டுள்­ளார் உயர் கல்வி அமைச்­சர் விஸ்­வ­நா­தன். மாண­வி­க­ளது காலைத் தொட்­டும், அவர்­க­ளது விரல்­க­ளுக்கு சொடுக்கு எடுத்­தும் மிக மோச­மாக நடந்து கொண்­டார். இவை அனைத்­தும் போக்சோ சட்­டப்­படி குற்­றங்­கள் ஆகும்.

 இவர் மீது போக்சோ சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று குழந்­தை­கள் நல அமைப்­பு­கள் டெல்லி குழந்­தை­கள் ஆணை­யத்­துக்கு புகார் அனுப்பி இருக்­கின்­றன. ஆளு­ந­ரி­டம் பா.ஜ.க. நேர­டி­யாக புகார் தந்­துள்­ளது.

– இப்­படி லஞ்­சம், ஊழல், 41 பேர் மர­ணம், பாலி­யல், போக்சோ, போதை மருந்து, அடி­த­டி­கள், தாக்­கு­தல்­கள், குதிரை பேரம் இப்­படி தண்­ட­னைச் சட்­டத்­தின் அனைத்து பிரி­வு­க­ளி­லும் பல்­வேறு வழக்­கு­க­ளில் தூய­சக்தி அமைச்­சர்­கள் துர்­நாற்­றம் அடிக்­கும் வகை­யில் சிக்கி வரு­கி­றார்­கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை