தென்காசி பட்டணம்?
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கில் இருந்து தொடங்கி எழுதுவோம், வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசை திருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த் தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ செங்கல் படிக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழக தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள தற்போது பொருப்பேற்றுள்ள அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கன்னக்கோல்,
களவாணிதனங்கள் !
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டுக் களவாணிகள் என்று தரங்கெட்டுவிமர்சனம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
அவர் பயன்படுத்தும் சொற்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியுமா? அல்லது டயலாக் பேப்பரைப் போலவே புரியாமல் பேசுகிறாரா?
தேர்தலுக்கு முன்னதாகவே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் சில அல்லக்கைகளைப் பிடித்து தனக்கு ஆதரவாக மாற்றி வைத்திருந்தாரே விஜய், அதுதான் களவாணித்தனம்.
தேர்தல் முடிந்த நாளிலேயே அந்தப் பச்சோந்திகள் நிறம் மாறி, தங்கள் குணத்தை காட்டியதே அதற்குப் பெயர்தான் களவாணித்தனம்.
தி.மு.க. கூட்டணியில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகிய கட்சிகளோடு அறிவிக்கப்படாத பேச்சுவார்த்தையை விஜய் கட்சி நிர்வாகிகள் நடத்தினார்களே. இதுதான் களவாணித்தனம்.
அ.தி.மு.க.கூட்டணியில் நின்று வென்ற அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடத்தினார்களே. அதுதான் களவாணித்தனம் என்பது. அவரை முகத்தை மூடி அழைத்துச் சென்றதற்கு உண்மையான அர்த்தம்தான் களவாணித்தனம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப் பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்னதாகவே, ஆளுநருக்கு கொடுத்த கடிதத்தில் முஸ்லிம் லீக் ஆதரவு என்று விஜய் கட்சி சொன்னதே களவாணித்தனம்.
‘யார் யாரிடம் எல்லாம் பேசினார்கள், என்பதை நான் சொல்லவா?' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன போது, அவருக்கு எதிர் பதில் சொல்லாமல் இருக்கிறார்களே. அதுதான் களவாணித்தனம்.

அ.தி.மு.க. எம். எல்.ஏ. லீமா ரோஸ், 'அ.தி.மு.க. வும் விஜய் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்று சொன்னாரே. அதுதான் களவாணித்தனத்தின் உச்சம். மே 4 ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வந்தது. மே 5 ஆம் தேதி லீமா ரோஸ் இப்படி பேட்டி தந்தார்.
ஆட்சி அமைக்கும் வலிமை இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் ஆதரவைப் பெறுவதற்கும் விஜய் முயற்சி செய்கிறார் என்பதை வெளிப்படையாக உடைத்தவர் லீமா ரோஸ். 'லாட்டரி'களால் உருவாக்கப்பட்டதுதான் விஜய் கட்சி என்பது ஊருக்குத் தெரிந்த உண்மை ஆகும்.
களவாணித்தனத்தின் உச்சமாக அ.தி.மு.க.வின் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகத் துடித்தார் விஜய். அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை என்றதும்தான் அ.தி.மு.க.வை உடைக்கத் திட்டமிட்டார் விஜய்.
இதனை ‘கன்னக்கோல்' வைப்பது என்பார்கள். வீடுகளின் சுவர்களைத் துளையிட அல்லது சுரங்க வழி ஏற்படுத்த திருடர்கள் பயன்படுத்தும் சிறிய இரும்புக் கம்பியை பயன்படுத்துவார்கள். அந்த மாதிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கன்னக்கோல் வைத்தார் விஜய்.
அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை என்றதும்தான் அ.தி.மு.க.வை உடைக்கத் திட்டமிட்டார் விஜய். இதனை ‘கன்னக்கோல்' வைப்பது என்பார்கள். வீடுகளின் சுவர்களைத் துளையிட அல்லது சுரங்க வழி ஏற்படுத்த திருடர்கள் பயன்படுத்தும் சிறிய இரும்புக் கம்பியை பயன்படுத்துவார்கள். அந்த மாதிரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கன்னக்கோல் வைத்தார் விஜய்.
'8 பேருக்கு அமைச்சர் பதவி தருகிறேன்' என்றார். '10 பேருக்கு வாரியம் தருகிறேன்' என்றார்கள். இப்படித் திரட்டப்பட்டவர்கள்தான் அ.தி.மு.க.வின் 25 உறுப்பினர்கள். இவர்கள் வாக்களித்ததால்தான் விஜய் கட்சிக்கு 144 உறுப்பினர் ஆதரவு எனப் பதிவானது.
இது விஜய் நடத்திய கன்னக்கோல் களவாணித்தனத்தின் உச்சம். இத்தகையஎம்.எல்.ஏ. திருட்டைச் செய்தவர்தான் விஜய். இவருக்கு அ.தி.மு.க.வைபேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?
தன்னுடைய களவாணித்தனத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பயன்படுத்திய விஜய்க்கு எதைப் பற்றி பேசுவதற்கும் யோக்கியதை இல்லை.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களுக்குப் பதவி போய்விடும். அதிலும் அமைச்சர் பதவியை ஏற்றால் நிச்சயம் பதவி போய்விடும் என்பதால் அவர்களுக்கு நினைத்த மாதிரி பதவிகள் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கே வந்துவிட்டார்கள்.
இத்தோடு முடியவில்லை விஜய்யின் களவாணித்தனங்கள். அ.தி.மு.க. உறுப்பினர்களை ஒவ்வொருவராக பதவி விலக வைத்தார் விஜய். இதுவரை ஆறு பேர் விஜய்யால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவை அனைத்தும் அ.தி.மு.க.வுக்குள் கன்னக்கோல் வைத்து விஜய் செய்து வரும் செயல்கள்தான். இந்த ஆறு பேரும் விசிலில் நிற்பார்களாம். கண்ணை மூடித் திறப்பதற்குள் ஜெயித்துவிடுவார்களாம். விஜய் கட்சி நடத்தவில்லை. கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறார்.
தனது நாற்காலிக்கு உள்ளே வந்து முட்டுக் கொடுக்கும், வெளியில் நின்று முட்டுக் கொடுக்கும் கட்சிகளை விஜய் நம்பத் தயாராக இல்லை. 'தான் திருடி, பிறரை நம்பாள்' என்பது பழமொழி. அதனால் தான், இவர்கள் தயவு இல்லாமல் ஆட்சி நடத்துவதற்காக அ.தி.மு.க.வுக்குள் கன்னக்கோல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே வருகிறார்.
விஜய்யை நம்பி ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத் தரப்படப் போவதுமில்லை. 'இவை அனைத்தும் குதிரை பேரங்கள்' என்பதால் தேர்தல் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
களவாணித்தனத்தால் ஆட்சி நடத்தி, அதையே தொடர்ந்து வரும் விஜய், தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைக்கிறார்.!!
நீட் தேர்வு மோசடி உண்ணாவிரதம்!
தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் (NEET-UG) முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 17-வது நாளை எட்டியுள்ளது.
தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் போராடி வரும் சோனம் வாங்சுக், இதுவரை 8 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை இழந்துள்ளதாக மருத்துவக் குழுவினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடிகள் என அடுத்தடுத்து பல்வேறு மோசடிப் புகார்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனால் லட்சக்கணக்கான தகுதியான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்தத் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கையாக முன்வைத்து ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்புடன் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
கல்வி அமைச்சர் ராஜினாமா: நீட் தேர்வு விவகாரத்தில் முறையான பாதுகாப்பு வழங்கத் தவறிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
மாணவர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு: நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மறுதேர்வு மற்றும் சீர்திருத்தம்: பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நீதியான முறையில் தேர்வுப் பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
கடந்த 17 நாட்களாகத் தொடர்ந்து தண்ணீரை மட்டுமே அருந்தி உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
அவரது இரத்தச் சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் இரத்த அழுத்தம் (Blood Pressure) மிக அபாயகரமான அளவிற்குச் சரிந்துள்ளது.அவரது தற்போதைய எடை 8.2 கிலோ வரை குறைந்துள்ளதால், கடுமையான சோர்வு மற்றும் உறுப்புச் செயலிழப்பு அபாயம் இருப்பதாகக் கண்காணித்து வரும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், ஒன்றிய அரசு மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை தனது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
சோனம் வாங்சுக்கின் இந்த அறப்போராட்டம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், பாலிவுட் மூத்த நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, முன்னணி பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் ஆகியோர் நேரில் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி எம்பி புஷ்பேந்திர சரோஜ் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து மாணவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர், சோனம் வாங்சுக்கின் போராட்டம் ஏற்கனவே நாடெங்கும் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டதால், அவரது உயிரைக் காக்க உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.