தவெக குட்கா அருண்.!


"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று."

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.📃 சிவகங்கையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் சிக்கியது. மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 பேரைக் கைது செய்து விசாரணை.📃 தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுவதாக ஆளுநரைச் சந்தித்து மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியை குறிப்பிட்டு புகார்.📃 திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.📃 கர்நாடகா அரசின் அரசு மரியாதையோடு பழம்பெரும் பாடகி ஜானகி உடல் தகனம். 30 குண்டுகள் முழங்க பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.






 எழுத்தாளர் பூமணி காலமானார்.*

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம்.

கரிசல் மண் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர்.'பிறகு', 'வெக்கை', 'நைவேத்யம்', 'வரப்புகள்', 'வாய்க்கால்', 'அஞ்ஞாடி' உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றன.

'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் மக்கள் கவனம் பெற்றது.






போலிச் சான்றிதழ்

பீகார் மாநிலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2006 முதல் 2015 வரை நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குறிப்பாக, போலிச் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக போலிச் சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் மிதிலேஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

குட்கா த.வெ.க,அருண்..?

ஈரோடு மாவட்டம் பவானியில் குட்கா உடன் கையும் களவுமாக பிடிபட்ட தவெக நிர்வாகி அருண் என்பரை, இரவோடு இரவாக காவல் நிலைய பிணையில் போலீசார் விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2022ல் ஒன்றரை டன் குட்கா கடத்தியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் த.வெ.க வைச் சேர்ந்த அருண்.


குட்காவை கார்களில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்ததாக தவெக நிர்வாகி அருண், ராம்குமார் ஆகியோரை கைது செய்து 8 கிலோ குட்கா, 3 கார்கள், ரூ.25,000 பறிமுதல் செய்யப்பட்டன.


ஈரோடு மாவட்டம் பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் அருண். இவர் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் குட்கா போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 8 கிலோ குட்கா, 3 கார்கள் ரூ.25,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


குடோன் அமைத்து குட்கா பொருட்களை விநியோகம் செய்ததாக அருண் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.


இந்நிலையில் இரவோடு இரவாக போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் அருண்.


குண்டர் சட்டத்தில் கைதானவர் மீண்டும் குட்கா பொருட்களுடன் கைது செய்யப்பட்ட போதும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம் என தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் வாய் கிழிய பேசி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தவெக நிர்வாகி குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இரவோடு இரவாக விடுவிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை