தூயசக்தியின் கொத்தடிமைகள்..?

🔹கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு. ரிலையன்ஸ் குழுமத்தின் சர்வரில் இருந்து ரகசியத் தரவுகள் திருடப்பட்டதால் அதிர்ச்சி.🔹சுப்ரியா சாஹு, ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உயர்கல்வித் துறை செயலாளராக தீரஜ் குமார், வனத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம்.🔹 விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம். அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்பு. 🔹பாஜகவை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என மம்தா ஆவேசம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டியெழுப்ப உள்ளதாகவும் பேச்சு.*💥 பாராசிட்டமால் மருந்து; தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.*

குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே உள்ளது.

பாராசிட்டமால் 60 மி.லி கொண்ட மருந்தில் 10% அதாவது 6 மி.லி அளவில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது.

95% ஆல்கஹால் என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல், மக்களிடையே தவறான முறையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.









தூயசக்தியின் கொத்தடிமைகள்..?

சேலம் மாவட்­டம், ஆத்­தூர் நக­ராட்­சி­யில் தூய்­மைப் பணி­யா­ளர்­களை பணி­ய­மர்த்த ‘எஸ்.ஆர். என்­டர்­பி­ரை­சஸ்’ என்ற தனி­யார் நிறு­வ­னம், 100 ரூபாய் பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்து வாங்கி அவர்­களை நவீ­னக் கொத்­த­டி­மை­க­ளாக மாற்­றி­யுள்­ளது.


பணி­யா­ளர்­கள் அர­சின் எந்த சலு­கை­யை­யும் கேட்­கக்­கூ­டாது; இஎஸ்ஐ (ESI), பிஎஃப் (PF) போன்ற அடிப்­படை உரி­மை­க­ளைக் கோரக்­கூ­டாது எனப் பத்­தி­ரத்­தில் நிபந்­தனை விதிக்­கப்­ப­டு­கி­றது.


பணி நிரந்­த­ரம் கேட்டு எந்த சங்­க­மும் போராட்­டம் நடத்­தக்­கூ­டாது; மீறி­னால் நிர்­வா­கம் எடுக்­கும் முடி­விற்கு கட்­டுப்­பட்டு பணியை விட்டு விலக வேண்­டும் எனத் தொழி­லா­ளர்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளைப் பறிக்­கும் வகை­யில் ஒப்­பந்­தம் எழு­தப்­பட்­டுள்­ளது.

இந்த அரா­ஜக ஒப்­பந்­தம் மூலம் தொழி­லா­ளர்­களை அடி­மை­க­ளாக மாற்­றும் இந்­தச் செயல், தவெக ஆட்­சி­யில் நிர்­வா­கச் சீர்­கேட்­டின் உச்­ச­மா­கும்.


துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளின் உழைப்­பைச் சுரண்டி, அவர்­க­ளைப் போராட விடா­மல் தடுக்­கும் இந்­தத் தனி­யார் நிறு­வ­னத்­தின் அரா­ஜ­கத்தை, ‘தூய சக்தி’ என்று பேசும் தவெக அரசு ஏன் வேடிக்கை பார்க்­கி­றது?


கேமரா முன் வேஷம் போடும் அதி­கா­ரி­கள் மற்­றும் இந்த நிறு­வ­னத்­தின் மீது உட­ன­டி­யாக விசா­ரணை நடத்தி, தொழி­லா­ளர்­க­ளின் உரி­மையை மீட்­டெ­டுக்க வேண்­டும்!


ஜன­நா­யக நாட்­டில் தொழி­லா­ளர்­க­ளைப் பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்து வாங்கி அடி­மைப்­ப­டுத்­தும் இந்த அவ­லத்தை மக்­கள் ஒரு­போ­தும் அனு­ம­திக்க மாட்­டார்­கள்!


உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா அல்­லது இந்­தத் துரோ­கத்­தி ற்கு நீங்­க­ளும் உடந்­தையா?


தூயசக்தியின் துணை சக்திகள் இடதுசாரிகள்,விசிக போன்ற நசுகப்பட்டவர் நலவாதிகள் யாருக்கு,எங்கே முட்டுகொடுத்துக்கொண்டு வாய்பேசாநிலையில் இருக்கிறார்கள்?

"ஆதி­தி­ரா­வி­டர்" 

சொல்  அகற்ற

அவசரம் வேண்டாம்.

ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்லை சத்­தமே இல்­லா­மல் நீக்கி இருக்­கி­றது விஜய் அரசு. இதே செயல் தி.மு.க. ஆட்­சி­யில் நடந்­தி­ருந்­தால் நாடே ரண­க­ளம் ஆகி இருக்­கும்.

 விஜய் ஆட்­சி­யில் விஜய்­யைப் போலவே நிரந்­தர மவுன விர­தம்

இருக்­கி­றார்­கள் அவ­ரது கூட்­ட­ணி­யி­னர்.

பட்­டி­ய­லின சமூ­கத்­தைச் சேர்ந்த எட்­டுப் பேர் அமைச்­சர்­கள் ஆனது சாதனை அல்­லவா? என்று தனது தோளில் தானே தட்­டிக் கொள்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய். 

இந்த எட்­டுப் பேரும் பட்­டி­ய­லின சமு­தா­யத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றார்­கள்? என்­ப­தை­யும் அவர் சேர்த்­துச் சொல்லி இருக்க வேண்­டும்.

60 நாட்­க­ளுக்­குள் 8 ஆண­வக் கொலை­கள் நடந்­துள்­ள­தை­யும் சாத­னைப் பட்­டி­ய­லில் சேர்த்­துக் கொள்­ள­லாமா?

காலம் கால­மாக இருந்த ‘ஆதி­தி­ரா­வி­டர்’ அடை­யா­ளச் சொல்லை திட்­ட­மிட்டு நீக்­க­வேண்­டிய அவ­சி­யம் என்ன வந்­தது? நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்

ரவிக்­கு­மார், எழுத்­தா­ளர் ஆத­வன் தீட்­சண்யா, ஆய்­வா­ளர் கெள­தம சன்னா போன்­ற­வர்­கள் மட்­டுமே இதற்­கான எதிர்ப்பை பதிவு செய்­துள்­ளார்­கள்.

அமைச்­ச­ர­வை­யில் ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின் அமைச்­ச­ராக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யைச் சேர்ந்த வன்­னி­அ­ரசு அவர்­கள் அமைச்­ச­ராக இருக்­கும் போது இது நடந்­துள்­ளது. 

இதனை அவர் நியா­யப்­ப­டுத்­திப் பேசி­யும் இருக்­கி­றார்.

ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் துறை என்ற அமைச்­ச­கத்­தின் பெயர் சமூ­க­நீ­தித்­துறை என மாற்­றப்­பட்டு இருக்­கி­றது. ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­ யி­னர் நலத்­துறை என்­ப­தன் நோக்­கம் வேறு. 

அதனை சமூக நீதி என்ற சொல்­லுக்­குள் மட்­டும் அடக்கி விட­மு­டி­யாது. சமூக நீதித் துறை என்று சொல்­லி­விட்­டால் அத­னுள் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வரு­வார்­கள். மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வரு­வார்­கள். 

இதை எல்­லாம் விட்டு விட்டு ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் துறைக்கு மட்­டும் சமூ­க­நீ­தித் துறை என்று பெயர் சூட்டி ஆதி திரா­வி­டர் சொல்லை நீக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன?

1922 மார்ச் 20 அன்று ஆதி திரா­வி­டர் என்ற பெயர் மாற்­றத்­துக்­கான உத்­த­ரவு நீதிக்­கட்சி ஆட்­சி­யால் பிறப்­பிக்­கப்பட்­டது. 

அது­வரை தொழி­லா­ளர் நலத்­து­றைக்­குள் தான் ஆதி­தி­ரா­வி­டர் நல­னும் அடங்கி இருந்­தது. நீதிக்­கட்சி ஆட்­சி­யில்­தான் தொழி­லா­ளர் நலத்­து­றை­யில் இருந்து இது பிரிக்­கப்­பட்­டது.


1969 ஆம் ஆண்டு முதல்­மு­த­லில் முதல்­வர் ஆன கலை­ஞர் அவர்­கள் தான் ஆதி­தி­ரா­வி­டர் நலத்­து­றை­யை­யும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத் துறை­யை­யும் தனித்­து­றை­யாக உரு­வாக்­கி­னார்­கள். 

பிற்­ப­டுத்­தப் பட்­டோர் நல­னுக்­கான சட்­ட­நா­தன் ஆணை­யத்தை அமைத்­தார்­கள். அந்­தப் பரிந்­து­ரைப்­படி இட­ஒ­துக்­கீடு முறையை அமல்­ப­டுத்­தி­னார் முத­ல­மைச்­சர் கலை­ஞர்.

 இந்த வர­லாறு ஏதும் தெரி­யா­மல், அல்­லது இந்த வர­லாற்றை மறைக்­கும் வகை­யில், திரிக்­கும்

வகை­யில் ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல் நீக்­கப்­பட்­டுள்­ளது.

‘‘1922 ஆம் ஆண்டு சென்னை மாகா­ணத்தை ஆண்டு கொண்­டி­ருந்த நீதிக் கட்சி ஆட்­சி­யின்­போது ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் அன்­றைய தலை­வர் களா­யி­ருந்த பெருந்­த­லை­வர் எம்.சி.ராஜா, மாவீ­ரன் இரட்­டை­மலை

சீனி­ வா­சன் ஆகி­யோர் போரா­டிப் பெற்ற ‘சாதி கடந்த அடை­யா­ளம்’ அது. 

அதற்­கு­முன் ஆதி திரா­வி­டர் என்ற பெய­ரில் எந்­த­வொரு சாதி­யும் தமிழ்­நாட்­டில் இருந்­த­தில்லை.

20 ஆம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­யில் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளும் இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தம்மை அமைப்­பா­கத் திரட்­டிக்­கொண்டு செயல்­பட்­டுள்­ள­னர். 

அவ்­வாறு உரு­வான அமைப்­பு­க­ளில் புராண அடை­யா­ளமோ, மத அடை­யா­ளமோ அற்ற ஒரு ‘சம­யச் சார்­பற்ற’ (secular ) வகை­யி­ன­ மாக முன்­வைக்­கப்­பட்­டது ஆதி திரா­வி­டர் என்­பதே ஆகும். 

அதை முன்­வைத்த தலை­வர்­க­ளின் அர­சி­யல் முதிர்ச்­சி­யும், தொலை­நோக்­குப் பார்­வை­யும் போற்­று­த­லுக்­கு­ரி­யவை. 

அது இந்­தி­யா­வில் உள்ள ஒட்­டு­மொத்த எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்­க­ளுக்­கு­மான முன்­னு­தா­ர­ணம் ஆகும்.

ஆதி திரா­வி­டர் என்ற சாதி கடந்த சம­யச் சார்­பற்ற அடை­யா­ளத்தை கொச்­சை­ யா­கப் புரிந்து கொள்­ப­வர்­கள்­தாம் அதை மாற்ற வேண்­டும் எனக் கோரு­கி­றார்­கள். 

அந்­தக் கோரிக்­கையை இந்த அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருப்­பது வேதனை அளிக்­கி­றது” என்று ரவிக்­கு­மார் எம்.பி. எழுதி இருக்­கி­றார்.

திரா­வி­டம் என்­பது மொழிக் ­கு­டும்­பத்­துச் சொல்­லாக மட்­டுமே இருந்­து­வந்த நிலை­யில் அதனை அர­சி­யல் சொல்­லாக சமூ­கப் பயன்­பாட்­டுச் சொல்­லாக மாற்­றி­யது தலித் இயக்­கங்­களே!

இந்­தக் கருத்­தாக்­கத்­தின் முதற்­கட்ட மூன்று தத்­து­வா­சி­ரி­யர்களா­க­வும் செயற்­பாட்­டா­ளர்­க­ளா­க­வும் பண்­டி­தர் அயோத்தி தாசர் (1845--–1914),

இரட்­ட­மலை சீனி­வா­சன் (1859-–1945), எம்.சி.இராஜா (1883-–1947) ஆகிய

மூவ­ரை­யும் சொல்­ல­லாம்.

1892 இல் உரு­வான ஆதி­தி­ரா­விட ஜன­சபை என்ற அமைப்பு உரு­வா­னது. இதே காலக்­கட்­டத்­தில் ஜான்­ரத்­தி­னம் முயற்­சி­யால் ‘திரா­வி­டர் கழ­கம்’ என்ற அமைப்­பும் உரு­வா­னது.

1916 இல் உரு­வான ஆதி­தி­ரா­விட மகா­ஜ­ன­சபை, 1928 இல் உரு­வான அகில இந்­திய ஆதி­தி­ரா­விட மகா­ஜ­ன­சபை ஆகிய

மூன்­றும் மிக முக்­கி­ய­மான அமைப்­பு­கள்.

மிண்டோ மார்லி சீர்­தி­ருத்­தக் குழு­வுக்கு கொடுத்த வகுப்­பு­ரிமை விண்­ணப்­பத்­தில் சாதி இந்­துக்­கள் என்­பதை ஒரு பிரி­வா­க­வும் சாதி­யற்ற

திரா­வி­டர்­கள் தாழ்த்­தப்­பட்ட வகுப்­பி­னர் என்­பதை மற்­றொரு பிரி­வா­க­வும்

பகுத்­துக் காட்­டி­னார் அயோத்­தி­தா­சர். (1909)

பார்ப்­ப­ன­ரல்­லா­தார் அர­சி­யல் வெகு­வா­கப் பேசப்­ப­டத் தொடங்­கிய பிறகு ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்­லுக்கு அழுத்­தம் கொடுத்­தார் எம்.சி.இராஜா.

 ‘‘தமிழ் மாவட்­டங்­க­ளில் ஆதி­தி­ரா­வி­டர் என்­றும் தெலுங்கு மாவட்­டங்­க­ளில் ஆதி ஆந்­தி­ரர் என்­றும் இனி­மேல் அழைக்க வேண்­டும்” என்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் கொண்டு வந்­தார் எம்.சி.இராஜா (1922) நீதிக்­கட்­சி­யின் ஆட்­சி­யில்­தான்

ஆதி திரா­வி­டர் என்று அழைக்­கும் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1890களின் இறு­தி­யில் 1900 ஆண்­டு­க­ளில் தொடக்­கத்­தி­லேயே

‘திரா­வி­டன்’ என்­பது அர­சி­யல் சொல்­லாக, சமூ­கச் சொல்­லாக, இனச் சொல்­லாக அர­சி­யல், பண்­பாட்­டுத் தளத்­தில் விதைக்­கப்­பட்டு விட்­டது. அந்­தச் சொல்­தான் இப்­போது நீக்­கப்­பட்­டுள்­ளது.

ஆதி­தி­ரா­வி­டர் என்ற சொல்லை நீக்­கி­யதை ஆத­ரித்­தும் சிலர் பதி­விட்டுவரு­கி­றார்­கள். 

எனவே இதில் அனைத்து தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய நீண்ட விவா­தம் நடத்­தியே முடி­வெ­டுக்க வேண்­டும். 

அரசு அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை